privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசென்னையில் HRPC-யின் இலவச சட்ட உதவி முகாம்

சென்னையில் HRPC-யின் இலவச சட்ட உதவி முகாம்

-

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

வணக்கம்.

hrpc-legal-aid-camp-sliderஎமது அமைப்பான மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC) தமிழகம் தழுவிய அளவில் 16 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது.

சென்னையில்
மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பு.மா.இ.மு என்ற அமைப்புடன் இணைந்து ஆய்வு செய்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தோம். தொடர் போராட்டத்தின் விளைவாக, கடந்த 4 மாதங்களாக பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிவறை வசதி என அடிப்படை வசதிகளை அரசு செய்து வருகிறது.

எழும்பூரில்
ஷாஜி புருஷோத்தமன் என்ற பணக்கார முதலாளி குடித்துவிட்டு, தாறுமாறாக காரை ஓட்டி, சிறுமி மீது மோதியதால் ஏற்பட்ட மோசமான உடல்நிலை பாதிப்புக்கு வழக்கு தொடர்ந்து, ரூ. 5 லட்சம் மருத்துவச் செலவிற்கு பெற்றுத் தந்துள்ளோம். மேலும், உரிய இழப்பீடும் பெற்றுத்தர போராடி வருகிறோம்.

திருச்சியில்
ஜோசப் கண் மருத்துவமனை அலட்சியமாக செய்த கண் அறுவை சிகிச்சையினால், கண் இழந்த பலருக்கும் வழக்கு தொடுத்து இலட்சக் கணக்கில் உரிய இழப்பீடு பெற்றுத் தந்திருக்கிறோம்.

சிதம்பரம் நடராசன் கோயிலில்
தமிழில் பாடினால் தீட்டு என்ற இழிவிற்கு எதிராக நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடி தமிழில் வழிபடும் உரிமையையும் நிலைநாட்டியுள்ளோம்.

தனியார் பள்ளிகளில்
அநியாய கட்டணக் கொள்ளைக்கு எதிராக பல பள்ளிகளில் பெற்றோர்களை ஒன்றிணைத்துப் போராடியும், வழக்கு தொடுத்தும் அரசு நியமித்த கட்டணத்தை வாங்க வைத்திருக்கிறோம்.

இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட வரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் உண்டாக்கி வரும் பாதிப்புகளான…

ஆற்று மணலை – தாது மணலை சூறையாடும் மணல் மாஃபியாக்களை எதிர்த்தும்,
நாட்டின் இயற்கை வளங்களைச் சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்தும்,

தீண்டாமை வன்கொடுமைக்கு எதிராக

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டின் பொழுதும்,
தர்மபுரி நத்தம் காலனி எரிப்பின் பொழுதும்,
இளவரசன் படுகொலையின் போதும்

உண்மை அறியும் குழு அமைத்து, வழக்கு தொடுத்து, இழப்பீடு பெற்றுத் தந்தும்,

தாய்மொழியான தமிழ்வழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி மாநாடு, முற்றுகை போராட்டம் உயர்நீதி மன்ற வழக்கு எனவும்

கடந்த 16 ஆண்டுகளாக அதிகார வர்க்கத்தோடும், நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடி பல்வேறு அனுபவங்களைப் பெற்றுள்ளோம்.

மக்கள் பணியில் தொடர்ச்சியாக, தற்பொழுது

சாமான்ய மக்கள் தங்களுடைய உரிமைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளவும்,
அன்றாடம் சந்திக்கும் சட்டப் பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளும் வகையிலோ அல்லது எந்தெந்த பிரச்சினைகளுக்கு நீதிமன்றங்களை அணுகலாம் அல்லது அரசு அலுவலகங்களை அணுகலாம் என்று அறிந்து கொள்ளவும்,
திடீர் விபத்து நிகழும் பொழுது இழப்பீடு பெறுவது எப்படி எனவும்,
சிவில் வழக்குகள், பாலியல் குற்றங்கள், கிரிமினல் வழக்குகள், பொதுநல வழக்குகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற அனைத்து சட்ட ஆலோசனைகளையும் பெற்று

தங்கள் சட்டப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக இலவச சட்ட உதவி முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு இலவசமாக சட்ட ஆலோசனைகளைப் பெறுவதோடு, உழைத்து வாழும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் எங்களது செயல்பாட்டிலும் உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

HRPC-யின் இலவச சட்ட உதவி முகாம்

இடம் : கிராஸ்ரோடு பூங்கா, புதுவண்ணை, சென்னை – 81
நாள் : 01-03-2015 ஞாயிறு
நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்]

தகவல்
வழக்குரைஞர் மில்டன்
9094666320
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
50/103, முதல் தளம், ஆர்மீனியர் தெரு, உயர்நீதி மன்றம் எதிரில்,
பாரிமுனை, சென்னை – 600 001