ரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடந்துவரும் கூட்டணி பேரங்கள் குறித்து தமிழக மக்களின் மனநிலை என்ன, அதிமுக அணியில் பாஜக இடம்பிடித்து அதிக இடங்களில் போட்டியிடுவதற்காக மோடி, அமித்ஷா கும்பல் தமிழகத்தின் மீது காட்டிவரும் அளவற்ற அன்பு மற்றும் தமிழ்நாட்டு நலனில் மிகவும் அக்கறை கொண்டது போல் நிறைய திட்டங்களை அறிவித்தல், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருகை தருவது என்ற கூத்துக்கள் தினம் தினம் அரங்கேறி வருகின்றன.   இந்த நிலையில் மோடி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று தமிழக உயர்கல்வித்துறை மாணவர்களிடம் கேள்வி எழுப்பினோம்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கெளதம், இர்பான், அனில், ஷாரில் உட்பட நண்பர்கள் :

தயங்கியபடியே மாணவர்கள் ஒவ்வொருவரும் கேள்வியை உன்னிப்பாகக் கவனித்தனர். ஆனால், ஒருவரும் பேச தயாராக இல்லை என்பதை அவர்களின் உடல்மொழி உணர்த்தியது. “மச்சான், நீ சொல்லுடா, மச்சான் நீ சொல்லுடா…, சாரிங்க.. அரசியல் மேட்டர்-ல எக்ஸ்பேர்ட் ஒருத்தன்  இங்க இல்ல” என்று பதில் சொல்வதைத் தவிர்த்தனர். கேமரா ஏதும் வெச்சுருக்கிங்களா என்று இர்பான் கேட்டார். ஒரு இறுக்கமான சூழல் நிலவியது. நாங்கள் வீடியோ எதுவும் எடுக்கவில்லை என்பதை உத்திரவாதப்படுத்திய பிறகே மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தனர்.

” இங்க பாருங்க காலேஜ்-ல ஒரு ஃபங்சன் நடக்குது அதுக்கு பேரு குருஷேத்ரா-வாம்.  இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் துணைவேந்தர் சூரப்பாவையும் உள்ள திணிச்சிட்டாங்க… இன்னொரு முறை மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டை விட்டு ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை.”

‘இப்படியே நீங்க எல்லாரும் ஓடிட்டா நாட்ட யாரு பாத்துக்குவா?’

“எல்லாரும் போயிட்டா மீதி ஒரு 10, 15 பாஜககாரனுங்காதான் இருப்பானுங்க… எது வேணும்னாலும் பண்ணிகிட்டு போகட்டும்” என்றார் ஒரு மாணவர். மற்றொரு மாணவர் மெதுவாக, “எல்லாரும் வெளிநாடு போயிட்டா எப்படி?  வேற என்ன பண்றது, மோடிக்கு எதிரா ஓட்டுப்போட வேண்டியதுதான்” என்று கேள்வியும் பதிலுமாக விவாதிக்க ஆரம்பித்தனர்.

மாணவர் என்ற முறையில் உங்களுக்கு மோடி எந்தக் கெடுதலும் செய்தாரா? ஏன் மோடியை இந்தளவுக்கு வெறுக்கின்றீர்கள்?

“தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்ல… சரிதான்… ஆனா, எங்க எல்லாத்தோட குடும்பமும் மோடியால பாதிக்கப்பட்டிருக்கே… ஜிஎஸ்டி கொண்டு வந்ததுக்கப்புறம் எங்கப்பாவோட பிசினசே போச்சு… இந்த நிலைமையில பிஜேபி-க்கு யாராவது ஓட்டு போடுவாங்களா… என்னோட சாய்ஸ் திமுக தான். அவுங்க கிட்ட தான் கொஞ்சம் சரக்கு இருக்கு. பிராபப்லிட்டி படி பாத்தா திமுக-வுக்குத்தான் சான்ஸ் இருக்குது.

