டக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்! என்ற தலைப்பில் பிப்-23 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டை தடுத்து நிறுத்துவதற்கு சட்டரீதியாகவும், சட்ட விரோதமாகவும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது, அடிமை எடப்பாடி அரசின் போலீசு.

மாநாட்டின் நோக்கம் குறித்து பேருந்துகள், இரயில்கள், கடைவீதிகள் மற்றும் தெருமுனைகளிலும் என மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சுவரொட்டி ஒட்டியதற்காக கைது; சுவரெழுத்து எழுதியதற்காக கைது; பிரசுரம் விநியோகித்ததற்காக கைது என அரசின் அடக்குமுறை தொடர்ந்த போதிலும் ”எதிர்த்து நில்!” என்ற முழக்கம் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது!

படிக்க:
மக்கள் அதிகாரம் : தஞ்சையில் 9 தோழர்கள் கோவில்பட்டியில் 5 தோழர்கள் கைது சிறை !
திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !

விருத்தாசலம்திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வேப்பூர் பகுதியில் மக்கள் அதிகாரம் மாநாடு சுவர் விளம்பரம்.

திருச்சி திண்டுக்கல் மற்றும் திருச்சி மதுரை நெடுஞ்சாலையில்  மக்கள் அதிகாரம் திருச்சி மண்டலம் சார்பாக எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள்.

 

சென்னை மண்டலம் சார்பாக சென்னை வேலூர் பகுதிகளில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள்.

 

பென்னாகரம் பகுதியில் ஆட்டோ ப்ளக்ஸ் விளம்பரம்.சுவரெழுத்து பிரச்சாரம் …

தெருமுனைப் பிரச்சாரம் …

பேருந்து பிரச்சாரம் …

சுவரொட்டி பிரச்சாரம் …

#ResistCorporateSaffronFascism

மக்கள் அதிகாரம்
தொகுப்பு:
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

1 மறுமொழி

  1. வினவு,
    இளம் பெண் தோழரின் பிரச்சாரம் அருமையாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இது சமூக வளைதளங்களில் பெரிதாக பகிரப்பட வேண்டும். இந்த காணோளியை மட்டும் தனியாக பகிர்வதற்கு லின்க் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும்

Leave a Reply to S.S.கார்த்திகேயன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க