றிவியலுடன் இந்துத்துவ கும்பலுக்கு இருக்கும் வாய்க்கால் வரப்புச் சண்டைகள் அனைவரும் அறிந்தது தான். இன்றைக்கு அவர்களின் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருக்கிறது, பணம் இருக்கிறது, பெரும் எண்ணிக்கையில் மூளை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட தொண்டர்கள் படையும் கூட இருக்கிறது. இவையனைத்தையும் கொண்டு வரலாற்றையும் கூட ’மாற்றி’ எழுதுகின்றனர். ஆனால் அறிவியல்? அது இந்துத்துவத்தோடு முரண்பட்டு நிற்கிறது. வரலாற்றைப் போல் அறிவியலை ’மாற்றி’ எழுத முடியாது என்பதால் அறிவியலுக்கு இந்துத்துவ பாணியில் விளக்கம் அளிக்கும் கோமாளித்தனமான முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

இந்துத்துவ கும்பலின் இந்த முயற்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் எள்ளி நகையாடப்பட்டுள்ளது. எனினும், தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தியனைப் போல ஓட்டை வாளியில் தண்ணீர் ஏந்துவதை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றனர். நரேந்திர மோடியின் புகழ்பெற்ற பிளாஸ்டிக் சர்ஜரி பிள்ளையாரில் இருந்து சாக்கடை வாயு ஸ்டவ் வரையிலான நீண்ட பட்டியலின் சமீபத்திய வரவாக மும்பையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

”விழித்தெழும் பாரதம்” (Bharatham Awakening) என்கிற இந்துத்துவ அமைப்பு ”பண்டைய இந்தியாவில் விமான சாஸ்திரம்” எனும் தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழும் விளம்பரங்களும் வாட்சப்பில் சுற்றியுள்ளது. நிகழ்ச்சியில் உரையாற்றுவோர் என சில விஞ்ஞானிகளின் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளது. ”விமானப் பொறியியல் குறித்து ரைட் சகோதரர்களுக்கு முன்பே இந்தியர்கள் அறிந்திருந்தது” குறித்தும், “விமானப் போக்குவரத்தில் நாம் முன்னோடிகளாக” இருந்தது குறித்தும் அறிந்து கொள்ள வருமாறு மேற்படி அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூகவலைத்தளங்களின் மூலம் பரவிய அழைப்பிதழைப் பார்த்த அங்கித் சூலே, ரோகினி டாங்கே மற்றும் சதாக்‌ஷி கோயல் ஆகிய மூவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுடன் கேள்வி பதில் நேரத்தில் ‘வேதகால விமானம்’ குறித்து விஞ்ஞான ரீதியில் கேள்வி எழுப்புவது எனத் தீர்மானித்துள்ளனர். இவர்களில் அங்கித் ஒரு விஞ்ஞானி; ரோகினி உயிரி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்; சதாக்‌ஷியும் முனைவர் பட்டம் பெற்றவர் – இம்மூவரும் ஹோமி பாபா அறிவியல் மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள். நிகழ்ச்சியில் உரையாற்றியவர்களில் பிரஹலாத் ராமாராவ் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் (DRDO) உயர் பதவி வகித்தவர். மற்றொரு பேச்சாளரான காவ்யா வட்டாடி விமானப் பொறியியல் படித்தவர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரஹலாத்,வேதகாலத்திய விமானங்கள் பாதரசத்தால் இயக்கப்பட்டன என்று பேசியுள்ளார். விமானப் ‘பொறியாளரான’ காவியாவோ இன்னும் ஒரு படி மேலே போய் கழுதை மூத்திரத்தைக் கொண்டும் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து அங்கித், ரோகினி மற்றும் சதாக்‌ஷி ஆகியோர் எழுந்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

பண்டைய இந்தியாவில் பாதரசத்தால் விமானங்கள் இயக்கப்பட்டன என்றால், அன்றைக்கு பாதரசத்தை உற்பத்தி செய்யும் வழிமுறை குறித்தோ அது தோண்டப்பட்ட சுரங்கங்கள் எங்கே உள்ளன என வேதங்களில் குறிப்புகள் உள்ளதா எனக் கேட்டுள்ளனர். மேலும், பண்டைய பாதரச சுரங்கங்கள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளனவா எனவும் கேட்டுள்ளனர். அடுத்து, கழுதையின் மூத்திரத்தைக் கொண்டு  விமானத்தையே இயக்க முடியும் என்றால், அதை நிரூபிக்கும் வகையில் கழுதை மூத்திரத்தால் ஒரு காரை இயக்கிக் காட்டுமாறு சவால் விடுத்துள்ளனர்.

இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ’இந்துத்துவ அறிவியல்’ ஜோதியில் ஐக்கியமாகும் லட்சிய வெறியோடு கூடியிருந்த பிற பார்வையாளர்கள் இம்மூன்று விஞ்ஞானிகளையும் தாக்க முற்பட்டுள்ளனர். பின்னர் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நிகழ்ச்சியின் பேச்சாளர்கள் கழுதை மூத்திரத்தால் விமானம் ஓடியது குறித்து வேதங்களில் குறிப்புகள் இருப்பதாகவும், இன்னபிற மூலிகைகளால் வைதீக விமானங்கள் இயக்கப்பட்டதற்கும் ‘ஆதாரம்’ இருப்பதாகவும் குறிப்பிட்டதோடு, கேள்வி எழுப்பிய விஞ்ஞானிகள் ‘முட்டாள்தனமான’ கேள்விகளைக் கேட்டு பார்வையாளர்களுக்கு ஆத்திரமூட்டியதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஷிவ்கர் டால்படே என்பவர் ரைட் சகோதரர்களுக்கு முன்பே வேதக் குறிப்புகளின் அடிப்படையில் ஒரு விமானத்தை வெற்றிகரமாக கட்டி முடித்தார் என்றும், ’துரதிர்ஷ்டவசமாக’ அதற்கு எந்த ஆதாரமோ, வரைபடங்கள் உள்ளிட்ட சாட்சியமோ, புகைப்படங்களோ, கட்டப்பட்ட விமானத்தின் பாகங்களோ இல்லாமல் போய் விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பிரச்சினை குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கமளித்த விஞ்ஞானி ரோகினி, ”ஆதாரங்களோடு முன்வைக்கப்படும் வாதங்கள்தான் அர்த்தப்பூர்வமானதாக இருக்கும். எனினும் நாங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்வியையும் பார்வையாளார்கள் இடையூறாகவே பார்த்தார்கள்” என்கிறார். மற்றொரு விஞ்ஞானியான அங்கித் சூலே,  “இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களும் இளைஞர்களும் வருகிறார்கள். அவர்கள் இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற விசங்களைக் கேட்பதும் நம்புவதும் ஆபத்து என்பதை உணர்ந்தோம். எனவேதான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்வியெழுப்புவது எனத் தீர்மானித்தோம்” என்று குறிப்பிடுகிறார்.

கேள்விகள்தான் இந்துத்துவ கும்பலை அச்சுறுத்தும் ’பேரழிவை உண்டாக்கும் ஆயுதம்’. ஆர்.எஸ்.எஸ் கும்பல் அளிக்கும் பயிற்சியே மூளைகளை கழட்டி விட்டு ‘சிந்திப்பது’ எப்படி என்பது குறித்துதான். எனவே இது போன்ற கோமாளித்தனங்களை சிரித்துக் கடந்து செல்வதை விட கலந்து கொண்டு கேள்விக்குட்படுத்திக் கலகம் செய்வதே இந்துத்துவத்தை முறியடிக்கும் மருந்து. அதைச் செய்து காட்டியிருக்கும் மூன்று விஞ்ஞானிகளைப் பாராட்டுவதோடு அவர்களின் கலகத்தை பின்பற்றத்தக்க முன்மாதிரிகளாகவும் கொள்வோம்.

செய்தி  ஆதாரம்: Mumbai: Scientists call bluff at Vedic plane theory talk

– வினவு செய்திப் பிரிவு

8 மறுமொழிகள்

 1. அறிவியலுக்கும் இந்துத்துவ கும்பலுக்குமான முரணை வாய்க்கால் வரப்புச் சண்டையாகச் சித்தரிப்பது பொருத்தமானது அல்ல. அது எப்போதும் தீரா பகை முரண்.

 2. அடேங்கப்பா என்ன ஒரு விஞ்ஞான அறிவு! பாயசத்தின் மூலம் ராமர்& BROTHERS பிறந்ததாக இராமாயணம் கூறுகிறது.பார்வதியின் உடல் அழுக்கால் பிள்ளையார் (MODI’s PLASTIC SURGERY) பிறப்பு.

  பன்றியின் மலம்ந்தான் இமயமலை
  காக்காவின் மூத்திரம்தான் கங்கை நதி
  ஆட்டின் புளுக்கைதான் விந்திய மலை
  பல்லியின் எச்சம் அனுமான் என்ற குரங்கு தூக்கி வந்த சஞ்சீவி மலை
  இந்திரனின் ஸ்கலிதம்தான் ஷரஸ்வதி நதி
  பீமனின் மூத்திரமே இந்துமா சமுத்திரம்
  பிரம்மனின் ஏப்பந்தான் புயற்காற்றும் சுனாமி….
  இன்னும் எத்தனை எத்தனை படைப்பு வைத்தாய் இந்துமத இறைவா???
  என்னே புகழ் என்னே படைப்பு
  இதுபோல் எங்கேனும் படைப்புகள் உண்டா???