“ஜெயலலிதா இருந்தப்பயாவது பிஜேபி-ய ரெஸ்டிரிக்ட் பண்ணி வெச்சாங்க. இப்ப இருக்குற ஓபிஎஸ், இ.பி.எஸ் ரெண்டு பேரும் சுத்த வேஸ்ட். நீட் வந்துடுச்சு, சூரப்பா வந்தாரு, அவுங்க ஆளுங்கள எல்லா இடத்துலயும் நுழைச்சுட்டாங்க. ஜெயலலிதா இருந்தப்ப எலெக்சனுக்கு இத்தன சீட் கொடுன்னு பாஜக-வால ஆட்டம் போட்டுருக்க முடியுமா? தமிழ்நாட்ல இருக்குற கவர்மெண்ட் ஜாப்ல கூட நார்த் இண்டியன்ஸ் ஈசியா நுழைஞ்சிடுறாங்க.. இதுல ஆச்சரியம் என்னான்னா தமிழ் தேர்வுல தமிழ்நாட்டு மாணவர்கள் ஃபெயில் ஆகுறாங்க… ஆனா நார்த் இண்டியன்ஸ் நிறைய மார்க் எடுக்குறாங்க… இதெல்லாம் எப்படி சாத்தியமாகுது?” என்றார் ஒரு மாணவர்

தமிழ்நாட்டுல அரசியல் பேசுறதுக்குன்னு,  சரியான பொலிட்டிக்கல் பிளாட்பார்மே இல்ல. கேரளாவ எடுத்துக்கங்க….ஸ்கூல் லெவல்லயே ஸ்டூடன்ஸ் அரசியல் பேச ஆரம்பிச்சுடுவாங்க… அசோசியேஷன் இருக்கும்… போன வருசம் தமிழ்நாட்டுல பேருந்து கட்டணத்த உயர்த்துனப்ப நாங்க அது பெரிய அநீதின்னு நெனச்சோம். அண்ணா யுனிவர்சிட்டி-ல உள்ள ஸ்டூடன்ஸ்-ல 10 சதவீதம் பேரு பேருந்துகள்-ல வர்றவங்கதான். பேருந்துகள்ல வர்றவங்க எல்லாரும் புறக்கணிக்கணும், வேற ஏதாவது பண்ணி நம்மளோட கோவத்த காமிக்கணும்னு நெனச்சோம். ஆனா, மத்த 90 சதவீத மாணவர்கள், பஸ்ச புடிச்சி காலேஜுக்கு வந்துட்டாங்க… இதுல எப்படி போராட்டம் பண்றது-ன்னு தெரியல.

படிக்க:
எதிர்த்து நில் திருச்சி மாநாடு : அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த தோழர்கள் 4 பேர் கைது
இராணுவத்தின் அத்துமீறலைக் கூறிய பேராசிரியர் பணிநீக்கம் – போலீசு வழக்கு !

இதே விசயம் கேரளாவுல நடந்துச்சுன்னா, ஒரு ஸ்கூல் ஸ்டூடண்டே என்ன பண்ணுவான் தெரியுமா… பஸ்சில ஏறி உக்காந்துக்குவான். ஆனா, டிக்கட் எடுக்க மாட்டேன்னு போராட்டம் நடத்துவான். அதனாலதான் சொல்றேன், இங்க உள்ள கட்சிகள் கிட்ட அந்த மாதிரியான அரசியல் இல்ல… ஒரு வேளை பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்திருந்தா இப்ப இருக்குற நெலம மாறியிருந்திருக்க வாய்ப்புண்டு.”

“நாங்கெல்லாம் திருச்செங்கோடு பள்ளிகள்-ல படிச்சி 100-க்கு 98 மார்க் வாங்கி வந்தவுங்க. ஸ்கூல்ல படிக்கிறப்ப டாப்பரா வரனும்கிறதுதான் ஒரே இலக்கா இருந்திச்சு. நல்லா படிச்சு, நல்ல மார்க் வாங்குனதுக்கப்புறம், நல்ல காலேஜ்-ல அட்மிஷன் வாங்க அல அலன்னு அலஞ்சோம். ஒரு வழியா காலேஜ்-ல செட்டில் ஆன பிறகு கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆகனும்கிறதுக்காக, கடுமையா படிச்சோம். நல்ல மார்க் எடுத்தோம். ஆனா, நாங்க நெனக்கிற டாப் 10 கம்பெனிகள்ல வேல யாருக்கும் கிடைக்கல.”

