ஹைட்ரோகார்பன் ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் !

மிழகத்தில் தொடர்ந்து பேரச்சமாக நிலைகொண்டிருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் குறித்த அறிவியலாளர்கள் மற்றும் சூழியலாளர்களின் கட்டுரைகளைத் தாங்கியிருக்கிறது, இப்புத்தகம். ஹைட்ரோகார்பன்கள் என்றால் என்ன என்ற அறிமுகத்திலிருந்து அவற்றை எடுக்கும் முறைகள் அதனால் ஏற்படும் சூழியல் மற்றும் உடல்நலப் பாதிப்புகளையும் இத்திட்டம் யாருக்கானது  என்பதன் அரசியலையும் எளிமையாக விளக்க முயல்கிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய நம் காவிரி டெல்டாப் பகுதியின் மீதும், அருகேயுள்ள புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மீதும் இந்திய ஆளும் வர்க்கம் கண் வைத்துவிட்டது.

முதலில் நரிமணம், அடியக்கமங்கலம், பாணன்குடி, கமலாபுரம், நன்னிலம் போன்ற இடங்களில் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கால்பதித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டிலேயே கோட்டைக்காடு என்கிற இடத்தில் பரீட்சார்த்த எண்ணெய்க்கிணறுகள் தோண்டப்பட்டன. அடுத்து 1998ஆம் ஆண்டு வாணக்கன்காடு என்ற இடத்திலும், 2002 ஆம் ஆண்டு வடகாடு, புள்ளான்விடுதி போன்ற இடங்களிலும் தோண்டப்பட்டன.

பூமிக்குள் 600 முதல் 1500 அடிவரை உள்ள நிலக்கரிப்படுகையில், உருவாகி வெளியேற முடியாமல் பிணைந்திருக்கும் இயற்கை எரிவாயு நிலக்கரிப் படுகை மீத்தேன் என்று அழைக்கப்படுகிறது. பூமிக்குள் எரிவாயுக் குழாயைச் செருகி, நிலக்கரி படுகையை அழுத்திக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான லிட்டர் நீரை வெளியேற்றி, இந்த மீத்தேனை குழாய் வழியாக எடுக்கலாம். இங்கும் 40% இடங்களில் நீரியல் உடைப்பு முறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

முதலில், பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு நீரியல் விரிசல் முறை என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.

அடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய் மற்றும் 22 பில்லியன் கனமீட்டர் எரிவாயுவைத் தோண்டியெடுக்கும் ஒப்பந்தங்களை அரசு வடிவமைத்திருக்கிறது.

நாடெங்கும் நடக்கும் வளக்கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தாமல் விட்டால், காவிரி டெல்டா முதல் கன்னியாகுமரிமுனை வரை எந்த மூலையையும் விட்டுவைக்க மாட்டார்கள். (நூலிலிருந்து)

நூல்: ஹைட்ரோகார்பன் ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் !

பதிப்பகம்: பூவுலகின் நண்பர்கள், ஜி1, எண்:73, சாய்லஷ்மி அபார்ட்மெண்ட்ஸ், 2வது பிரதான சாலை, குமரன் நகர், சின்மயா நகர், கோயம்பேடு, சென்னை – 92.
பேச: 9094990900

பக்கங்கள்: 48
விலை: ரூ.40.00

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

  • வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க