நண்பர்களே !

வினவு இணையதளத்தில் வெளியாகும் செய்திப்பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக இந்த வானொலி சேவையை தொடங்கியிருக்கிறோம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும்  தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். ஆதரவு தாருங்கள் ! நன்றி !

1. பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா?


கேட்பொலி நேரம் : 09:10
                                                                   டவுண்லோடு

2. நம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட நெல் ஜெயராமன் மரணம் – மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி !


கேட்பொலி நேரம் : 03:02
                                                                   டவுண்லோடு

3. பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !

கேட்பொலி நேரம் : 03:08                                                                  டவுண்லோடு

4. கஜா புயல்: தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு !


கேட்பொலி நேரம் : 05:30
                                                                   டவுண்லோடு

இந்த கேட்பொலிகளின் பதிவை கட்டுரைகளாக படிக்க:

♣ பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா ?

♥ நம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி

♠ யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !

♦ கஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு !! மக்கள் அதிகாரம்

12 மறுமொழிகள்

 1. தோழர் கௌசல்யா திருமணம் பற்றி நியூஸ் எதுவும் இங்கே வரவே இல்லையே?? எப்போ போடுவீங்க?

 2. ஆம் ! வினவுடன் ஒரு மனக்குறை இருக்கிறது. தோழமை அமைப்பு தோழர்களின் நற்செயல்கள் பற்றிய செய்திகள் வருவதில்லை. தவிர்க்கப்படுகிறதா என்ற ஐயப்பாடும் எழுகிறது. உதாரணமாக திவ்யபாரதி, வளர்மதி . . . .
  இதை பற்றி வினவு விவரித்தால் நலம்.

 3. வினவின் புதிய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். விடாமுயற்சியுடன் உண்மைகளை பரந்துபட்ட மக்களிடம் (குறிப்பாக படித்த நடுத்தர வர்க்கம்) சென்று சேர்க்க வேண்டும் என்ற பேரவா உள்ளது.

 4. அன்றாட நிகழ்வு ,நாளிதழ் செய்திகளில் மக்களுக்கு சென்றடைய வேண்டியதை காலையில் தொகுத்து வாசியுங்கள்.

 5. நான் பார்த்த, படித்த வரையில் வினவு எப்பொழுதும் தனி நபர் துதி பாடியது இல்லை.. அதுவே அதன் சிறப்பு… யாருடைய பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு முகம் கொடும். தனி நபரின் புகழுக்கு அல்ல. ஒரு அமைப்போ, தனி நபரோ சமூக மாற்றதிற்கு எந்த அடிப்படையில் தன்னை அர்பணித்துக்கொள்கிறார்கள், அதற்கு நேர்மையாக, சமரசம் இல்லாமல், சுயநலம் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் வினவு துணை நிற்கும்!

  • மர்கஸ் மாவோ லெனின் இவர்களை எல்லாம் புகழ்ந்து வினவில் கட்டுரை வருகிறதே அதற்கு பெயர் என்னவாம்….. அது எல்லாம் தனிநபர் துதியில் சேர்க்க மாட்டீர்களா ? ஒருவேளை அது எல்லாம் கடவுள் துதியாக இருக்குமோ ?

   எதற்கு இந்த மாதிரியான போலித்தனங்கள் எல்லாம்.

   என்னை பொறுத்தவரையில் கிறிஸ்துவம் இஸ்லாம் போன்ற மதங்கள் எல்லாம் எப்படி rigid மதங்களாக இருந்து மனித இனத்திற்கு (குறிப்பாக இந்தியாவிற்கு) பெரும் தீமைகளை செய்ததோ அதற்கு சற்றும் குறையாமல் rigid கொள்கை உடையது தான் கம்யூனிசமும்.

   கம்யூனிசம் இஸ்லாம் கிறிஸ்துவம் இவை அனைத்தும் மேற்கத்திய கலாச்சாரங்களில் இருந்து வந்தவை, இந்த மூன்று கொள்கைகளும் ஒரே மாதிரி சகிப்புத்தன்மை இல்லாதவை, மாற்று கொள்கை உடைவயவர்களை எதிரியாக பார்ப்பது என்று அனைத்து குணநலன்களும் ஒன்றாகவே கொண்டு இருக்கிறது. நம் நாட்டிற்கு துளியும் சம்பந்தம் இல்லாத கொள்கைகள்…

   கம்யூனிஸ்ட்களுக்கு நான் சொல்வது தவறாக தெரியலாம் ஆனால் கூர்ந்து கவனித்தால் இஸ்லாம், கிறிஸ்துவம், கம்யூனிசம் இந்த மூன்றும் ஒன்றே என்பது புரியும்.

   இஸ்லாமும் பல அப்பாவி மக்களை கொன்று இருக்கிறது
   கிறிஸ்துவமும் பல அப்பாவி மக்களை உலகம் முழுவதும் கொன்று இருக்கிறது
   கம்யூனிசமும் பல அப்பாவி மக்களை புரட்சி என்ற பெயரில் கொன்று இருக்கிறது.

   • ///மார்க்ஸ் மாவோ லெனின் இவர்களை எல்லாம் புகழ்ந்து வினவில் கட்டுரை வருகிறதே அதற்கு பெயர் என்னவாம்…../// மேற்கூறியவர்கள் கம்யூனிசம் எனும் மாபெரும் மகத்தான இய்க்கத்தின் மக்கள் தலைவர்கள்….

    ////ஒரு அமைப்போ, தனி நபரோ சமூக மாற்றதிற்கு எந்த அடிப்படையில் தன்னை அர்பணித்துக்கொள்கிறார்கள், அதற்கு நேர்மையாக, சமரசம் இல்லாமல், சுயநலம் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் வினவு துணை நிற்கும்!////

    இந்த அடிப்படையில் மேற்கூறியவர்கள் அனைவரும் கொண்ட கொள்கைக்கும், மக்களுக்கும் கடைசி வரை உண்மையுடன் இருந்தவர்கள்… இதைத் தெளிவான முறையில் குறிப்பிட்டுள்ளேன்… படிக்கும்போதே என்ன பொருளில் சொல்லி இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு பதில் எழுதவும்.. எதையாவது உளர வேண்டும் என்று நினைத்து எல்லோருடைய நேரத்தையும் வீணாக்காதீர்.

  • இதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை நண்பரே . . !
   நான் சொல்ல முயற்சித்தது திவ்யபாரதிக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் துணை நின்ற வினவு அவர் ‘கக்கூஸ்’ மற்றும் ‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படங்கள் எடுத்தபோது அதை ஒரு செய்தியாகக்கூட வெளியிடவில்லை என்பதைத்தான் . . !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க