‘மாட்டின் காவலர்’ ஆளும் உத்தரபிரதேசத்தில் அரசு பள்ளிக்கூடம் மாட்டு கொட்டகையாக மாறிய அவலம் நடந்திருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலம், அலிகரில் உள்ள கோராய் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியும் ஆரம்ப சுகாதார நிலையமும் தற்காலிக மாட்டுக் கொட்டகையாக மாற்றப்பட்டிருக்கிறது. 700-க்கும் அதிகமான வயதாகி கைவிடப்பட்ட மாடுகளை பயிர்களை மேய்வதாகக் கூறி அடைத்து வைக்கிறார்கள் அந்தப் பகுதி விவசாயிகள்.

“மாடுகள் எங்களின் பயிர்களை அழித்து வருகின்றன. நெடுநாளாக தெருவில் திரியும் மாடுகளை அடைத்து வைக்க அரசு கொட்டகைகள் அமைக்கக் கேட்டிருந்தோம். ஆனால் அரசு அதற்கு ஏற்பாடு செய்யவே இல்லை” என்கிறார் ஒரு விவசாயி.

பள்ளி நடந்து கொண்டிருக்கும் போதே, பள்ளி வளாகத்துக்குள் மாடுகள் அடைக்கப்பட்டன. பின்னர் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு , மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.  இந்த பிரச்சினையில் தலையிட்ட அலிகர் மாவட்ட நீதிபதி சிபி சிங், பல கிராமங்களில் மாட்டு கொட்டகைகள் கட்டும் பணியை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

படிக்க:
மாடு விற்கத் தடை : மரணத்தின் விளிம்பில் மராத்வாடா விவசாயிகள் !
♦ மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை

பள்ளியில் மாடுகளை அடைத்து வைத்திருப்பது குறித்து புகார் வந்திருக்கிறது. இது குறித்து விசாரித்து, பிரச்சினையை தீர்த்து வைக்க அதிகாரிகளை அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காவிகள் கலவரம் நடத்திய புலந்தசாகர் பகுதி விவசாயிகளும், தெருவில் சுற்றித் திரியும் மாடுகளால் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.  மாடுகள் வயல்களில் புகுந்துவிடாமல் இருக்க இரவு நேரங்களில் காவல் காத்துக் கிடக்கின்றனர் விவசாயிகள்.

இப்படி தெருவில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாகனத்தை சேதப்படுத்தியிருக்கிறது காவி கும்பல். மாடுகள் கசாப்புக்கு அனுப்பப் படுவதாக பரவிய வாட்சப் வதந்தியை நம்பி களத்தில் இறங்கியதாக சொல்லியிருக்கிறது காவி கும்பல்.

வழக்கமாக வயதான மாடுகள் கசாப்புக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பிரச்சினைக்கு மிக எளிதான தீர்வு இது. ஆனால், பசு மாதாவின் பிள்ளைகள் மாடுகளை வெட்டக்கூடாது என கிளம்பியுள்ளதால், கைவிடப்பட்ட அந்த மாதாக்கள் வேறு வழியின்றி தெருக்களில் சுற்றித் திரிகின்றன.  பகுத்தறிவில்லாத, யதார்த்தம் புரியாத மாட்டு மூளை கும்பல் ஆட்சி செய்தால், பள்ளிக்கூடங்கள் மாட்டு கொட்டகைகளாகத்தான் மாறும். மாட்டில் பெயரால் இந்த நாட்டில் எத்தனை அபத்தங்கள், வன்முறைகள், பிரச்சினைகள் வருகிறது பாருங்கள்!

தமிழாக்கம் : கலைமதி
நன்றி: அவுட்லுக்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க