தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்தது போலீசு. மேலும் துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர், அந்த மக்களுக்காக  சட்டரீதியில் உதவி புரிந்த பல்வேறு ஜனநாயக சக்திகளையும், வழக்கறிஞர்களையும் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளது போலீசு.

தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினரின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது பல்வேறு பொய் வழக்குகளை புனைந்து அவரைக் கைது செய்துள்ளது போலீசு. இது போக மக்கள் அதிகாரம் தோழர்கள் அறுவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு சிறை வைத்துள்ளது. தூத்துக்குடி வட்டாரத்தில் இன்றும் இளைஞர்களை கைது செய்வதும், வீடு புகுந்து மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த அராஜகங்களைக் கண்டித்து ”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மதுரை, கே.கே. நகரில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

பாருங்கள், பகிருங்கள்!