 3. தமிழகத்தில் ஆமைக்கறி, அறுபதாயிரம் யானைகளை கப்பலில் எற்றியது என்று அண்ணன் சீமான் பேசினால் மக்கள் சிரிக்கிறார்கள். அண்ணன் வடக்க போனால் மவுசு கிடைக்கும்…ஆனா அங்க இருக்கவன் வந்தேறினு சொல்லுவானே…. ஹீலர் பாஸ்கர் பாரிசாலன் என தமிழகத்திலும் பழம்பெறுமை பேசிக்கொண்டு அறிவீன கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது..

 4. அட அவனுங்க பைத்தியமில்ல, நம்ம பைத்தியமாக்குரனுங்க. இந்த குரங்குகூட்டதின் அபிமானி அம்பிகள் தன அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனங்களில் எப்படி ஏரோ டைனாமிக் மேம்படுத்தலாம் என ஆராச்சி பண்ணிட்டு இருப்பானுங்க, ஆனா இந்தியாவில மட்டும் மூத்திரதுல விமானம் ஓட்டுவானுங்க. இதெல்லாம் தெரிந்தே தான் செய்றானுங்க. நீங்க கூறிய DRDO ஆளு பிசிக்ஸ் கெமிஸ்ட்ரின்னு எல்லாம் தெரிஞ்ச ஆளுதான், இருந்தும் இந்த கோமாளித்தனத்தை செய்கிறான் என்றால் காரணம் என்ன? ஏன் DRDO செய்யும் ஏவுகணைகளில் சாணியை வெடிமருந்துக்கு பதிலாக பயன்படுத்த வேண்டியது தானே, முடியாது.

  அப்படியும் இவர்களை நம்பும் முட்டாள்களுக்கு தெரியாதா அந்த வேத சூக்குமத்தை எல்லாம் உண்மையாய் இருந்தால் அமெரிக்கன் கரைச்சு குடிசிருப்பன்னு இந்நேரம். இப்ப அமெரிக்கன் ஸ்டெல்த் பாம்பர் விமானம் கூட பெட்ரோல்ல தானுங்க ஓடுது மூலிகை சாற்றில இல்ல.

  விமானம் ரைட் சகோதர்களால் துணிச்சல் வைராக்கியம் மற்றும் அறிவியல் துணைகொண்டு முடியும் என நிருபிக்க பட்டது, அதற்கு முன்புகூட பல ஆர்வமிக்க கண்டுபிடிப்பாளர்கள் பல்வேறு வினோத கருவிகளில் பறக்க முயன்று உயிரைக்கூட இழந்தனர். ரைட் சகோதர்கள் தொடங்கினாலும் இன்றுவரை விமானங்கள் ஒப்பேற்ற பட்டுக்கொண்டுதான் இருகின்றன. விமானம் மட்டுமல்ல , அனைத்து கண்டுபிடிப்புகளுக்கு பின்னாலும் அறிவியலும் , ஆர்வமும் , துணிச்சலுமே காரணமாக இருக்கின்றன. அனால் மதவாதிகளும் யூத முதலாளிகளும் வெகு இலகுவாக அனைத்தையும் களவாடி சொந்தம் கொண்டாடி விடுகின்றனர்.

  • சின்னா 2.௦ யூதர்கள் அனைத்து துறைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர் மறுப்பதற்கில்லை.ஆனால் யூதர்கள் மட்டுமே அனைத்திலும் குறிப்பாக உலகமுதலாளிகள் அனைவரும் யூதர்கள் மட்டுமே என்பது போல உள்ளது தங்களது மறுமொழி (முந்தைய பல்வேறு பதிவுகள்). யூதர்களை முன்னிலைப்படுத்துவது இலுமினாட்டி கதை போலாகிவிடும்.

