என்.எஸ்.ஏ தகர்ந்தது ! வழக்கறிஞர் அரிராகவன் விடுதலை !

ன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அரிராகவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் 20-ம் தேதியன்று தொடங்கி 26-ம் தேதி இறுதி செய்ததாக கூறினார்.

23-ம் தேதி உயர் நீதி மன்றம் அவருக்கு எல்லா வழக்குகளிலும் பிணை வழங்கியிருப்பது உங்களுக்குத் தெரியாதா? போலீசார் சொல்வதை அப்படியே கேட்பதுதான் மாவட்ட ஆட்சியரின் பொறுப்பா? அரிராகவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைத்தால் அவர் குறைந்த பட்சம் நான்கைந்து மாதங்களாவது சிறையில் இருந்திருக்க வேண்டும். அவருடைய உரிமை பறிக்கப்படுவதற்கும், இந்த பாதிப்புக்கும் யார் பொறுப்பேற்பது? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இனி பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை கூறியது.

பின்னர் அரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது.

இன்னும் பல தூத்துக்குடி மக்கள் பொய் வழக்குகளில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  புதிது புதிதாக கைது செய்யப்படுகிறார்கள். அனைவரையும் விடுவிப்பதற்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என தூத்துக்குடி மக்களுக்கு உறுதியளிக்கிறோம்.

இந்த வழக்குகள் அனைத்திலும் எவ்வித கட்டணமும் பெற்றுக்  கொள்ளாமல், கடுமையாகப் பாடுபட்ட வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும் எமது நன்றியை உரித்தாக்குகிறோம்.

– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

6 மறுமொழிகள்

  1. இந்த மகத்தான வெற்றிக்கு வாழ்த்துக்கள்.போராடும் மக்களையும் அமைக்களையும் அரசு மற்றும் அதன் பல எடுபிடி அடிமை ஊடகங்களும் உண்மையை திரித்து கேவலமான முறையில் நடந்து கொண்ட இழிவான செயலை இனியாவது திருத்திக்கொள்வார்களா? குறிப்பாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தூத்துக்குடியை சேர்ந்த ஒரு சிலர் கொடுத்த போலிப் புகாரை எந்தவித ஆராய்ச்சியும் இன்றி அரைப்பக்கத்திற்க்கு செய்தியாக வெளியிட்ட “தமிழ் இந்து” போன்ற ஊடகங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
    மேலும் போராடும் அனைத்து மக்களுக்கும் இந்த வெற்றி அசாத்திய தைரியத்தையும் துணிச்சலையும் தரும்.உங்கள் பணி மேலும் மேலும் பெருக வாழ்த்துக்கள் 🌴🍟🙏

  2. மாபெரும் போராட்ட அனுபவத்தை கொடுத்த தூத்துக்குகுடி மக்களுக்கு வாழ்த்துகள் !

  3. நீதிமன்றங்கள் சமூகவிரோதிகளுக்கு சலுகை காட்ட கூடாது ஸ்டெர்லைட் ஆலையை பற்றி பொய்களை பரப்பி மக்களை மூளை சலவை செய்து வன்முறையில் இழுத்து விட்டார்கள்… தமிழக மக்கள் இந்த கம்யூனிஸ்ட் அயோக்கியர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இவர்களால் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு.

    • ஸ்டெர்லைட் ஆலையைப் பத்தின ‘உண்மைகளை’ நீங்கள் சொல்லுங்களேன்.கேட்போம்…..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க