றுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடும் மாநிலத்தை ஒரு இந்துத்துவ ரவுடி சாமியார் ஆளும்போது, எதற்கு முக்கியத்துவம் தருவார்? நிச்சயம், இந்துத்துவ வெறியை வளர்க்கவும், போலீசுக்கு தீனி போடவும்தான் அல்லவா? உத்திர பிரதேச மாநிலத்தை ஆளும் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்த 2019-20 ஆண்டுக்கான பட்ஜெட்டில் கிராமப்புறங்களில் சுற்றித்திரியும் பசுக்களுக்கான ‘கோ சாலைகள்’ அமைக்க ரூ. 247 கோடி ஒதுக்கியிருக்கிறது. மேலும் ரூ. 200 கோடி, நகர்ப்புற தெருக்களில் சுற்றித்திரியும், கைவிடப்பட்ட பசுக்களுக்கான காப்பகங்கள் கட்டவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் ரூ. 5 லட்சம் கோடிக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. இதில் ரூ. 500 கோடி ‘பசு பாதுகாப்பு’க்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, ஆதித்யநாத் அரசின் பட்ஜெட்டில் பெரும்பகுதி ‘இந்துத்துவ’ திட்டங்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன.

கைவிடப்பட்ட பசுக்களை ‘பாதுகாக்க’ பசு வரி வசூலிக்கப்படும். இதன் மூலம் ரூ. 165 கோடி வருமானம் கிடைக்குமாம். இந்த வருமானத்தில் ரூ. 56 கோடியில் மதுராவில் பால் பண்ணை அமைக்கப்படுமாம்!

இல்லாத ராமன் கோவிலை தரிசிக்க அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்ட ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்துத்துவ ஆன்மீகத்தை வளர்க்கும் வகையில் அயோத்தியா, வாரணாசி, மதுரா ஆகிய இடங்களில் ரூ. 650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்துத்துவ செத்த மொழியான சமஸ்கிருதத்தை வளர்க்க ரூ. 242 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியாக ரூ. 30 கோடி சமஸ்கிருத பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தனியாக ரூ. 42 கோடி சமஸ்கிருதத்தை புரோமோட் செய்யவும் பயன்படுத்தப்படுமாம். இப்படியாக சுமார் ரூ. 1500 கோடி வரை இந்துத்துவத் திட்டங்களுக்கு மட்டுமே செலவிடப்படுகிறது.

மக்களவை தேர்தல் வரவிருப்பதையொட்டி பொய்ச் செய்திகளை பரப்பி கலவரங்களைத் தூண்ட உதவும் வகையில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இலவச வை ஃபை வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு.

படிக்க:
♦ அடுத்த முறை யோகி வரமாட்டார் – உ.பி ஆம்புலன்ஸ் ஊழியர் ஆனந்த் நேர்காணல்
♦ கேள்வி பதில் : யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு சரியான அலசலை தருவீர்களா

மோடி வெத்து திட்டமான ‘ஸ்வச் பாரத் மிஷன்’ திட்டத்துக்காக ரூ. 6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பகுதி கும்பமேளா குப்பைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஆங்…எண்கவுண்டர் ஸ்பெஷல் ஆதித்யநாத், போலீசுக்கு எதுவும் செய்யாமல் விட்டுவிடுவாரா என்ன? போலீசு படையை நவீனமாக்க ரூ. 204 கோடி ஒதுக்கியிருக்கிறார். ரூ. 700 கோடி புதிதாக 36 காவல் நிலையங்களைக் கட்டவும் பயிற்சிகளை வழங்கவும் ஒதுக்கியிருக்கிறார்.  ரூ. 700 கோடி போலீசு குடியிருப்புகளுக்கும் ரூ. 400 கோடி புதிய மாவட்டங்களில் காவல் அலுவலகங்களைக் கட்டவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த, மூன்றாண்டுகளில் எண்கவுண்டர்கள் புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்ப்பார்க்கலாம்.

இராணுவ பணிக்கு மாணவர்களை தயார்படுத்தும் சைனிக் பள்ளிகளுக்கு ரூ. 26.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

போலீசுக்கு ரூ. 2000 கோடி; பசு பாதுகாப்புக்கு ரூ. 500 கோடி; செத்த மொழியின் வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி என இந்து ராஷ்ட்டிரத்தின் போலீசு – இந்துத்துவா  கூட்டணியின் பட்ஜெட்டாக உள்ளது ஆதித்யநாத்தின் இந்த பட்ஜெட்.

கலைமதிகலைமதி
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க