பரிமலை கோவிலுக்குள் இரண்டு பெண்கள் சென்று வழிபட்டதன் மூலம் அக்கோவிலில் பெண்களின் உரிமையை நிலைநாட்டி உள்ளனர். அதனைத் தொடர்ந்து கோவில் நடையை மூடி தீட்டுக் கழிக்கும் சடங்கை மேற்கொண்டுள்ளனர் சபரிமலை தந்திரிகள். கேரளா முழுவதும் பல இடங்களில் சங்க பரிவார காலிகள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

சபரிமலைக் கோவிலுக்குள் நுழைந்து தமது உரிமையை நிலைநாட்டிய இரண்டு பெண்களுக்கும் ஆதரவு தெரிவித்து, வாழ்த்தும் விதமாகவும், பெண்களின் நுழைவை தீட்டு எனக் கூறி பரிகார பூஜை செய்த தந்திரிகளைக் கண்டித்தும், கேரளாவில் மதக்கலவரத்தை தூண்டும் ஆர்எஸ்எஸ், பிஜேபி ௧ாலி௧ளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், பந்தளம் மன்னர் குடும்பத்தையும், கோவில் தந்திரிகளையும், தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக சிதம்பரம் கஞ்சித் தொட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேரணியாக சென்றனர்.

பேரணியின் வழி நெடுகிலும் RSS, BJP, காவி கும்பலுக்கு எதிராகவும், தந்திரியின் தீண்டாமை நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். பேரணியின் இறுதியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்விற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் மா.மணியரசன் தலைமை தாங்கி உரையாற்றினார்.

புமாஇமு
தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – கடலூர்
தொடர்புக்கு – 97888 08110

3 மறுமொழிகள்

 1. சபாஷ் ! சரியான கோரிக்கை . . !
  இக்கோரிக்கை இரு மாநிலங்களிலும் வலுப்பெறட்டும் !

 2. உச்சநீதிமன்றம் முல்லைப்பெரியாறு அணை உயரத்தை உயர்த்திக்கொள்ள தீர்ப்பு கொடுத்த பிறகும் அதை நிறைவேற்ற விடாத கேரளா முதலமைச்சரை முதலில் கைது செய்யுங்கள்.

  செயின்ட் மேரி’ஸ் சர்ச் பற்றி உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை நிறைவேற்றாத கேரளா முதலமைச்சரை முதலில் கைது செய்யுங்கள்.

  உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை என்றால் கேரளா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வீட்டுக்கு போகட்டும்.

  ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக இருந்தால் கம்யூநிஸ்ட் சமூகவிரோதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துகொள்கிறார்கள் ஆனால் முத்தலாக் எதிராக இவர்களின் பித்தலாட்டம் சந்தி சிரிக்கிறது.

  • //உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை நிறைவேற்றாத கேரளா முதலமைச்சரை முதலில் கைது செய்யுங்கள்.//
   யாருகிட்ட சொல்லுறீங்க ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க