   • நண்பர் முரளி, மறுபடியும் சொல்கிறேன், இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் பற்றி புரிந்து வைத்திருக்கும் தோழர்கள், யூதர்களை பற்றி பேசவே தயங்குவது யூதர்கள் கட்டமைத்த ‘தாம் ஆண்டவரால் தேர்தெடுக்க பட்ட்டவர்கள், விமர்சனதிற்கு அப்பாற்பட்டவர்கள்’ என்பதை உறுதி படுத்துவதாகவே உள்ளது, உலகில் யாரும் இஸ்லாமிய வெறியர்கள் என பேசலாம் பவுத்த வெறியர்கள் என பேசலாம் கிறித்தவ வெறியர்கள் என பேசலாம் ஆனால் யூதர்கள் பற்றி பேசியவுடன் மட்டும் உடனே ‘யூத எதிரி’ (anti semite)என பட்டம் கட்டபடுவார்கள். மூலதன மாயையை தெளிவுபடுத்திய மார்க்ஸ் மேல் வெறுப்பு கொண்டு , தாமாகவே மார்க்சியத்தையும் யூத சயோநிசத்தையும் வேண்டுமென்றே முடிச்சு போட்டு மார்க்சியம் மேல் வெறுப்பை வளர்க்கும் யூத முதலாளிகள் பற்றி தோழர்களுக்கு விளக்கம் இல்லையா?? ஆம் அனைத்து முதலாளிகளும் யூதர்கள் இல்லைதான், ஆனால் முதலாளிதுவத்தின் ஆண்டவர்களே அவர்கள்தான், அம்பானி அதானி போன்றவர்களின் செல்வங்கள் வெறும் ஜுஜுபி , ரத்சைல்டு போன்ற யூத வாரிசுகள் நினைத்தால் இன்றே அம்பானியை நடுத்தெருவில் நிறுத்த முடியும்.
    இவர்களின் கட்டுபாட்டை தகர்த்து ஹிட்லர் தேசிய சோசியலிசம் தானே பேசினார், யூதர்களின் மாய்மாலங்களை இனம்கண்டு அவர்களின் செல்வங்களை பதிவு செய்ய சொன்னார். முதலாளித்துவத்தை வெறுத்தார். இருந்தும் தோழர்களின் ஹிட்லர் வெறுப்பு இன்னமும் எனக்கு புரியவில்லை. அவர்களின் சர்வதேசிய வங்கி தலையீடுகள் இல்லாமல் ஜேர்மன் பொருளாதாரத்தை 3 யூத பொம்மை சாம்ராசியங்களுடன் போரிடும் அளவுக்கு மேம்படுத்தினார். இதெல்லாம் நீங்கள் மறைப்பது ஏன்? இனிமேல் தயவுசெய்து மோடி போன்ற கிறுக்கர்களை ஹிட்லருடன் ஒப்பிடும் வேலையை நிறுத்துங்கள். ஆம் இன்று உண்மையை சொன்னால் உடனே anti semite என சிறைதண்டனை கிடைக்கும் , அவர்களின் பிடியில் உள்ள ஐரோப்பிய நாடுகளில். வேறு எங்காவது இஸ்லாமியர்களை , பவுத்தர்களை என எந்த மதத்தையோ இனத்தையோ பற்றி பேசி யாருக்காவது சிறைவாசம் கிடைக்குமா? மேலும் யூதர்கள் என்பவர்கள் ஒரு மதத்தவரோ அல்லது இனத்தவரோ அல்ல, யூதனாய் இருப்பதென்பது இரண்டையும் மிஞ்சிய ஒன்று. யூதாயிசம் என்பது சும்மா போக்கு காட்ட இவர்கள் பயன்படுத்தும் ஒரு மத முகமூடி, அவ்வளவுதாம், மற்றையபடி யூதர்கள் அனைத்து இன , மதங்களிலும் ஊடுருவ கூடியவர்கள், கடவுள் எனும் கருத்து இவர்களுக்கு மயித்துக்கு சமன், காசும் மனித இனம் மீதான ஆளுமையுமே இவர்களுக்கு கடவுள். யூத மரபணு என்ற ஒன்றே வேராக இருக்கிறது என ஆராச்சிகள் கூட நிருபித்திருக்கின்றன. மறுபடியும் சொல்கிறேன் முதலாளித்துவத்தை எதிர்பதொடு மட்டுமல்லாது அதன் மூல கர்த்தாக்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதே. இன்று இந்தியாவில் முஸ்லிம்களை , பவுத்தர்களை , இந்துக்களை , சீக்கியர்களை , கிறிஸ்த்தவர்களை என அனைத்து இன மத மக்களையும் தெரிந்தவர்களுக்கு கூட யூதர்கள் என்றால் தெரியாது. இதுதான் அவர்களின் பலமே. அம்பல படாமல் ஒளிந்துகொண்டே அனைத்து வேலைகளையும் செய்வது. இவர்கள் பற்றி விரிவாக ஆதரங்களுடன் எழுதினால் வினவு பிரசுரிக்குமா?

   • என்னையும் ஏனைய பைத்தியங்களையும் விடுங்கள், தோழர் ஸ்டாலின் கூடத்தான் இவர்களை வெறுத்தார். அவரும் பைத்தியமா? ட்ராஸ்கியை கூட மார்க்ஸ் போல ‘சேற்றில் முளைத்த செந்தாமரை’ என ஸ்டாலின் கருதவில்லை, ஏனெனில் அந்தளவு குயுக்தியனவர்கள் இவர்கள். இதெல்ல்லாம் தோழர்களுக்கு தெரியாதா?

 5. இந்த நிகழ்ச்சி நடந்த இடத்தை பற்றி குறிப்பு கட்டுரையிகல் இல்லை.அதனை குறிப்பிடவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க