ப்ரல்-22 பாட்டாளி வர்க்கப் பேராசான் லெனின் பிறந்த நாளை, புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயல்படும் தொழிற்பேட்டைப் பகுதியிலுள்ள தொழிற்சங்க அலுவலகத்தின் முன் முழக்கமிட்டு, பிரசுரங்கள் விநியோகித்து, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்  திருவிழாவாக கொண்டாடினர்.

பின்னர், அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாகப் புறப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கண்டமங்கலம், வில்லியனூர் என தொழிற்சாலைப் பகுதிகள், தொழிலாளர் குடியிருப்புக்கள், நகரப் பகுதிகளில் முழக்கமிட்டுச் சென்று வழி நெடுகிலும் உள்ள மக்களுக்கு லெனினைப் பற்றி விளக்கியும், அது தொடர்பான பிரசுரங்களை விநியோகித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

‘’தொழிலாளி வர்க்கம் தன் மீதான உழைப்பு சுரண்டலிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால், முதலாளித்துவம் ஒழிய வேண்டும். முதலாளித்துவத்தின் ஆன்மாவாக உள்ள மூலதனக் குவியல் ஒழிய வேண்டும். உழைப்பும், அதனால் கிடைக்கும் லாபமும் சமூகமயமாக்கப்பட வேண்டும் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிறுவினார் மாமேதை காரல் மார்க்ஸ்.

உலகை வியாக்கியானம் செய்யும் மற்ற தத்துவங்களைப் போன்றது அல்ல மார்க்சியம். அது உலகையே மாற்றுவதற்குரிய தத்துவம் என்பதை உழைக்கும் மக்களைப் பாட்டாளி வர்க்கமாக ஒன்று திரட்டி மாபெரும் ரசியப் புரட்சியின் மூலம் நடைமுறையில் சாதித்துக் காட்டினார் தோழர் லெனின். உழைப்புச் சுரண்டலை ஒழித்து, லாபத்தை சமூகமயமாக்கியதன் மூலம், அனைவருக்கும் எட்டு மணி நேர வேலை, அனைவருக்கும் கல்வி, மருத்துவம், சுகாதாரம், ஆண் பெண் சமத்துவம் உள்ளிட்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியது லெனின் தலைமையிலான சோசலிச ரசியா.

இன்று ஆட்குறைப்பு, வேலைபறிப்பு, வேலை நேரம் அதிகரிப்பு, கூலி குறைப்பு என உழைப்புச் சுரண்டல் பல்வேறு வடிவங்களில் நவீனமயமாக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் மீதான ஒடுக்குமுறைகளும் இன்று பல்கிப் பெருகி, வாழ்வதே பெரும் பாடாக உள்ளது. இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு, உழைப்புச் சுரண்டலிலிருந்து விடுபட வழிகாட்டிய ஆசானாக, தலைவனாக, தோழனாக லெனின் நமக்குத் தேவைப்படுகிறார்.

லெனின் தேவை, அவரது படங்களாக, உருவங்களாக, சிலைகளாக இருப்பதால் மட்டும் பூர்த்தியாகி விடுவதில்லை. சிந்தனையாக இருக்கும் போது, அது செயலாக மாறும் போது தான் பூர்த்தியடைகிறது.

லெனினைப் பற்று ! லெனினைப் போற்று ! சோசலிசமே மாற்று !’’ என லெனின் பிறந்தநாள் கொண்டாங்களின் வாயிலாகத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்தது, பு.ஜ.தொ.மு.

This slideshow requires JavaScript.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி
தொடர்புக்கு: 9597789801

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க