டலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில், அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் சார்பாக டிசம்பர்-6 அம்பேத்கரின் 62 வது நினைவு நாளை முன்னிட்டு, மாணவர்களின் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்;
  • சாதி ஆணவ கொலைகளை தடுப்போம்!
  • சாதி – மத வெறியை பரப்பும் சங்கங்கள், கட்சிகளை புறக்கணிப்போம்!
  • ஏழை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க வரும் உயர்கல்வி ஆணையத்தை முறியடிப்போம்!
  • சாதி, மத குப்பைகளை தூக்கி எறிந்து மாணவர்களாக ஒன்றுபடுவோம்!
என்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டது. அதன் பின்னர் அம்பேத்கரின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் 50 -க்கும் மேற்பட்ட  மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மக்களை பிளவுபடுத்தும் சாதிய கொடுமைகளுக்கு எதிராக போராடிய அம்பேத்கர் வாழ்க! வாழ்க!! என்றும், அம்பேத்கார் நினைவை நெஞ்சிலேந்துவோம் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி                             
கடலூர், தொடர்புக்கு : 97888 08110

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க