அமித்ஷா குற்றமற்றவர் என விடுவித்த ‘நீதியரசர்’ சதாசிவத்துக்கு கேரள கவர்னர் பதவி, அமித்ஷா வழக்கில் நேர்மையாக செயல்பட்ட நீதியரசர் ஹர்கிஷன் லோயாவுக்கு மரணம்.

படம் : வேலன்

இணையுங்கள் :


1 மறுமொழி

  1. சதாசிவம் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது, அமித் ஷாவைக் குற்றமற்றவர் எனத் தீரப்பு எழுதவில்லை. சோராபுதின் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி போலிமோதல் கொலை வழக்கு தொடர்பாக அமித் ஷா மீதி சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையை ரத்து செய்து தீர்ப்பளித்து, அமித் ஷாவிற்கு “நீதி” வழங்கினார். அந்த நீதியின் weight-க்குத் தக்கபடி, “சுதந்திர” இந்தியாவின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு கவர்னர் பதவி என்ற சன்மானம் அளிக்கப்பட்டது. ஒருவேளை, சதாசிவம் தனது வானாளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமித் ஷாவை, சோராபுதின்-கவுசர் பீ-துளசிராம் பிரஜாபதி கொலை வழக்குகளிலிருந்து விடுதலை செய்திருந்தால், இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை அவருக்கு அளிக்க பார்ப்பன பாசிஸ்டுகள் தயங்கியிருக்கமாட்டார்கள். என்ன செய்வது, அந்த அரிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பு பார்ப்பன பாசிஸ்டுகளுக்குக் கிட்டவில்லை. சதாசிவத்திற்கும் அத்தகைய நல்வாய்ப்பு கைவரப் பெறவில்லை. வரலாறுதான் எத்தகைய இரக்கமற்றது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க