கதிரவன்
இளையராஜாவின் மூலம் தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் !
இப்பாசிச கும்பலை தமிழகத்தில் வேறூன்றாமல், போராடி மண்ணோடு பிய்த்து எறிவது பாசிச எதிர்ப்பை மேற்கொள்ளும் அனைவரின் கடமையாகும். இக்கடமையை நிறைவேற்ற சட்டத்தையும், தேர்தலை மட்டும் நம்பியிராமல் களத்தில் இறங்கி போராடுவது காலத்தின் கட்டாயம்.
எது அபாயகரமானது : வாரிசு அரசியலா? பாசிச அரசியலா?
கிறித்தவர்கள், முஸ்லீம்கள், தலித்துக்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வீடுகளை இடித்து தீக்கிரையாக்குவது, வாழும் இடத்தைவிட்டு விரட்டியடிப்பது போன்ற கொடூரமான செயல்களை செய்து அதை நியாயப்படுத்தும் அளவிற்கு கொடூரமானது அல்ல வாரிசு அரசியல்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை !
IMF-ம் சரி சீனா, இந்தியா போன்ற நாடுகளும் சரி தாங்கள் தரும் கடனுக்காக அவைகள் திணிக்கும் அனைத்து சுமைகளையும் ஏற்கனவே மறுகாலனியாக்க கொள்கையால் பாதிக்கப்படும் மக்கள்மீதுதான் சுமத்தப்படும் என்பதில் ஐயமில்லை.
உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்காக நடக்கும் கழுத்தறுப்பு போரில் மடியப்போவது என்னவோ மக்களும் ராணுவ வீரர்களும் தான். ஆனால், ஆதாயம் அடையப்போவது ஆளும் வர்க்கமும் - கார்ப்பரேட்டுகளும் தான்.
எச்சரிக்கை – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் || களத்தில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக !
பாசிசத்திற்கு எதிராக போராடும் ஜனநாயக சக்திகளை, திமுக அரசு ஒடுக்க நினைத்தால் தமிழக களத்தை பாஜகவுக்கு உகந்ததாக அமைத்துக் கொடுத்த ‘பெருமை’ அதிமுகவிற்கு அடுத்து திமுக-வையே வந்து சேரும்.
கிரிப்டோ கரன்சி : அரசுக்கு இணையான பொருளாதாரம் !
தனியார் சிட் ஃபண்ட் நிறுவனம் ஏமாற்றினால் குறைந்தது வழக்காவது போடலாம். இதில் அதற்குக் கூட வழியில்லை. காரணம் இது ஒரு நிறுவனமல்ல. தனி நபர்களுக்கு மத்தியில் நடக்கும் சட்டத்துக்கு உட்படாத பணப் பரிவர்த்தனை.
உக்ரைனை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர துடிக்கும் ரஷ்யா – அமெரிக்கா!
உக்ரைனை தன் ஆதிக்கத்தின்கீழ் தொடர்ந்து தக்க வைக்க ரஷ்யாவும், தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர அமெரிக்காவும் நடத்துகின்ற கழுத்தறுப்புக்கான போர் நடவடிக்கையே இது.
குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை சாதி - மத எதிர்ப்புப் போராட்ட மரபைச் சிதைப்பதே இவர்களது உடனடி நிகழ்ச்சிநிரல்.
திருமண வயது 21 மசோதா : பெண்களை மேலும் அடிமைப்படுத்தும் சதித் திட்டம் !
திருமண வயது 18-ஆக இருந்தாலும் சரி, 21-ஆக இருந்தாலும் சரி பெண்களின் கல்வியிலும், சமூக அந்தஸ்திலும் மாற்றம் இன்றி எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது கள நிலைமைகளை பரிசீலித்தாலே தெரியும்.
பெருவெள்ளத்திலிருந்தும் பெரும் வறட்சியிலிருந்தும் தமிழகம் மீள்வது எப்படி ?
மழைநீர் வடிகால்கள் சரியான முறையில் இல்லாததன் விளைவாக வெள்ளப்பெருக்கில் மக்கள் தவிக்கின்றனர், நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஆனால் வெயில்காலங்களில் வறட்சி வாட்டுகிறது.
மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா !
மாநில அளவில் அணைகளின் தேவை, நீர்ப் பரப்பு, நிலப் பரப்பு, அணைகளுக்கான பகுதிகள் – அதற்கான கட்டுமான பணிகள் அனைத்தையும் தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் – மாநில சுயாட்சிக்கான ஜனநாயக உரிமைகளையும் பறித்துவிடும்.
3 வேளாண் சட்டங்கள் வாபஸ் – விவாதம் நடத்தினால் என்ன பயன் ?
சொல்லிக்கொள்ளப்படும் ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தை’ குழி தோண்டி புதைத்துவிட்டுத்தான் வேளாண் சட்டங்கள், இயற்றப்பட்டன. தற்போது திரும்பிப் பெறப்பட்டதும் நாடாளுமன்ற அடிப்படையிலான விவாதங்களினாலும் அல்ல.
பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி !
நமது நாட்டில் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் மக்களுக்கே கொடுக்கப்படாத ஆட்சியைக் கலைக்கும் அதிகாரத்தை, கங்காணி பணிக்காக நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு வழங்கியிருக்கிறது அரசியல் சாசனச் சட்டம். இதுவா ஜனநாயகம்?
இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி : தனியார்மயமாக்கும் மோடி அரசு !
பாதுகாப்புத் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதையும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதையும், நாட்டின் பாதுகாப்பை தனியார் இலாபவெறியிடம் அடமானம் வைப்பதையும் களத்தில் எதிர்ப்போம்
கல்வியை மேம்படுத்த தனியார்மயத்தை ஒழிப்பதே ஒரே வழி !
தனியார்மயம் தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதில் பங்குதாரர்களாக, அது மக்களை அடிக்கும் கொள்ளையின் கூட்டாளிகளாக, அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மாறிவிட்டனர்.