NEP 2020 : கார்ப்பரேட்மயமாகும் கல்வி | பேரா வீ. அரசு உரை | காணொலி
இந்த கல்விக் கொள்கையால் கல்வி என்பது முற்றிலும் சீரழிக்கப்படுமே தவிர, இது நாட்டின் கல்வித் தரத்தை ஒருபோதும் உயர்த்தப்போவது இல்லை என்ற அபாயத்தை அம்பலப்படுத்தி உரையாற்றினார்.
“நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கல்விக் கொள்கை 2020 : எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?” என்ற தலைப்பின் கீழ், பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) கடந்த 05-01-2022 அன்று பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் கதிரவன் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து “அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கம்” அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் உமா மகேஸ்வரி சிறப்புரை ஆற்றினார். அவரை தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறை பேராசிரியர் வீ.அரசு சிறப்புரை ஆற்றினார்.
பேரா. வீ.அரசு தனது உரையில், தனியார்மய கொள்கையின் விளைவாக கல்வி கடைச்சரக்காக மாற்றப்பட்டது. அன்று சாராய ரவுடிகள் கல்வி தந்தைகளாக வலம் வந்தார்கள். ஏழை மாணவர்கள் கல்வி கற்க அரசுப் பள்ளி, கல்லூரிகள் மட்டுமே இருந்தன. காசு உள்ளவனுக்கே தரமான கல்வி என்ற அவலநிலை உருவானது. தனியார் பள்ளி மோகம் பெற்றோர் மனதில் விதைக்கப்பட்டது. அதன் விளைவாக அரசு பள்ளி, கல்லூரிகள் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு, தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரிக்க துவங்கியது.
தற்போது மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய கல்விக்கொள்கை 2020 கல்வியில் கார்ப்பரேட் மயம், டிஜிட்டல் மயம் ஆகியவற்றை புகுத்தி, நவீன குலக்கல்வியை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது. இந்த கல்விக் கொள்கையால் கல்வி என்பது முற்றிலும் சீரழிக்கப்படுமே தவிர நாட்டின் கல்வித் தரத்தை இது ஒருபோதும் உயர்த்தப்போவது இல்லை. இதுபோன்று, கல்வித் துறையில் நடந்துவரும் அபாயத்தை அம்பலப்படுத்தி உரை நிகழ்த்தினார்.
பேராசிரியர் வீ.அரசு உரை காணொலியாக இங்கு பதிவிடப்பட்டிருக்கிறது !