கடந்த அக்டோபர் 27, 2018 அன்று உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேராசிரியர் சிவக்குமார், பேராசிரியர் கருணானந்தம், பேராசிரியர் அரசு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அவர்களது உரையில், உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி இந்தியாவில் எப்படி படிப்படியாக கல்வி தனியார்மயமாகி வந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்திப் பேசினர். மேலும் தற்போது கொண்டுவரப்படும் கல்வி மசோதாக்கள் குறித்து அவை எவ்வாறு ஜனநாயக விரோதமாக நிதி மசோதாவாக கொண்டு வரப்படவிருக்கின்றன என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
பல்கலைக்கழகங்கள் முழுக்க முழுக்க ஊழல்மயமாவது குறித்தும், அதன் முதல்காரணமாக துணைவேந்தர்கள் இருப்பதையும் அம்பலப்படுத்தினர். கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியும், தனியார் மயமாக்கும் முயற்சியும் கொள்ளைப்புறத்தின் வழியாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தினர். இதற்கு தீர்வு ஒரே வழிதான், அது மக்கள் போராட்டத்தின் மூலம்தான் என்பதை வலியுறுத்திப் பேசினர்.
பேராசிரியர் சிவக்குமார் உரை:
பேராசிரியர் கருணானந்தம் உரை:
https://youtu.be/opwnp-HDV6g
நன்றி : TN Voice
பேராசிரியர் வீ.அரசு உரை:
https://youtu.be/Bx1JlXZS9qE
நன்றி : TN Voice