பெரியாரை நமக்கு ஏன் பிடிக்கிறது ? துரை சண்முகம் | காணொளி

பெரியாரை நமக்கு ஏன் பிடித்திருக்கிறது ? பெரியாரை சங்க பரிவாரத்தினருக்கு ஏன் பிடிப்பதில்லை ? பெரியார் குறித்த சங்க பரிவாரத்தின் புரட்டுகளை தோலுரிக்கிறார் தோழர் துரை சண்முகம்.

ருவருக்கு எதுவெல்லாம் பிடிக்காது என்பதிலிருந்து அவரை மதிப்பிடமுடியும் என்றார் காரல் மார்க்ஸ். தந்தை பெரியாருக்கு சாதி பிடிக்காது, மதம் பிடிக்காது, பெண்ணடிமைத்தனம் பிடிக்காது, சமத்துவமின்மை பிடிக்காது. அதனால்தான் அவரை சங்க பரிவாரத்துக்குப் பிடிக்காது. ஆனால், அதே காரணத்தால்தான் அவரை நம் அனைவருக்கும் பிடிக்கிறது.

சங்க பரிவாரக் கும்பல் கூறிவருவது போல, பெரியார் இந்துமதத்தை மட்டும்தான் எதிர்த்தாரா? பெரியார் கடவுள் மறுப்பு மட்டும்தான் போதித்தாரா? பெரியார் பார்ப்பனரல்லாதவர்களுக்காக மட்டும்தான் பாடுபட்டாரா ? இந்துமதப் பெண்கள் பணிக்குச் செல்வது குறித்து இந்துமதத்தின் ஆன்மிகச் சுடர் ‘மகா பெரியவா’ என்ன கூறினார்? நாத்திகப் பெரியார் என்ன கூறினார்?

பெரியார் குறித்த சங்க பரிவாரத்தின் புரட்டுகளை நொறுக்கி உண்மையான பெரியாரை அடையாளம் காட்டுகிறார், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை. சண்முகம்.

பாருங்கள் ! பகிருங்கள் !

– வினவு களச் செய்தியாளர்