நான் புதிதாக இராணுவத்தில் இணைந்து உள்ளேன், இங்கே அனைவரும் communication (தொடர்பு கொள்ள) செய்ய ஹிந்தி கட்டாயம், ஹிந்தி தெரியாமல் தமிழர்கள் நாங்கள் படும் வேதனைகள் , அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, ஹிந்தி மட்டும் தெரிந்து இருந்தால் நாங்கள் தான் இங்கே ராஜா, ஹிந்தி தெரியாததால் ஏதே அடிமைகள் போல கேவலமாக இருந்து வருகிறோம், திராவிடன் , தமிழன் என கம்பு சுத்துறவன் எல்லாம் தமிழ் நாட்டை விட்டு வெளியே வந்து பாருங்கடா, கூடுதலாக மொழி (ஹிந்தி) படிப்பதால் நம் அறிவும், வேலைவாய்பும் உயர தான் செய்யும், ஆனால் ஹிந்தி கற்க விடாமல் எங்களை முட்டாள் ஆக்கியதே திராவிட கட்சிகள் அவர்கள் இலாபத்திற்காக செய்த சாதனை, எங்களின் வேதனைகள் / உதயகுமார்/ இராணுவ வீரர் “

இப்படி ஒரு ட்விட்டைப் பார்த்தால் ஒரு தேசபக்தி கொண்டவர் எப்படி எதிர்வினையாற்றுவார்? கொதித்துப் போவார். என்ன அநியாயம், ஹிந்தி படிக்க விடாமல் தனது மக்களை துன்பப்படுத்தி அவர்கள் வெளி மாநிலங்களுக்கு (அதுவும் இராணுவத்தில்) பணி செய்யும்போது அவமானம் அடைய வைத்த திராவிட திம்மிகள் விளங்குவார்களா? என்று கொதித்திருக்க வேண்டும்.

படிக்க:
♦ டிவிட்டர் டிரண்டிங்கில் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் !
♦ அமித்ஷாவை விரட்டும் டிவிட்டர் : டிரண்டிங்கில் #GoBackAmitShah

ஆனால், நடந்தது நேரெதிர். மேற்படி ட்விட்டைப் போட்டவர் ஒரு சங்கி. சமீப காலமாக எப்படியாவது செயற்கை மழையையாவது வரவழைத்து தாமரையை தமிழகத்தில் மலரச் செய்தே தீருவது என்று சங்கிகள் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள். தமிழர்களோ, அப்படி மலர்ந்த தாமரையை கூலிக்கு ஆள் விட்டாவது பிடுங்கி எரிந்தே தீருவோம் என எதிர் கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கின்றனர்.

”செயற்கை மழை”யின் ஒரு வகைமாதிரி தான் மேற்படி ட்வீட். இதற்கு மக்கள் ஆற்றியுள்ள எதிர்வினைகளை தொகுத்திருக்கிறோம்.

”மூனு மாசத்துல இந்தி கத்துக்கலாம்…முடியலனா மூடிட்டு வேலைய ரிசைன் பன்னிரு” என்கிறார் பூணூல் பொறுக்கி.

”இல்லைன்னா அங்கயே தூக்கு போட்டு சாவ சொல்லுங்க இவனெல்லாம் ராணுவத்தில் இருந்து என்னத்த கிழிக்க போரான் 😂😂

//மொழியினால் அவமானப்படுத்தும் ஹிந்தியர்களை திட்ட வக்கில்லாத ……நம்மூரு அரசியல்வாதிகளை திட்ட இவனுக்கு என்ன யோக்கிதை இருக்குன்றேன்// என்கிறார் M2K

“ராணுவத்தில் சேர்ந்ததே கேவலம் தான். அப்புறம் அவமானப்படனும் தான். இதுல ஹிந்தி தெரிஞ்சா என்ன தெரியலைன்னா என்ன??” என்கிறார் மோசக்காரன் ().

ராணுவம், தேசம், தேசபக்தி, ஜெய்ஹிந்த் போன்றவற்றை எல்லாம் தமிழர்கள் கிள்ளுக்கீரையாக நினைக்கும் அளவுக்கு ஈரோட்டுக் கிழவன் சோலியைப் பார்த்து விட்டுப் போயிருக்கான்.. பிளடி ஆண்டி இந்தியன்ஸ் என்று ஹெச்.ராஜா கொதிப்பதாக கேள்வி.

அடுத்து வருவது ஒரு ஸ்பெசல் அயிட்டம்…

”நான் புதிதாக பானிபூரி விற்க தமிழ்நாடு வந்துள்ளேன்,இங்கே communication செய்ய தமிழ் கட்டாயம்,தமிழ் தெரியாமல் ஹிந்தியர்கள் படும் வேதனைகள் , அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, தமிழ் மட்டும் தெரிந்து இருந்தால் நாங்கள் தான் இங்கே ராஜா,தமிழ் தெரியாததால் ஏதே அடிமைகளாக இருக்கிறோம்” சொல்பவர் பிரியா

இதற்கிடையே டேமேஜ் கொஞ்சம் அதிகமாக ஆகவே, சங்கிகள் தரப்பில் கொண்டையை மறைக்காமல் வேறு சிலரும் களமிறங்கினர்.

