மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடத்தியது  போலீசு !
2 நாட்களாகியும் எந்த தகவலும் இல்லை.

உசிலை
1.கோட்டையன்  வ / 40 , த / பெ சின்னன்
கோவில்பட்டி
2.சரவணன் வ , 32 த / பெ பண்டாரம்
ஆலங்குளம்பாப்பாக்குடி காவல் நிலையம்
3.முருகன் வ / 40, த /  பெ செல்லத்துரை
திருநெல்வேலி காவல் நிலையம்
4.கலியலூர் ரஹ்மான் வ / 50, த / பெ கலீல்
5.முகமது அனஸ் வ/ 20 , த / பெ கலியலூர் ரஹ்மான்
6.முகமது இர்ஷத் வ /18 , த / பெ கலியலூர் ரஹ்மான்

இவர்களை 25-ஆம்தேதி நள்ளிரவில் வீடு புகுந்து போலீசு இழுத்துச் சென்றது. கைது செய்யும் போலீசார் எந்த காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் என்பதையோ, என்ன வழக்கிற்காக கைது செய்கிறார்கள் என்பதையோ, எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதையோ குடும்பத்தினருக்கு தெரிவிக்கவோ இல்லை.

உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரித்த போது தமக்கு ஏதும் தெரியாது என்று கை விரிக்கின்றனர். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் கொத்து கொத்தாக மக்களை கொன்று, வன்முறை தீ வைப்பை நடத்திவிட்டு தங்களது குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்கு எமது அமைப்புக்கு எதிராக பொய்களையும், புனை சுருட்டுக்களையும் உளவுத்துறை பரப்பி வருகிறது.

கைது செய்யப்பட்டால் முறையாக தகவல் தெரிவிக்க  வேண்டும் என்பதும் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதும் சட்ட நடமுறையாகும். கடந்த 48 மணி நேரமாக இவர்களை காணவில்லை என்பதால் இந்த தோழர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறோம்.

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை ஆதரிக்கின்ற அனைவரும் மக்கள் அதிகாரம் அமைப்புக்கும், எமது தோழர்களுக்கும் எதிராக போலீசு தொடுத்திருக்கும் இந்த தாக்குதலுக்கு எதிராகவும், இவர்களை விடுவிக்க கோரியும்  குரல்கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம். இந்த 6 தோழர்களின் கடத்தலுக்கு எதிராக நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய இருக்கிறோம்.

தங்கள்
வழக்கறிஞர்.சி.ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

 

3 மறுமொழிகள்

  1. நீங்க அதாங்க மக்கள அதிகாரம் வேறு கலக காரர்கள் தான்…. இன்னும் புரட்சியாளர்கள் ஆக வில்லை என்ற உண்மை இந்த ஆள் கடத்தல் விசயத்தில் , எதிர் வினை ஆற்ற இயலாத மக்கள அதிகாரத்தின் ஆளுமையில இருந்து வெளிபடுகிறது… போராட்ட வடிவங்களில் மாற்றம் தேவை….

  2. தோழர்களுக்கு என்னாச்சு.ஆட்கொணர்வு மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா ?
    எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் ஏதாவது தகவல் உண்டா ?

    • நம் செய்தி வந்த உடனே அவர்கள் அந்தந்த பகுதி சிறைகளில் ரிமாண்ட் செய்யப்பட்ட செய்தியை காவல் துறை வெளியிட்டது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க