மாணவர்களை அடிமைகளாக்கும் பார்ப்பனிய சதி | முனைவர் ரமேஷ் | வீடியோ

ஐ.ஐ.டி., எய்ம்ஸ்., இந்தியாவின் எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் சமஸ்கிருதத்தையும் புராணக் குப்பைகளும் கட்டாய பாடமாக திணித்திருக்கிறார்கள்.

புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, அறிவியக்கத்தின் அவசியம் என்ற தலைப்பில் CCCE அமைப்பைச் சேர்ந்த முனைவர் ரமேஷ் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில், இன்றைய நிலையில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் கூட கட்டாயமாக சமஸ்கிருதம் படித்தாக வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்திருப்பதையும் என்பதையும்  ஐ.ஐ.டி., எய்ம்ஸ்., என இந்தியாவின் எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு சமஸ்கிருதத்தையும் புராணக் குப்பைகளும் கட்டாய பாடமாக திணித்து வருவதையும் அம்பலப்படுத்தி பேசினார்.

மேலும், பள்ளி கல்லூரிகளின் மாணவர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கும், இத்தகைய பாடத் திட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம், மாணவர்களை ஒரு அடிமையாக வளர்த்து, அவர்களின் ஆயுள் முழுவதும் அவர்களைச் சுரண்ட முடியும் என்பதையும், இதற்கு எதிராக பேராசிரியர்களும் மாணவர்களும் கல்வியாளர்களும் பெற்றோர்களும் சேர்ந்து ஓர் அமைப்பை உருவாக்காமல் நமக்கும் நம் தலைமுறையினருக்கு விடுதலை கிடையாது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க