கோயம்பேடு சிறு வியாபாரிகளின் நிலை என்ன ? | காணொலி

கோயம்பேடு மீண்டும் திறக்கப்பட்டும் அல்லலுறும் சிறுவியாபாரிகள் பற்றிய நேர்காணல் காணொலி. பாருங்கள் ! பகிருங்கள் !

கொரோனா பிரச்சினையை ஒட்டி கடந்த மே மாதம் 4-ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதன் காரணமாக பெரிய, சிறு, குறு வியாபாரிகள் மட்டுமல்லாமல் இதனைச் சார்ந்து இருந்த கூலித் தொழிலாளர்கள், இழுவண்டி தொழிலாளர்கள் என அனைவரும் வருமானமின்றி போகும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த திருமழிசையில் பெரு வியாபாரிகளுக்கு மட்டும் கடைகளை ஏற்பாடு செய்து கொடுத்தது எடப்பாடி அரசு. இதனால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட சிறுவியாபாரிகளுக்கு, மீண்டும் கோயம்பேடு திறக்கப்படும் என்ற செய்தி சிறிதளவு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த நம்பிக்கையை வெடி வைத்துத் தகர்க்கும் விதமாக 2400, 1200 மற்றும் 600 சதுர அடி கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறது எடப்பாடி அரசு. 300, 150 சதுர அடி கடைகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

கோயம்பேடு மார்க்கெட்டால் நேரடியாக பயன்பெறும் கூலித் தொழிலாளர்கள் மட்டுமே சுமார் 20,000 பேர் இருக்கும் நிலையில் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குள்ளாகி இருக்கிறது.  இது குறித்து கோயம்பேடு சிறு வியாபாரிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் கருத்து என்ன ?

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க