டந்த 2020-21-ல் (ஒரு வருடத்தில்) மட்டும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு, ரூபாய் 5 லட்சத்து 5 ஆயிரத்து தொள்ளாயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்தியா இன்போலைன் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அதானி ஆசியாவிலேயே இரண்டாவது  பெரும் பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார்.
2020-21-க்கு முன்பு வரை அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு, ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி மட்டுமே; கடந்த 2020-21 ஒரே நிதியாண்டில் உயர்ந்த ரூபாய் 3 லட்சத்து 65 ஆயிரம் கோடியை சேர்த்தால் தற்போதைய அவருடைய குழுமத்தின் சொத்து மதிப்பானது ரூபாய் 5 லட்சத்து 5 ஆயிரம் கோடியாக உயர்ந்து, இந்தியா மட்டுமன்றி ஆசியாவின் கோடீஸ்வரகளின் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஒரே வருடத்தில் 261% வருமானம் உயர்ந்துள்ளது.
அதானி குடும்பத்தின் தினசரி வருவாய் ரூ 1002 கோடி என்ற வகையில் ஒரு ஆண்டில் அக்குடும்பத்தின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூபாய் 3 லட்சத்து 65 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது.
படிக்க :
அதானியின் பிடியில் அல்லல்படும் ஆப்பிள் விவசாயிகள் !
அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
இது எப்படி சாத்தியப்பட்டது? கடந்த ஒரு வருடத்தில் அதானி கிரீன் எனர்ஜியின் பங்கு மதிப்பு 551%, அதானி எண்டர்பிரைசஸின் பங்கு மதிப்பு 103 %, அதானி டிரான்ஸ்மிசனின் பங்கு மதிப்பு 38 %, அதானி பவரின் பங்கு மதிப்பு 38 % அதிகரித்தன் மூலம் இந்த அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளதாக அப்பட்டியல் தெரிவிக்கிறது. இது பங்குகளின் மதிப்பை பல்வேறு பங்குச் சந்தை தில்லுமுல்லுகள் மூலமும், ஊடக கருத்துருவாக்கங்கள் மூலமும் ஊதிப் பெருக்கிக் காட்டியதன் மூலமும் கிடைக்கப்பெற்ற மதிப்பு உயர்வு ஆகும்.
பளபளப்பான எண்ணெய் காகிதத்தை நோக்கி ஈர்க்கப்படும் ஈக்களைப் போல, இந்தப் பங்குகளின் மதிப்பை நம்பி பணம் போட்டிருக்கும் ஆயிரக்கணக்கான நடுத்தரவர்க்கத்தின் பணம் தான் அதானியின் கல்லாவை நிரப்பியிருக்கிறது. மேலும் மோடி அரசின் ஆதரவோடு வரி ஏய்ப்பு, அந்திய செலாவணி மோசடி, வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாமல் வாராக்கடனாக்கியது என பல திருட்டுத்தனங்களும் அடங்கும்.
மேலும், அதானியின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடமிருந்து குறைவான கூலியின் மூலம் சுரண்டப்பட்ட உபரி மதிப்பும் இதில் அடங்கும். இந்த அபரிமிதமான வளர்ச்சியானது, அதானி குடும்பத்தை சீனாவைச் சேர்ந்த தண்ணீர் பாட்டில் உற்பத்தியாளரை பின்னுக்கு தள்ளி ஆசிய அளவிலான பெரும் பணக்காரர்கள்  வரிசையில் 2-வது இடத்திற்கு உயர்த்தி உள்ளது.
போதாக்குறைக்கு இனிவரப்போகும் தேசிய பணமயமாக்கல் திட்டத்தின் கீழும், ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் விமானம், துறைமுகம், எரிசக்தி ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மூலமும், கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவித்துக் கொள்ள அதானி கும்பலுக்கு வழிவகுத்து தரப்பட்டுள்ளது.
நாட்டின் அரசு பொதுத்துறை நிறுவனங்களை அதன் சொத்துக்களை – சமூக சொத்துக்களை பாதுகாத்து பராமரிக்கவே இவர்களுக்கு வாக்களித்தோமே தவிர அந்நிய உள்நாட்டு அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களையும் சொத்துக்களையும் தாரைவார்க்க அல்ல.
பாஜக, காங்கிரஸ் என யார் வந்தாலும், இவர்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும் புதிய தாராளவாதக் கொள்கையை அதாவது ஏகாதிபத்திய முதலாளித்துவக் கொள்கையை முறியடிக்காத வரை, ஒரு தரப்பினரிடம் மட்டுமே சொத்துக்கள் குவிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட முடியாததாகும்.
இந்திய பெரும்பணக்காரர்கள் வரிசைப்பட்டியலில் அதானி உட்பட முதல் 10 இடத்தை பிடித்துள்ளவர்களின் மொத்த ஒருநாள் வருவாய் கடந்த வருடத்தில் மட்டும் ரூபாய் 2954 கோடி. மேலும், இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 23 லட்சத்து 28 ஆயிரம் கோடி. இதற்கு குறைந்தபட்சம் 5 சதவிதம் சொத்து வரியைப்போட்டாலே ருபாய் 1 லட்சத்து 16 ஆயிரம் கோடி கிடைக்கும். ம்ொத்தம் 1007 பேர் கொண்ட இந்தியப் பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் பத்துபேர் போக, மீதமுள்ள 997 கோடீஸ்வரர்களின் சொத்துகளுக்கு ஏற்ப வரியைப் போட்டாலே  போதும். பெட்ரோக்ல் விலையை குறைக்க முடியும்.
இதை ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவிக் கும்பலும் விரும்பாது. ஏனெனில், இக்காவிக்கும்பலின் எஜமானர்களான கார்ப்பரேட்டுகளின் பண தயவில்தான் வெற்றிப்பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். மேலும் இந்தக் கும்பலின் பொருளாதார ஆளுகையின் கீழ் தான் இந்து ராஷ்டிரத்தைக் கட்டமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஆகையால், தமக்கு படியளந்த பெருமாள்களுக்கு எதிராக ஒருபோதும் செயல்பட மாட்டார்கள்.
படிக்க :
நிலக்கரி சுரங்கங்களை குறிவைக்கும் அதானி நிறுவனம் !
விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !
அதனால்தான் புதிய தாராளவாதக் கொள்கையை தீவிரப்படுத்தத் தயங்கி வந்த காங்கிரஸ் கும்பலை கார்ப்பரேட் கும்பல் ஓரம் கட்டிவிட்டு பாசிச பாஜக கும்பலை அரியணையில் அமரச் செய்தது.
வாக்களிக்கும் மக்களின் வரியை கார்ப்பரேட் கும்பல் எளிமையாக சுருட்டிச் செல்வதற்கான பாதையை செப்பணிட்டுத் தருவது ம்க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களே. இன்று பாசிசக் கும்பல் அரியணையில் அமர்ந்து கொண்டு நமது பொதுத்துறை முதல் அனைத்து இந்திய வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கிறது. இதற்கு எதிரான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க மக்களை அணி திரட்டுவதன் மூலம் தான் இந்தக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட முடியும்.

கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க