மாமேதை காரல் மார்க்ஸ் 200 -வது பிறந்தநாள் கருத்தரங்கம் தஞ்சையில் இன்று (30.06.2018) மாலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாள்: 30.06.2018 சனிக்கிழமை, மாலை 6.30 மணி
இடம் : பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்

சிறப்புரை:
தோழர் தியாகு
, ஆசிரியர், தமிழ்த்தேசம்.
தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலர், ம.க.இ.க.

கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்காக அணு உலைகள், மீத்தேன் – ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், ஸ்டெர்லைட் ஆலை, பசுமை வழிச்சாலை, கெயில் குழாய் பதிப்பு, கோவையில் தண்ணீர் விநியோகம் சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைப்பு என மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கத் துணிந்து விட்டன மத்திய மாநில அரசுகள்.

இதனை எதிர்த்துக் கேட்பவர்கள், தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர். போராடும் மக்களோடு உடன் நிற்பவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. இது யாருக்கான அரசு? என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் குடைந்து கொண்டிருக்கிறது.

இதற்கான விடையை 150 ஆண்டுகளுக்கு முன்னரே உரக்கச் சொன்ன மாமேதை மார்க்ஸ். அப்படி என்ன சொன்னார் மார்க்ஸ் ?

காத்திருங்கள் ! மாலை 6:30 மணிக்கு தஞ்சையில் தொடங்கவிருக்கும் கருத்தரங்கம், வினவு இணையதளத்திலும், ”வினவின் பக்கம்” முகநூல் பக்கத்திலும், வினவு யூடியூப் சேனலிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது !

இணைந்திருங்கள்!

பாருங்கள் ! பகிருங்கள் !

யூடியூபில் மூன்று பாகங்கள்

ஃபேஸ்புக் வீடியோ

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க