அரசு பள்ளி : முதலில் வாத்தியாரைப் போடு ! மற்றதை அப்புறம் பேசு !

வாத்தியாரைப் போட வக்கில்லாத அரசு மாணவர்களுக்கு ஸ்மார்ட்கிளாஸ், நீட் பயிற்சி என வாய்ஜாலம் காட்டுகிறது. அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதை புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.

டிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலேயே மரத்தடியில்கூட வகுப்புகளை நடத்திவிட முடியும், பயிற்சிபெற்ற ஆசிரியர் இருந்தால். ஆனால், தமிழக அரசோ ஆசிரியர்களே இல்லாமல் வகுப்புகளை நடத்தும் சாதனையைச் செய்துவருகிறது. ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்றில்லாமல், மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய மேநிலை மற்றும் பத்தாம் வகுப்புகளும்கூட ஆசிரியரே இல்லாமல் நடத்தப்படுவதை தலித் விடுதலை இயக்கம், சமக்கல்வி இயக்கம் ஆகிய அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.

தலித் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் கருப்பையா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பள்ளிக் கல்வித்துறையிடமிருந்து பெற்ற அறிக்கையின்படி, 884 உயர்நிலைப் பள்ளிகளும், 34 மேநிலைப் பள்ளிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன.

தலைமை ஆசிரியர் நியமனம் தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, இந்தப் பணியிடங்களை நிரப்ப மறுத்து வருகிறது, தமிழக அரசு. எதிர்வரும் மாதங்களில் 425 தலைமை ஆசிரியர்கள் பணிஓய்வு பெற இருப்பதால், தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கும் உயர்நிலை/மேநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை விரைவிலேயே 1,500-ஐத் தொட்டுவிடும் எனக் கூறுகிறது, பள்ளிக்கல்வித்துறை அறிக்கை.

தலைமை ஆசிரியர் மட்டுமின்றி, மேநிலை வகுப்புகளில் வேதியியல் துறையில் 421, பொருளாதாரத் துறையில் 370, வணிகவியலில் 215, இயற்பியலில் 156, தமிழ் புலத்தில் 284, மற்ற துறைகளில் 194 என மொத்தமாக 1,640 பயிற்சிபெற்ற முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் நான்கு ஆண்டுகளாக காலியாக உள்ளன.

உயர்நிலைப் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அறிவியல் புலத்தில் 773, சமூகவியலில் 521, கணிதத்தில் 490, தமிழில் 349, ஆங்கிலத்தில் 272 உள்ளிட்டு 2,405 பயிற்சிபெற்ற ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. எதிர்வரும் மே மாதத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை 10,000-ஐத் தொடும்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, அரசு பழங்குடியின உறைவிடப் பள்ளி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் என ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளின் கீழ் இயக்கப்படுகின்றன. இவற்றுள் மேற்கண்ட காலிப் பணியிடங்கள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் மட்டுமே உள்ளன. மற்ற துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால், இந்த எண்ணிக்கை இன்னும் ஒரு மடங்கோ இரண்டு மடங்கோ அதிகமாக இருப்பது நிச்சயம்.

ஏழை-ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகள்தான் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து தமிழ்வழியில் படித்து வரும் நிலையில், ஆசிரியர்களை நியமிக்காமல் புறக்கணிப்பது அவர்களின் கல்வியுரிமையைப் பறிக்கும் சமூக அநீதி ஆகும். நவீன காலத்து மனுதர்மம் ஆகும்.

ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத அவலம். இன்னொருபுறமோ நீட் தேர்வுக்கு 412 பயிற்சி மையங்களை அமைத்தல், 3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் திறன் வகுப்புகளைத் தொடங்குதல், அடுத்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ.-க்கு இணையான புதிய பாடத்திட்டம் என அதிரடியான அறிவிப்புகள்.

”பில்டிங் ஸ்டிராங்கு, பேஸ்மெண்டு வீக்கு” என்ற வடிவேலுவின் நகைச்சுவையைத் தமிழக அரசின் இந்த பில்ட்-அப்புகள் நினைவுபடுத்துவதோடு, ஆசிரியரைப் போடக் கேட்டால், ”ஸ்மார்ட் கிளாஸ் அறிவிப்பை” வெளியிடும் எடப்பாடி அரசின் ‘அக்கறை’, ”ரொட்டி கிடைக்கவில்லையா, கேக் சாப்பிடுங்கள்” என எகத்தாளமாகக் கூறிய பிரெஞ்சு ராணியின் திமிரோடும் ஒத்துப் போகிறது.

ஆர்.ஆர்.டி.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க