21.07.2022

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக
நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா?

போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து !
போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு !

பத்திரிகையாளர் சந்திப்பு

இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம்
நாள் : 22.07.2022 – வெள்ளிக்கிழமை
நேரம் : 12 மணி

கள்ளக்குறிச்சி மாவட்டம்  சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் இறந்து போனார். அவருடைய மர்ம மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்ற ஒரு சாதாரண கோரிக்கையைக்கூட உடனே நிறைவேற்றாத  தமிழக அரசின் செயல்பாடே அங்கே அசம்பாவிதம் ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம்.ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நியாயத்தை மறுத்துவிட்டு ஏற்பட்ட வன்முறையை மட்டுமே காரணம் காட்டி தமிழகம் முழுவதும் பலரை கைது செய்து சித்திரவதை செய்தது  எடப்பாடி அரசு.

அதைப்போலவே கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த சிறுமியின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய மக்களின் நியாயத்தை மறுக்கும் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு,  இறந்த  மாணவியுடைய தாயாரின் வீடியோவை  யார் பகிர்ந்தார்களோ,  அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று கூறினார்களோ, போராடினார்களோ  அவர்களை தேடுதல் வேட்டை மூலம் கைது செய்து கொண்டே இருக்கிறது.தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளின் வாசலில் போலீஸ் குவிக்கப்படுகிறது.

போராடுவதற்கும் கருத்து கூறுவதற்கும்  உள்ள அடிப்படை உரிமையை மறுத்து தமிழ்நாடு அரசும் போலீசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மக்களுக்கு ஆதரவாக போராட வேண்டும் என்று கருத்து தெரிவித்தவர்களை எல்லாம் தேடித்தேடி கைது செய்கிறது.

இதை கண்டிக்கும் விதமாகவும்  போராடிய மக்களை உடனே விடுவிக்க வேண்டும், அவர்கள் மீதான வழக்கை கைவிட வேண்டும், தமிழ்நாடு அரசுக்கு கட்டுப்படாமல் கடந்த திங்கள் அன்று விடுமுறை அளித்த 987 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போலீஸ் ராஜ்ஜியத்தை உடனே நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 22.07.2022 வெள்ளிக்கிழமை 12 மணி அளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. ஊடகவியலாளரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இச்செய்தியை தங்கள் ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளவர்கள் :

♦ தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம்
♦ பேராசிரியர் மார்க்ஸ், தேசியத் தலைவர், NCHRO
♦ பேராசிரியர் சங்கரலிங்கம்,PUCL-TN, மாநிலத் தலைவர்
♦ தோழர் லெனின் பாரதி, திரைப்பட இயக்குனர்
♦ சு.கோபால்,  CPDR-TN, பொதுச் செயலாளர்
♦ வழக்கறிஞர் ஜீவா CPCL-TN, சென்னை மாவட்ட பொறுப்பாளர்
♦ தோழர் ராஜா, தமிழ்த்தேச மக்கள் முன்னணி


தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை,
99623 66321.

4 மறுமொழிகள்

 1. கள்ளக்குறிச்சி பள்ளி ஓனர் RSS அமைப்பை சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக, மதம் பார்த்து போராடும் மிக மிக கேவலமான போலி போராளிகள் நீங்கள்.

  இதில் நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் என்ற போலித்தனம் வேறு..

  • வாய்யா யோக்கியா! மதச் சிறுபான்மையினரை தேடித் தேடி படுகொலை செய்யும் யோக்கிய சிகாமணியே! யாருக்குத் தெரியும் இந்தப் பள்ளி முதலாளி rss அம்பி என்று? இறந்து போன மாணவியின் நியாயத்தைப் பேச துப்புக்கெட்ட கொலைகார கும்பல் மக்களின் நியாயமான கோபத்தைக் கண்டு, வழமையான பாணியில் திசை திருப்பும் திருப்பணியை செய்கிறது! மக்களின் நியாயம் எப்பக்கம் இருக்கும் என்பதற்கு இந்தப் போராட்டமும் ஒரு சாட்சி! கபர்தார்!

   • பள்ளியிடம் நடத்திய பேரம் படியவில்லை என்பதாலும் பள்ளியில் தாளாளர் RSS அமைப்பை சேர்ந்தவர் என்ற காரணத்தினாலும் நீங்களும் சில அரசியல் கட்சிகளும் சேர்ந்து நடத்திய வன்முறை வெறியாட்டம் இது, அதுவும் பசுவை சீய் நீங்கள் மனிதர்கள் என்று தவறி கூட சொல்லாதீர்கள்.

   • ஒரு சிறுமி மதமாற்ற கூட்டத்தினரின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து இருக்கிறார், நடந்த இந்த அநீதியை நீங்கள் எல்லோரும் சேர்ந்து மூடி மறைத்து இருக்கிறீர்கள்.

    இன்னொரு சிறுமி எதற்காக இறந்தார் என்ற காரணமே இன்னும் தெரியவில்லை ஆனால் அதற்குள் அந்த பள்ளியை நாசம் செய்து இருக்கிறீர்கள்.

    கேட்டால் போராளிகள் என்று வேறு சொல்லி கொள்கிறீர்கள், நீங்கள் போராளிகள் இல்லை நாலாம் தர மனித தன்மை சிறிதும் இல்லாத வன்முறையாளர்கள் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

    மதம் பார்த்து போராடும் போலிகள் நீங்கள்
    மதம் மாற்ற கைக்கூலிகள் நீங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க