“சரி, கிடைக்கிற வேலக்கு போறோம்னு வெச்சுக்கங்க, அங்க என்ன நடக்கும்? மினிமமா 9 மணி நேரம் எங்கள வேல வாங்காம விட மாட்டாங்க… வாரம் புல்லா வேல பாத்து சண்டே மட்டும் தான் ஃப்ரீயா இருப்போம். அதுவும் டிவி பாக்குறதுக்கே சரியா போயிடும். இதுல எங்க நாங்க இனிமே சொசைட்டிய பத்தி கவலப்பட முடியும்… இப்ப இருக்குற வேலை வாய்ப்பு நிலைமையெல்லாம் பாக்குறப்ப ஏண்டா கஷ்டப்பட்டு படிச்சோம்னு இருக்குது… ஸ்டூடன்ஸா இருக்கும்போதே  அரசியலுக்கு வந்தா இழப்பு வரும்னு சொல்றாங்க… உண்மையிலேயே, இழப்பு நமக்கில்ல, அரசியல்வாதிக்குத்தான்.. இது இப்பத்தான் நமக்குப் புரியுது…

“எங்க நிலைமை இப்படின்னா, அடித்தட்டு மக்களோட நிலைமையெல்லாம் இன்னும் மோசம். குறிப்பா வடநாட்டுல ஒரு நாளைக்கி 100 ரூபா சம்பளம், ஒரு வேள சாப்பாடும் கெடச்சதுன்னா அத மிகப்பெரிய சொர்க்கமா எடுத்துக்குவாங்க… இப்ப அதுக்கும் வழியில்லாம தமிழ்நாட்டுக்கு நார்த் இண்டியன்ஸ் நெறையா வராங்க… கூலி வேலை-ன்னு பல்வேறு காரணங்களுக்காக இங்க வர்றாங்க… தமிழ்நாட்டுல ரொம்ப சேஃபா, ஹேப்பியா இருக்குறதா நெனக்கிறாங்க… பிஜேபி ஆட்சியில இருக்குற நார்த் ஸ்டேட்ஸ்-லேருந்து தான் நெறையா பேர் வர்றாங்க… ஆனா பிஜேபி கவர்மெண்டுக்கு சவுத் இண்டியான்னா ஆகவே மாட்டேங்குது… ஒன்னு வேனும்னா பண்ணலாம், சவுத் இண்டியாவ மொத்தமா பிரிச்சி தனி நாடா அறிவிக்க சொல்லிட்டு உங்க உறவே வேணாம்னு நிம்மதியா இருக்கலாம்.”

“காஷ்மீர்ல வெடிகுண்டு வெடிச்சி 50 பேருகிட்ட இறந்து போயிருக்காங்க… அது ஏன் எலெக்சன் டைம்-ல மட்டும்  குண்டு வெடிக்கிது, தேசப் பற்று பொங்கி வழியுதுன்னு தெரியல. அவ்ளோ டைட் செக்யூரிட்டி இருக்குற எடத்துல எப்படி 350 கிலோ எடையுள்ள குண்ட அசாதாரணமா வெடிக்க வைக்க முடிஞ்சது. செத்துப்போனது அப்பாவி வீரர்கள்தானே.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் போன வருசமே சொன்னாரு… இந்தியாவே படையெடுத்து வந்தாலும் நாங்க சண்டை போட தயாரா இல்லன்னு. ஆனா மோடி என்னடான்னா போர், போர்-ன்னு கத்திகிட்டிருக்காரு… மோடி பேசுறத பாத்தா இந்த மாதிரி ஏதோ நடக்கனும்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்ததுமாதிரியே தெரியுது… இன்னும் குறிப்பா சொல்லனும்னா நோ பாகிஸ்தான் நோ மோடி அவ்ளோ தான்” என்றார்கள் நெத்தியடியாக…

