திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !

கோவனின் பாடல் பாடப்படும் என்பதால், மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாநாட்டிற்கு தடை விதிப்பதாகக் கூறியிருக்கிறது திருச்சி மாநகர போலீசு ! அப்படி என்ன பாடல் அது ?

க்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாநாட்டிற்கு சட்டவிரோதமாக அனுமதி மறுத்திருக்கும் போலீசு, அதற்கான காரணங்களில் ஒன்றாக, “ ம.க.இ.க-வின் கோவன் அங்கு பாடுவார். அந்தப் பாடல் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டிருந்தது.

மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவில் அப்படி என்ன பாடலை பாடப் போகிறார் தோழர் கோவன் ?

உண்மையில் வானைத் தொடும் பாடல்தான் அது .. விண்ணைத் தொடும் பட்டேல் சிலையும், விண்ணைத் தொடும் ரஃபேல் விமான பேர ஊழலும்தான் பாஜகவையும், அதன் எடுபிடி போலீசையும் அப்பாடலைக் கண்டு மிரளச் செய்திருக்க வேண்டும்..

பாடல் வரிகள் :

உலகத்திலே பெரிய சிலை பட்டேலு…
அதுக்கு உள்ளே போயி ஒழிய பாக்குது ரஃபேலு…

அம்பானி அடிச்சான் கோலு…
அறுந்து தொங்குது ரீலு…

30,000 கோடி அம்பானிக்கு ரஃபேலு..
மோடிஜி ஆசியோட நீரவ் மோடி அம்பேலு..

சீனா கிட்ட செஞ்சு வாங்குன “Made in China” பட்டேலு
இதான் “Make in india”வாம்… கேட்டுக்கடா கோவாலு…

ஆக்சிசன் சிலிண்டர் இல்லை… பிஞ்சு கொழந்த சாகுது… (முழுப்பாடலையும் கேட்க)

பாருங்கள் ! பகிருங்கள் !

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க