//1985ல் இதையே தான் நானும் உணர்ந்தேன். நான் முன்னாள் இராணுவத்தான்//

//मैं भी  यही सोच रहा था तब जब 1985 में फौज में भर्ती हुआ था।।

இப்ப நான் ஹிந்தி பேச படிக்க எழுத தெரியும்💪💪💪✌️✌️ //

நைச்சியமாக நானும் முன்னாள் பட்டாளத்தான் தான் எனக்கும் அப்படித் தான் ஆயிற்று என சொன்னார் ஜெகன்னாதன் ()

உடனே இதற்கும் ஒரு 100 வாட்ஸ் பல்பை வாங்கி பரிசளித்து விட்டார் சுந்தர் என்பவர்.

//அப்பரம் என்ன இங்க என்ன செய்யுரீர் அதான் இந்தி எழுத படிக்க தெரிஞ்சிருச்சில்ல சட்டுபுட்டனு டெல்லிக்கு போய் செங்கோட்டையை பிடிக்க வேணடியது தான அது ஓவர்னா அட்லீஸ்டு அம்பானி ரேஞ்சுகாவது வாங்க!!! //

படிக்க:
♦ ஹிந்தியைத் திணிக்கும் மோடி ! மீண்டும் தொடங்குவோம் டெல்லிக்கட்டு !!
♦ இந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !

அடுத்து ஒரு தமிழ் உணர்வாளர்…. /நான் மட்டும் உன் நிலையில் இருந்திருந்தால்… என் தாயை பழித்தவனைப்போல துடித்து… உன் வேலையாச்சி …கூந்தலாச்சினு வந்திருப்பேன் …காரணம் தமிழனா பொறந்தா மானம்தான் பெருசு..பணத்துக்காக மானத்தை விக்க கூடிய ஒரு நிலையில் , கேவலத்தில் மனுஷன் வாழக்கூடாது.//  ()

இதில் முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால், மேற்படி ட்வீட்டுக்கு பதிலளித்தவர்கள் யாரும் அவர் சங்கி என்பதை ஊகிக்கவில்லை. உண்மையிலேயே இராணுவத்தில் பணிபுரியும் ஒரு தமிழ் இளைஞனின் குமுறல் என்றே நம்பி பதிலளித்தனர். இந்த ட்வீட் பல்வேறு ரீட்வீட்டுகள் சென்ற பின்னரே சம்பந்தப்பட்டவரின் வரலாறு பூகோளம் என தோண்டித் துருவி அவரது நதிமூலம் நாக்பூர் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். அதன் பிறகு செயற்கை மழையில் மலர்ந்த தாமரை பட்ட பாட்டை நீங்களும் கொஞ்சம் பாருங்கள்.

”நான் புதிதாக அண்டார்ட்டிக்காவிற்குக் குடிபெயர்ந்துள்ளேன். இங்கே communication செய்ய பென்குயின்களின் மொழி கட்டாயம். அம்மொழி தெரியாமல் நான் படும் வேதனைகளும் அவமானங்களும் கொஞ்சநஞ்சம் இல்லை. அம்மொழி மட்டும் தெரிந்திருந்தால் நான்தான் இங்கே ராஜா. அம்மொழி தெரியாததால் நானிங்கே ஒரு அடிமை.”

”நான் புதிதாக MNCல் இணைந்து உள்ளேன், இங்கே அனைவரும் பிகர் உசார் செய்வது கட்டாயம், இது தெரியாமல் சிங்கிள்கள் நாங்கள் படும் வேதனைகள் , அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்லை,இது மட்டும் தெரிந்து இருந்தால் நாங்கள் தான் இங்கே ராஜா,அது தெரியாததால் மொரட்டு சிங்கிளாக காலம் தள்ளுகிறோம்”

நான் புதிதாக செவ்வாய் கிரகத்துக்கு குடிபெயர்ந்துள்ளேன். இங்கே communication செய்ய பூந்தி மொழி கட்டாயம். அம்மொழி தெரியாமல் நான் படும் வேதனைகளும் அவமானங்களும் கொஞ்சநஞ்சம் இல்லை. அம்மொழி மட்டும் தெரிந்திருந்தால் நான்தான் இங்கே ராஜா. அம்மொழி தெரியாததால் நானிங்கே ஒரு அடிமை.

நான் புதிதாக விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்துள்ளேன். இங்கே அனைவரும் communication செய்ய வடை சுடுதல் கட்டாயம். வடை சுட தெரியாமல் பால்வாடிகள் நாங்கள் படும் வேதனைகள் அவமானங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. அது மட்டும் தெரிந்தால் நாங்க தான் இங்கே ராஜா.அது தெரியாததால் ஏதோ அடிமைகள் போல் உள்ளோம்.

நான் புதிதாக ஒரு ஐடி கம்பெனியில் சேர்ந்துள்ளேன், ஜாவா லாங்குவேஜ் தெரியுமானு கேட்கும் போது தமிழ் தெரியும்னு சொன்னேன் துப்பில மூஞ்சிட்டானுங்க. ஆகவே… அனைவரும் ஜாவாவில் பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு வழியாக தேசபக்தியை சல்லி சல்லியாக நொறுக்கித் தள்ளிவிட்டார்கள் தமிழ் கீச்சர்கள். தமிழ்நாட்டில் சங்கிகள் பிடிக்கும் பிள்ளையாரெல்லாம் மங்கிகளாகவே மாறும் மாயம் என்னவென்பது புரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டிக்கிறார்கள் மயிலாப்பூர் அம்பிகள். அந்த இரகசியத்தைப் புரிந்து கொண்ட ஒருவர் பெரியார் திடலின் கல்லறைக்குள் புரண்டு படுத்து சிரித்துக் கொண்டிருக்கிறார்.