கருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது ?

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் காது கேளாத, வாய் பேச இயலாத 12 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்த 60 முதல் 25 வயது வரை அடங்கிய 17 பேர் கயவர் கூட்டம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பாலியல் வன்முறையின் ஊற்று மூலம் எது?

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் காது கேளாத, வாய் பேச இயலாத 12 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்த 60 முதல் 25 வயது வரை அடங்கிய 17 பேர் கயவர் கூட்டம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சமூகவலைத்தளங்களில் அவர்களை உடன் தூக்கிலிட வேண்டுமென்று பலரும் கோபத்தோடு எழுதி வருகின்றனர். ஒரு சிறுமியை வன்புணர வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு எப்படி வந்தது?

இணையம் வந்த பிறகு போர்னா என்பது பலருக்கும் மலிவாக கிடைக்கிறது. பிக்பாஸ் சீசன் 2 முதல் தமிழ்ப் படங்களின் “ஐட்டம் சாங்” வரை பெண்ணுடலை நுகரவேண்டும் என்ற வெறி திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. குடும்ப வன்முறைகளை “கள்ளக் காதல்” செய்திகளாவும், சொல்வதெல்லாம் உண்மை வழியான கிசுகிசு அரிப்புக்களாகவும் ஊடகங்கள் மக்களை பயிற்றுவிக்கின்றன. போலீசு முதல் தனியார் நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் வரை ‘பணிந்து’ போகும் பெண்களுக்கே வாய்ப்புகள் என்பது எழுதப்படாத விதியாக வதைத்து வருகின்றன.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், துணை வேந்தர்கள், இன்னபிற ‘தாத்தாக்களுக்கு’ மாணவிகளை பலியாக்க முயன்றார் நிர்மலா தேவி! இந்த அறுபது வயது பெரிய மனிதர்களுக்கும் அயனாவரம் வயதான செக்கியூரிட்டிகளுக்கும் என்ன வேறுபாடு?

நமது சமூக அமைப்புகளில் பல மட்டங்களில் பாலியல் வன்முறை என்பது அதிகாரப்பூர்வமாகவும் அதிகாரப்பூர்வமற்றும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பாலியல் வன்புணர்ச்சிகளின் மூலகாரணம் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது?

சினிமா மற்றும் ஃபோர்னோ
ஆணாதிக்க வெறி
உலகமயம் பரப்பும் நுகர்வு வெறி
மேற்கண்ட மூன்றும்
நீதித்துறையின் தோல்வி

டிவிட்டரில வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

1 மறுமொழி

  1. மகாத்மா காந்தி எழுதிய Self control and self indulgence என்ற புத்தகத்தை படித்துபாருங்கள். ரஷ்ய மானுடவியல் அறிஞா் Pitrim A Sorokin -SANE SEX ORDER என்ற இரு புத்தகங்களும் இதற்கான தீா்வை அளிக்கும்.இரானை மறந்து விட்டோம்.காமனை கை கொண்டோம். விளைவு விபரீதமாகிபோய்க் கொண்டிருக்கின்றது. வீதியெங்கும் திரைப்படங்களிலும் காடசிகளிலும் ஆண்கள் முறையாக உடை அணிந்து காட்சி தருகின்றார்கள். பெண்கள் ஏன் முக்கால் முன்று வீசம் திறந்து போட்டு விட்டு வருகின்றார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க