பெரியாரை நமக்கு ஏன் பிடிக்கிறது ? துரை சண்முகம் | காணொளி

பெரியாரை நமக்கு ஏன் பிடித்திருக்கிறது ? பெரியாரை சங்க பரிவாரத்தினருக்கு ஏன் பிடிப்பதில்லை ? பெரியார் குறித்த சங்க பரிவாரத்தின் புரட்டுகளை தோலுரிக்கிறார் தோழர் துரை சண்முகம்.

ருவருக்கு எதுவெல்லாம் பிடிக்காது என்பதிலிருந்து அவரை மதிப்பிடமுடியும் என்றார் காரல் மார்க்ஸ். தந்தை பெரியாருக்கு சாதி பிடிக்காது, மதம் பிடிக்காது, பெண்ணடிமைத்தனம் பிடிக்காது, சமத்துவமின்மை பிடிக்காது. அதனால்தான் அவரை சங்க பரிவாரத்துக்குப் பிடிக்காது. ஆனால், அதே காரணத்தால்தான் அவரை நம் அனைவருக்கும் பிடிக்கிறது.

சங்க பரிவாரக் கும்பல் கூறிவருவது போல, பெரியார் இந்துமதத்தை மட்டும்தான் எதிர்த்தாரா? பெரியார் கடவுள் மறுப்பு மட்டும்தான் போதித்தாரா? பெரியார் பார்ப்பனரல்லாதவர்களுக்காக மட்டும்தான் பாடுபட்டாரா ? இந்துமதப் பெண்கள் பணிக்குச் செல்வது குறித்து இந்துமதத்தின் ஆன்மிகச் சுடர் ‘மகா பெரியவா’ என்ன கூறினார்? நாத்திகப் பெரியார் என்ன கூறினார்?

பெரியார் குறித்த சங்க பரிவாரத்தின் புரட்டுகளை நொறுக்கி உண்மையான பெரியாரை அடையாளம் காட்டுகிறார், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை. சண்முகம்.

பாருங்கள் ! பகிருங்கள் !

– வினவு களச் செய்தியாளர்

19 மறுமொழிகள்

 1. சில விடயங்களில் ஒத்து போனாலும் பெரியாரை இல்லுமினாட்டி என்று கூறிய பாரிசாலனின் வாயை பாஜாஜ் பணியாளர்கள் பதம் பார்த்த போது பரவச பட்டேன். அந்த இளைஞன் சரியான பாதையில் சென்றான், ஆனால் பெரியாரை பற்றி பேசியது மிக தப்பு.

 2. Why Ramasamy naicker married Maniammai, who’s almost 50 years younger to him!!!… In another 20 to 30 years, ramasamy naicker’s principles and ideologies will vanish from tamil nadu… even now, he isn’t known outside Tamilnadu!!!…

  • ஐயா INDIAN பெரியார் பற்றிய உங்களது கேள்வி அதரப்பழசு…. இதுக்கு பலநூறு முறை பதில் தரப்பட்டுள்ளது.பெரியாரை விமர்சனம் செய்ய தங்களிடம் தரமான கேள்விகள் ஏதும் இல்லை என்பதே உண்மை.மேலும் பெரியாரை சமூக நீதியை படியுங்கள் உங்களால் ஏலுமானால் சிந்தியுங்கள்….

   • பெண்களுக்கு எதற்கு கற்பு கல்யாணம் குழந்தை எல்லாம் என்று பெரியார் கேட்டார் அதை உங்களை போன்ற ஆட்கள் முற்போக்கு சிந்தனை என்று சொன்னிர்கள்… சரி உங்கள் வீட்டு பெண்கள் பெரியார் சொன்னபடி தான் நடக்கிறார்களா ? பெரியார் கருத்துக்கள் முற்போக்காம் வெங்காயம் அது மீண்டும் மனிதர்களை காட்டுமிராண்டியாக்கும் கருத்துக்கள்.

    • Manikandan பெண்களை ஆண்களோடு சமமாக நடத்த வேண்டும். கல்வி மருத்துவம் வேலை…… அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னணியில் இருக்கவேண்டும்….. இது பெரியார் போன்ற முற்போக்கு சிந்தனையாளர்களின் செயல்பாடு.
     ஆனால் நீங்கள் குறிப்பிடும் இந்துமதம் என்கிற பார்ப்பனீய மதம் அவர்களின் உயர்சாதியாக குறிப்பிடும் பார்ப்பன பெண்களையும் தரம் தாழ்த்தி தான் இன்று வரை நடத்துகிறது.மேலும் இந்துமத புராண இதிகாசங்களை படித்து பாருங்கள் இதைவிட கேவலமான ஆபாசமான கேடுகெட்ட கதை உலகில் எந்த மதத்திலும் காணமுடியாது.இந்துமத புராண ஆன்மீக இதிகாசங்களை உங்கள் வீட்டில் உள்ள பெண்களின் முன்பாக சத்தமிட்டு வாசிக்க முயற்சி செய்யுங்கள் அப்போது தெரியும் உங்களின் இந்துமத முடைநாற்றம்.
     பெரியார் அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களின் நூல்களை விமர்சனம் செய்யவாவது ஊன்றி படியுங்கள்…..
     அவதூறுகளை வரலாறு என்று கூறும் அயோக்கியர்களின் வஞ்சகத்தை உண்மையென நம்பி ஏமாறாதீர்கள்

