தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் அரச பயங்கரவாதம் – வீடியோ !
தூத்துக்குடி மாவட்டம் போலீசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என்று சென்னையில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அறிவித்த அடுத்த கணமே, தொலைக்காட்சிகளின் நேரலைகள் நிறுத்தப்பட்டன. சாட்சியங்களின்றி போலீசு தமது வெறியாட்டத்தைத் தொடர்ந்த நிலையில், கையிலிருக்கும் கைபேசிகளையே ஆதாரமாகக் கொண்டு, போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து சமூகவலைத்தளங்களில் மக்கள் பலரும் பகிர்ந்தனர். எந்நேரமும் எதுவும் நடக்கலாம்; போலீசின் குண்டுக்குத் தானும் இரையாகநேரிடும் என்ற யதார்த்த சூழலுக்கு மத்தியிலிருந்துதான், இத்தகைய வீடியோக்களை களத்தில் எடுத்தனர் பல இளைஞர்கள். அவற்றையும் தூத்துக்குடி களத்திலிருந்த எமது செய்தியாளர்கள் அனுப்பியிருந்த வீடியோக்களையும் இங்கே தொகுத்தளித்திருக்கிறோம். பாருங்கள், பகிருங்கள்.!
22 மே 2018 நடக்கவிருந்த முற்றுகைப் போராட்டத்தின் முன்னணியாளர்களை மே 21 அன்றே கைது செய்யவும், மிரட்டவும் தொடங்கியது போலீசு. அது குறித்து வழக்கறிஞர் அரிராகவன் பேட்டி !
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக 21-5-2018 அன்று தோழர் கோவன் பாடிய பாடல் – “லட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !! – கோவன் பாடல்”
22 மே, 2018, போலீசின் பல்வேறு தடைகளையும் தகர்த்தெறிந்து கிளம்பியது மக்கள் பேரணி ! ஸ்டெர்லைட்டை மூடு! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! போராட்டக் காட்சிகள் -1
ஸ்டெர்லைட்டை மூடு! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! போராட்டக் காட்சிகள் – 2
ஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு ! போராட்டக் காட்சிகள் – 3
தூத்துக்குடியில் மே 22 நடந்த துப்பாக்கிச்சூடு பற்றி தோழர் தங்கபாண்டியனிடம் தோழர் மருதையன் நடத்திய செல்பேசி நேர்காணல்.
22.5.2018 அன்று நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசு மக்கள் மீது தூப்பாக்கிச் சூடு நடத்திய போது ”ஒருத்தனாவது சாவணும் ” என போலீசு பேசிய வீடியோ !
தூத்துக்குடி அண்ணாநகரில் 23-05-18 அன்று மதியம், போலீசு வெறிநாய்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் எனும் 22 வயது இளைஞர் கொல்லப்பட்டார். அரசின் பயங்கரவாதம் தொடர்கிறது!
தூத்துக்குடியில் கடந்த 22.05-2018 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குள் மக்களை நுழைய விடாமல் தடுத்து விரட்டுகிறது போலீசு. அச்சமயத்தில் அங்கு வந்த கமலஹாசனுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அங்கு குழுமியிருக்கும் போலீசு கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசு கும்பல் அவர்கள் மீது தடியடி நடத்தி துரத்தியுள்ளது
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் போலீசை வழிமறித்து நாட்டுப்படகை நிறுத்தும் மக்கள். நாட்டுப் படகுக்கு போலீசு கிரிமினல்கள் தீ வைத்துக் கொளுத்தும் காட்சி !
தூத்துக்குடியில் திரேஸ்புரத்தில் இருபத்திரண்டு வயதான காளியப்பனை போலீசு கொன்ற காட்சி
தூத்துக்குடியில் போலீசு நடத்தி வரும் கலவரத்தில் போலீசிடமிருந்து தப்பி ஓடிய இளைஞர்கள் புகுந்த ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அவர்களை அடித்து இழுத்துச் சென்றது போலீசு. அங்கு இருந்த அவ்வீட்டுக் குழந்தைகளை எட்டி உதைத்திருக்கிறது போலீசு கிரிமினல் கும்பல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்!
100 இளைஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அவர்களின் கதி என்ன? தூத்துக்குடியில் நடப்பது என்ன? இன்னும் பல்வேறு அதிர்ச்சிகரமான விசயங்களை விளக்குகிறார், வாஞ்சிநாதன்.
தூத்துக்குடியில் போலீசின் துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து புது தில்லி ஜே.என்.யு.வில் மாணவர்களும் ஜனநாயக சக்திகளும் இணைந்து 23.05.2018 அன்று நடத்திய ஆர்ப்பாட்டம் பற்றிய காட்சிப் பதிவு.