சனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள்

சென்னையில் கருத்தரங்கம்!

மக்களின் சனநாயக உரிமைகளைப் பறிக்கும் கருப்புச் சட்டங்களைக் கண்டித்து சென்னை பத்திரிகை நிருபர்கள் சங்கத்தில், சனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழுவின் சார்பில் அரங்கக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இடம் : பத்திரிக்கை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை
நாள் : 09/02/2019 – மாலை 4மணி

கருத்துரையாளர்கள்:

மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்
கிராந்தி சைதன்யா, CLC, ஆந்திரா
பேராசிரியர் அ.மார்க்ஸ், தலைவர், NCHRO
பேராசிரியர் கருணாநந்தன், CPDR-TN
மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு
வழக்கறிஞர் பாரதி, சனநாயக வழக்கறிஞர் சங்கம்
வழக்கறிஞர் ராஜா, குடியுரிமை பாதுகாப்பு நடுவம்
வழக்கறிஞர் மில்டன், செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
வழக்கறிஞர் புகழேந்தி, இயக்குநர், சிறைக்கைதிகள் உரிமை மய்யம்

படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்

இந்தியாவில் காலனிய ஆதிக்க காலகட்டம் முதல் நடைமுறையில் உள்ள பல்வேறு கருப்புச் சட்டங்கள் மூலம் சமூக உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஊபா உள்ளிட்ட இத்தகைய கருப்புச் சட்டங்கள், மக்களின் கருத்துரிமையை பறிப்பதோடு, அவர்களது உயிர்வாழும் உரிமையையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.

இத்தகைய கருப்புச் சட்டங்களை நீக்க உடனடியாக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் உள்ளது. அதனை விரிவாக எடுத்துரைக்கவிருக்கும் இந்தக் கருத்தரங்கத்தில், அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க