மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்புபத்திரிகையாளர் சந்திப்பு

02-07-2018

பெறுநர்,
ஆசிரியர் / நிர்வாகி அவர்கள்,
பத்திரிக்கை / தொலைக்காட்சி ஊடகம்

அன்புடையீர் வணக்கம்,

# மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது தூத்துக்குடி மீனவப் பிரதிநிதிகள் சொல்லும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

# துப்பாக்கிச்சூடு படுகொலை – தேசிய பாதுகாப்புச் சட்டம் – நூற்றுக்கணக்கான வழக்குகள் – கைது – சிறை!

# தூத்துக்குடி மாடல் போலீசு அடக்குமுறை!

இவைகள் குறித்து 03-07-2018, செவ்வாய்க்கிழமை, காலை 12:30 மணியளவில் சென்னை, சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த உள்ளோம். தங்கள் நிருபரையும், தொலைக்காட்சி ஊடகத்தினரையும் அனுப்பி செய்தி வெளியிடுமாறு கோருகிறோம்!

இவண்,
சி. வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்
9176801656

தகவல்:
மக்கள் அதிகாரம்,
சென்னை

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு வினவு இணையதளத்திலும், வினவு ஃபேஸ்புக் பக்கத்திலும், வினவு யூடியூப் சேனலிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும். பாருங்கள், பகிருங்கள்.

 

5 மறுமொழிகள்

  1. இன்னும் இந்த வினவு மக்கள் அதிகார கூட்டத்திற்கு ரத்த வெறி அடங்கவில்லை, தூத்துக்குடியில் 13 பேரை கொன்று விட்டு இப்போது சேலம் மக்களை குறி வைக்கிறார்கள் போல. இந்த பயங்கரவாதிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இல்லையென்றால் தமிழகத்தை நாசம் செய்து விடுவார்கள்.

    • போதையில் உள்ளீர்களா மணிகண்டன்? சீக்கிரம் போதை தெளிந்து உங்களுக்கு நல்ல புத்தி வரவேண்மென்று அந்த சபரிமலை சாஸ்தாவை வேண்டிக்கொள்கிறேன்!

  2. மக்கள் அதிகாரம் அமைப்பினரால் ஒரு பெருங்கூட்டத்தை மூளை சலவை செய்ய முடியும் எனில் , இனி தமிழகத்துக்கு நல்ல நேரம் தான்.

  3. தூத்துக்குடியில் போராடும் மக்களும் அமைப்புகளும் வினவுவையும் மக்கள் கலை பண்பாட்டு கழகத்தினரையும் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

  4. சில தினங்களுக்கு முன் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தூத்துக்குடி தண்ணீரை அரசு நிறுவனமான’கிங்ஸ் இன்ஸ்டூட்டில் ஆய்வு செய்ததில் அந்த தண்ணீர் எதர்க்குமே பயன்படுத்த தகுதி அற்றது என அறிக்கை வெளியிட்டார் இதுவும் பத்திரிகைகளில் செய்தியாக வந்தது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க