   • பெரியார் ஹிந்து கடவுளுக்கு எதிராக பேசினார் என்பதால் தான் கிறிஸ்துவ மதவாதிகளும் இஸ்லாமியர்களும் தமிழக பிரிவினைவாதிகளுக்கு பெரியாரை கொண்டாடுகிறார்கள். இதில் சமூக நீதியும் கிடையாது ஒரு வெங்காயமும் கிடையாது

   • கேள்வி அர்தப்பழசாக இருக்கலாம். ஆனால் உண்மையை தான் எந்த பெரியாரிஸ்டும் சொல்வதில்லை. ஆனால் வரலாறு தெரிந்தவர்களுக்கு உண்மையும் தெரியும், அதன் சுயநலமும் புரியும்

    என் கேள்விக்கு விடை அளிக்கும் முன் நான் ஈ வெ ரா வை பற்றி கமெண்ட் போட்டால் அதை ‘வினவு’ பிரசுரிக்குமா என்பதையும் கேட்டு சொல்லவும்

    • Sathish இப்போது உங்களது மறுமொழி(அவதூறு) வினவில்தான் வந்துள்ளது.மேலும் ஒரு விசயத்தை விமர்சனம் செய்வதற்கு முன் அந்த வரலாற்றை தேடிக்கண்டறிந்து உண்மையின் அடிப்படையில் எழுத முயற்சி செய்யுங்கள்.உண்மை எளிதானது ஆனால் அதை கண்டுபிடிக்க உழைப்பும் பொறுப்பும் அவசியம்.முயன்றுதான் பாருங்களேன்

     • இருந்தாலும் வினவு இப்படி அந்நியத்துக்கு நியாயமாக நடந்து கொள்கிறது

      உங்கள் பதிலே சொல்கிறது ஈ வெ ரவை நீங்கள் முழுமையாக படிக்கவில்லை என்று

      • அந்நியமான நியாயமான வினவில்தான் உங்களைப்போன்ற RSS அடிமைகளும் விவாதிக்கும் சுதந்திரம் உள்ளது.வேறு எங்குமே குறிப்பாக வலதுசாரி மேடைகளில் அதற்கு எதிரான இடது முற்போக்கு சிந்தனைகளை பேசவே இடம் தரமாட்டார்கள் ஏனெனில் வலதுசாரிகள் அம்பலப்பட்டுப்போவர்.
       மீண்டும் மீண்டும் வலதுக்குதான் சொம்பு தூக்குவீர்கள்

       • ஈ வெ ரா வை விவாதித்தால் அதை பற்றி கமெண்ட் போடுங்கள். கடைசி வரைக்கும் ‘இந்தியன்’ கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை

        இங்கு 100% சரியானது என்று எதுவுமே இல்லை. இதில் இடம் என்ன ? வலம் என்ன ? எனக்கும் இடமும் தெரியாது வலமும் தெரியாது

 3. பெரியாரை வினவு கூட்டங்களை போன்ற ஹிந்து விரோதிகள், இந்திய தேசவிரோதிகளுக்கு தான் பிடிக்கும் மற்றவர்களுக்கு பெரியாரை பிடிக்காது.

  • சமத்துவத்தை நேசிக்கும் எவருக்கும் தந்தை பெரியாரை பிடிக்கும்..மனுவாதிகளாகிய மனித குலவிரோதிகளுக்கு அதாவது Manikandan போன்றவர்களுக்கு பெரியாரை பிடிக்காது..
   நியாயத்தை தானே கூவிகிறீர்கள்…

   • கம்யூனிசத்தை விட மனித இனவிரோதம், பாசிஸ்ட் வக்கிர சிந்தனையாளர்கள் வேறு யார் இந்த உலகத்தில் இருக்க முடியும் ?

    • Manikandan உங்களுக்கு கம்யூனிசமும் தெரியவில்லை
     பாசிசமும் தெரியவில்லை.. ஆனால் தங்கள் சிந்தனை முழுவதும் வக்கிரம் மட்டுமே நிரம்பி வழிகிறது என்ன செய்வது…. வக்கிரம் தான் உங்களுக்கு எழுத்தாக பரிணமிக்கிறது.

 4. பெரியார் மறைந்து அரை நூற்றாண்டு காலம் கடந்த பின்னும் பார்ப்பனியம் தமிழ்நாட்டை தீண்டமுடியவில்லை . அவர்தாம் பெரியார்.

  • தேமா நீங்கள் என்ன தூக்கத்தில் இருக்கிறீர்களா ? ஈ வெ ரா மண் என்று சொல்லிக்கொள்ளும் இடத்தில் தான் ஒரு ‘பார்ப்பன பெண்’ 6 முறை முதல் அமைச்சராக இருந்து இருக்கிறார்

   மாறாக ஈ வெ ரா வை பற்றியோ அல்லது ஈ வெ ரா கொள்கைகள் சென்று சேராத ‘UPல்’ ஒரு தலித் முதல்வர் ஆகி இருக்கிறார்

   அரசியல், பணம், ஜாதியால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்று நீங்கள் சொல்லலாம்.

   ‘பார்ப்பனீய வெறுப்பு’ ஊட்டப்பட்ட இந்த மண்ணில் பெண்மணி ஒருவர் முதல் அமைச்சர் ஆவது என்பதெல்லாம் அவ்வளவு எளிதல்ல

   உங்கள் ஈ வெ ரா பிள்ளையார் சிலையை தான் உடைத்தார். ஒரு ‘அய்யனார் சிலையையோ’, ‘மற்ற சிலைகளின் மேலே’ கை வைக்கவில்லையே ஏன் ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க