வெளிநாட்டு பட்டதாரிகளை இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கும் வகையிலான UGC-யின் புதிய விதிமுறையை திரும்பப் பெறு!

ல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் நியமனத்தில் UGC புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது. உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களில் வந்த பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள் இந்தியாவில் நேரடியாக உதவி பேராசிரியராக நியமிப்பதற்கான தகுதி பெற்றவர்கள் என்கிறது அந்த விதி. குறிப்பாக, இவ்விதிமுறை கலை, அறிவியல், வணிகவியல், சமூகஅறிவியல், கல்வி, மொழி மற்றும் நூலக அறிவியல் பாடப்பிரிவுகளுக்குப் பொருந்தும் எனக் கூறியுள்ளனர். இதன் மூலம்  இந்தியாவிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை என்ற மிகப்பெரிய அபாயம் உருவாகியுள்ளது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிகிறோம்.

உலக வர்த்தகக் கழகம், காட்ஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறு! (கோப்புப் படம்)

உலக அளவில் பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப் படுத்துகின்ற நிறுவனங்களான Quacquarelli Symonds(QS ranking), Times Higher Education rankings(THE ranking) and the Academic Ranking of World Universities(ARWU) of the Shanghai Jiao Tong University வெளியிடும் தரவரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களைப் பெற்ற பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கே மேற்கண்ட விதிமுறை பொருந்தும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

மேற்சொன்ன தரவரிசை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலின் முதல் 500 இடத்தில் வெறும் 10 இந்திய உயர்கல்வி நிறுவனங்களே உள்ளன. மீதமுள்ள 490 பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள். UGC-ன் இப்புதிய விதிமுறையின் மூலம் மத்திய / மாநில பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்ற பல்லாயிரக்கணக்கானவர்களை புறம் தள்ளிவிட்டு வெளிநாட்டினரைப் பேராசிரியர் பணிகளில் நியமிப்பதாகவே அமையும். இதன் முலம் இந்தியப் பல்கலைக்கழங்களில் படிக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குப் பேராசிரியர் பணிகளுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படும். உயர்கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில் வெளிநாட்டுப் பேராசிரியர்களை இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் பணியமர்த்துவற்கான திட்டமாகவே மோடி அரசு இதைச் செய்துள்ளது. இந்தப் பாதகமான விதிமுறையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பொதுகல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு இந்திய மாணவர் நலன் கருதிக் கேட்டுக் கொள்கிறது.

பேரா பீ.மு.மன்சூர்,
ஒருங்கிணைப்பாளர்,
பொதுகல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு,
திருச்சி.
தொடர்புக்கு: 9443159058, 9443846945, 9486584463

♠♠♠

 English

Withdraw the UGC rules relating to the appointment of the foreign faculty members in Indian Higher Education Institutions

According to the new rule of the UGC, only those who have received Ph D Degree in the world top 500 universities, ranked by Quacquarelli Symonds (QS ranking), Times Higher Education rankings (THE ranking) and the Academic Ranking of World Universities (ARWU) of the Shanghai Jiao Tong University,  are eligible to be appointed as assistant professors in the departments of Arts, Science, Commerce, Social Sciences, Education, Language and Libraries of the Indian universities and colleges. Hence, there is a danger that a large number of those with Indian University Ph D degrees, particularly from villages and socially suppressed communities may not get job. This move is opposed by us. There are only 10 institutions in the list of top 500 institutions; the other 490 are foreign institutions. This is the bad strategy of the present central government; and this step, without providing basic infrastructural facilities including water and toilets in the campuses, can hardly improve the quality of education. Hence, the CCCE, Trichi requests the Government to withdraw the new rule of the UGC.

Prof.P.M.Mansure,
Coordinator, CCCE-Trichy.

படிக்க:
பேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது !
வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் – மோடியின் அடுத்த ஜும்லா

வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. இந்த ஒரு அயோக்கியத்தனமான கட்டுரைக்கு வினவு தளத்தை தடை செய்தாலும் தவறில்லை. இந்தியாவில் ஒரு சில உயர்கல்வி நிறுவனங்களை தவிர மற்ற அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பிஎச்டி பட்டம் பெறுவதற்கு மிகமிக அயோக்கியத்தனங்கள் நடைபெறுகின்றன. நாட்டில் இருக்கும் பெரும்பாலான ஆராய்ச்சி பட்டங்கள் எந்த பிரயோஜனமும் இல்லாதவை. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பேராசிரியர்களாக இருப்பதை காணமுடியும். உயர்கல்வி என்பது உலகளாவிய ஒன்று. நம்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களும் உலகளாவிய மதிப்பை பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆகையினால் மிகச்சிறந்த வெளிநாட்டு பேராசிரியர்கள் நம் நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களில் பணி செய்வதே நமக்கு தான் பெருமை. இது அயோக்கியத்தனமான முறையில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க தான் செய்யும். எதற்காக இப்படி கூவுகிறீர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க