ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் பிஎச்.டி மாணவரான சுவாதி சிங் (Swati Singh) பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு செமஸ்டர்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான புகாரின் நகலைக் கூட வழங்காமல், பல்கலைக்கழக விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாமல் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் (rusticated).
ஜே.என்.யூ மாணவர் சங்கத்தின் முன்னாள் கவுன்சிலரும், இடதுசாரி அமைப்பான ஜனநாயக மாணவர் கூட்டமைப்பின் (Democratic Students Federation) தலைவருமான சுவாதி சிங், வெளியேற்றப்பட்ட காலத்தில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது (out-of-bounds order). அவரை விடுதியிலிருந்தும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். ரஷ்ய ஆய்வுகளில் (Russian Studies) பி.எச்.டி மாணவராக சுவாதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக ஜே.என்.யூ நிர்வாகம் இவருக்கு தொடர்ந்து தொல்லைகளை அளித்து வந்துள்ளது.
பி.எச்.டி மாணவர் சேர்க்கையின் போது ’பாதுகாவலர்களைத் தாக்கினார்’ என்றும் ’தவறாக நடந்து கொண்டார்’ என்றும் சுவாதிக்கு எதிராகப் பொய்யாகக் குற்றம் சாட்டி நோட்டீஸ் அனுப்பியது பல்கலைக்கழக நிர்வாகம்.
ஆனால் சுவாதி சிங்கோ, தான் யாரிடமும் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்றும் ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி உறுப்பினர்கள் தான் தன்னிடம் தவறாக நடந்து கொண்டனர் என்றும் கூறியுள்ளார்.
படிக்க: டெல்லி ஜே.என்.யூ.வில் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கிய, ஏபிவிபி கும்பலின் கொட்டத்தை அடக்குவோம்!
ஒரு ’குற்றச்சாட்டை’ எதிர்கொள்ளும் மாணவருக்கு புகாரின் நகலையும் அப்புகார் குறித்த ஆதாரத்தையும் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக விதிகள் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் கூறுகின்றன. ஆனால், சுவாதி சிங் விஷயத்தில் ஜே.என்.யூ இதைப் பின்பற்றவில்லை. மாணவர் சங்கம் (JNUSU) தனது ஊடக அறிக்கையில் ”பல்கலைக்கழகத்தின் முடிவு தன்னிச்சையானது, நியாயமற்றது என்று கூறியுள்ளது.
மேலும், “எந்தவொரு முறையான நடைமுறைகளையும் பின்பற்றாமல் அவரை இரண்டு செமஸ்டர்களுக்கு வெளியேற்றவும், பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையத் தடை உத்தரவை (out-of-bounds order) பிறப்பிக்கவும் எடுத்த முடிவு, எங்கள் பல்கலைக்கழகத்தில் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்பட்டு வருவதை உணர்த்துகிறது” என்று மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
Former JNUSU Councillor Swati (@itssinghswati) arbitrarily rusticated and declared out of bounds from the university for two semesters!
Unite against the Targeting of Student Activists! Uphold the Democratic Ethos of the University!@ANI @PTI_News pic.twitter.com/uDbFGKKsjz
— JNUSU (@JNUSUofficial) November 11, 2023
மாணவர் சேர்க்கையின் போது, ஏ.பி.வி.பி உறுப்பினர்கள் பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் JNUSU சாட்டுகிறது.
டி.எஸ்.எஃப் செயலாளர் அனகா பிரதீப் (Anagha Pradeep) தனது அறிக்கையில் பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்துள்ளார். அனைத்து முற்போக்கு அமைப்புகளும் சுவாதிக்கு துணை நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
DSF President Swati Singh (@itssinghswati) Rusticated and Declared Out of Bounds without Due Inquiry by the JNU Administration!
Unite against the Assault on Democratic Rights and Victimisation of Student Activists! pic.twitter.com/oVbqiL9dxG
— DSF-JNU (@DSFJNU) November 11, 2023
சுவாதி சிங் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மாணவர் சங்க கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் பல்வேறு மாணவர் போராட்டங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு ப்ரொக்டர் அலுவலகம் (proctor’s office) அவருக்கு 15-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை அவருக்கு நான்கு முறை அபராதம் விதித்துள்ளது. இவை அனைத்தையும் எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்; அவ்வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தான் ஒரு ஆர்.எஸ்.எஸ் சங்கி என்று பெருமிதமாகக் கூறிக்கொள்ளும் சாந்திஸ்ரீ பண்டிட் (Shantishree Pandit) துணை வேந்தராக இருக்கும் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுகிறார்கள்.
பாசிச பி.ஜே.பி ஆட்சியில் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வேகமாகக் காவிமயமாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலை கல்வி நிலையங்களிலிருந்து விரட்டியடிக்க வேண்டியது உடனடித் தேவையாக உள்ளது.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube