பாட்டாளி வர்க்க பேராசான் லெனின் அவர்களின் 149-வது பிறந்தநாள் விழாவை தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் கொண்டாடின.

தருமபுரியில்…

ருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பு.மா.இ.மு.வினரும்; விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டார வி.வி.மு.வினரும், காஞ்சிபுரம் மாவட்ட பு.மா.இ.மு. மற்றும் பு.ஜ.தொ.மு. அமைப்புகள் சார்பிலும் பொதுமக்கள் பங்கேற்புடன் பேரணியாகச் சென்றனர். பேரணியின் நிறைவில் நடத்தப்பட்ட தெருமுனைக்கூட்டங்களில் முன்னணியாளர்கள் உரையாற்றினர். சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

முன்னணியாளர்கள் தமது உரையில், “பா.ஜ.க. இந்துமதவெறியர்களால் திரிபுராவில் ஆசான் லெனின் சிலை உடைக்கப்பட்டது. இதன் மூலம் அவரை மறைத்துவிட முடியாது. ஆசான் லெனின் சிலையல்ல; கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் விடுதலைக்கான விஞ்ஞான தத்துவம். பேராசான் லெனின் உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவன். பின்தங்கிய நாடான ரசியாவில் மார்க்சிய தத்துவத்தை நாட்டு நிலைமைகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஆட்சி அதிகாரத்தை நிறுவியவர்.

பெண்கள் மீதான தாக்குதல், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை தீவிரமாகியுள்ள இன்றையச் சூழலில் அவரது தத்துவத்தை பயின்று, அவர் நடைமுறையில் சாதித்துக்காட்டிய மகத்தான சாதனைகளை நெஞ்சில் நிறுத்தி இற்றுப்போன அரசமைப்பைத் தகர்த்தெறிய, புதிய சமூகத்தைப் படைக்க அணிதிரள வேண்டுமென்று’’ அறைகூவல் விடுத்தனர்; உறுதியேற்றனர்.

தருமபுரி

திருவெண்ணெய் நல்லூர்

காஞ்சிபுரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க