7 மறுமொழிகள்

 1. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மாணவர் விடுதியிலத்தான் கொசுக்கடி, தரமில்லாத சாப்பாடுனு மாணவர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தால், நூத்துக்கு தொண்ணூத்தெட்டு மார்க் எடுத்து நம்பர் ஒன் காலேஜ் அண்ணா யுனிவர்சிட்டில படிக்கற மாணவர்களின் நிலைமை அத விட மோசமா இருக்கே?

  நல்ல படிஞ்சா நெம்பர் ஒன் காலேஜ், படிச்சப்புறம் நல்ல வேலை இதெல்லாம் ஒண்ணும் வேலைக்காகது என்பதை காட்டுது கட்டுரை.

  ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்களாவது, கேட்டரிங் வேலைக்கி போயி, தன்னுடைய வறுமைய சமாளிக்க கத்துக்கிட்டாங்க. அண்ணா யுனிவர்சிட்டில படிச்சிட்டு எந்த கூலி வேலைக்கு போக முடியும். நினைக்க அதிர்ச்சியா இருக்கு.

  அரசியல் தெரிஞ்சவங்களவிட, அரசியலே தெரியாதுன்னு நெனச்சிக்கினு இருக்கற மாணவர்கள் கோப பேச்சே தீர்க்கமான அரசியலாதான் இருக்கு. இது தான் பிஜேபிய பயமுறுத்துது.

 2. உண்மையா சொல்லுங்க தொப்பையும் சொட்டையும்மா இருக்கும் இவர்கள் முன்னாள் மானவர்கள் தானே ?

 3. //கேரளாவ எடுத்துக்கங்க….ஸ்கூல் லெவல்லயே ஸ்டூடன்ஸ் அரசியல் பேச ஆரம்பிச்சுடுவாங்க… அசோசியேஷன் இருக்கும்…// ஆமா அதனால் தான் கேரளாவில் படித்த ஒருவனுக்கும் வேலை கிடைக்காமல் மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று நாய் படாதபாடு படுகிறார்கள்.

  அப்படியே கேரளாவில் ஒரு தொழிற்சாலை கொண்டு வந்தால் நம் கம்யூனிஸ்ட்கள் போராட்டம் வன்முறை மூலம் அந்த தொழிற்சாலையை தலைதெறிக்க ஓட விடுவார்கள்.

  ஆமை புகுந்த வீடும் கம்யூனிஸ்ட் புகுந்த மாநிலமும் உருப்படாது.

 4. //மினிமமா 9 மணி நேரம் எங்கள வேல வாங்காம விட மாட்டாங்க… வாரம் புல்லா வேல பாத்து சண்டே மட்டும் தான் ஃப்ரீயா இருப்போம்// ஆமா இந்த கம்யூனிஸ்ட்களுக்கு எந்த வேலையும் செய்யாமலே சம்பளம் வாங்க வேண்டும்.

  இதுல சொசைட்டிய பத்தி கவலைப்படுகிறோம் என்று போலித்தனம் வேறு… ஊரில் இருக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் மூடி விட்டு தொழிலாளிகளை எல்லாம் நடு தெருவில் நிறுத்தி விட்டு கம்யூனிஸ்ட்கள் சொசைட்டி பற்றி பேசுவதற்கு தகுதியே கிடையாது.

  அதற்கு இவர்கள் 9 மணி நேரம் வேலை பார்த்து சொசைட்டிக்கு தீமை செய்யாமல் இருந்தாலே போதும்.

 5. எதற்கு தேர்தல் சமயத்தில் தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற கேள்வியை உங்களின் பாக்கிஸ்தான் கூட்டாளிகளிடம் தான் கேட்க வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க