தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜுவிடம் நக்கீரன் இதழ் நடத்திய நேர்காணல் வீடியோ.
- யார் சமூக விரோதி?
பத்தாம் வகுப்பு மாணவியின் வாயில் சுட்டான் பாருங்க அவன்தான் சமூக விரோதி.
இந்த போலீஸ்தான் சமூக விரோதி. - எந்த அமைப்பைச் சார்ந்தவங்க, எந்த வேனுக்குத் தீவைச்சாங்க… காட்டு நீ…
எந்த அமைப்பைச் சேர்ந்தவங்க கலெக்டர் ஆபீச அடிச்சி உடைச்சாங்க காட்டு நீ…
ஆனா நீ செஞ்சதெல்லாம் வெளியில வந்துருக்குல்ல… - எப்படி டி.ஜி.பி.யும் முதல்வரும் சுட்டது தெரியாது… நாங்க உத்தரவு கொடுக்கலனு எப்படி சொல்ல முடியும்?
ஒரு டி.ஜி.பி.க்குத் தெரியாம தூத்துக்குடில 13 பேர சுட்ருவாங்களா? - தூத்துக்குடி எஸ்.பி. மேல 13 கொலை வழக்கு போடனும்… சாதாரண ஜனங்க மேல ஒரு எப்.ஐ.ஆர். இருந்தா கூட வேலை தர மாட்டேங்கிரல்ல… வயித்துப் பொழப்புக்கு வெளிநாடு போயி பொழக்க முடியலைல்ல.. தூத்துக்குடி எஸ்.பி.யை வேலையை விட்டுத் தூக்கு… தற்காப்புக்குத்தான் சுட்டேனு கோர்ட்ல நிரூபிச்சுட்டு வரட்டும்…
- வானத்தப் பார்த்து சுடுறான்.. பூமியைப் பாத்து சுடறான்.. இதெல்லாம் என்ன பேச்சுங்க இது? சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற? சொந்த மாவட்ட மக்கள் அவன் கோரிக்கைகாகப் போராடுறான் இங்க துப்பாக்கிக்கு என்ன வேலை?
- மக்கள் இனி எந்தப் போராட்டத்துக்கும் முன்வரக்கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட படுகொலை இது. இது அரச பயங்கரவாதம்.
(நன்றி: நக்கீரன்)
உங்களை போன்ற சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற.