அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

அடக்குமுறைதான் ஜனநாயகமா? அடங்கிபோனால் மாறிடுமா... நான் உண்ணுவதை நீ தடுக்கிற... நான் எண்ணுவதை நீ மறுக்கிற... அதிகாரம் இருப்பதால் ஆடாதே... மக்கள் அலையாய் எழுந்தால்... காற்றாக அழிவாய்...

” கார்ப்பரேட் காவி பாசிசம்! எதிர்த்து நில்! ” மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் கோவன் மற்றும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவினர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

♠ மோடி – அம்பானி ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்தும் ”உலகத்துலே பெரிய சிலை பட்டேலு… அது உள்ள போயி ஒளிஞ்சிக்கிச்சி ரஃபேலு…” என்ற பாடல்;
♠ விடுதலை போராட்டத்தில் உணர்வுப்பூர்வமாகப் பங்கேற்று தியாகங்களை எதிர்கொண்ட இருட்டடிப்பு செய்யப்பட்ட இசுலாமியர்களின்  வரலாற்றை  நினைவுகூரும், ”சொல்லாத சோகம்… யாரும் வெல்லாத வீரம்…” என்ற பாடல்;
♠ தமிழகத்தில் தமிழிசையின் அலப்பறைகளை அலறவிடும் ”மலர்ந்தே தீரும்… தாமரை மலரந்தே தீரும்…”  என்ற பாடல்;
♠ கார்ப்பரேட் – காவி பாசிசத்தை அம்பலப்படுத்தும் ” அடக்குமுறைதான் ஜனநாயகமா? அடங்கிபோனால் மாறிடுமா…!” உள்ளிட்ட பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

தோழர் கோவனின் கலை நிகழ்ச்சிகளில் இந்த முறை கிடார் உள்ளிட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் துடிப்புடன் பாடலை அள்ளித்தந்தது !

இந்தப் பதிவில் அடக்குமுறைதான் ஜனநாயகமா? அடங்கிபோனால் மாறிடுமா…! பாடல் இடம்பெறுகிறது.

பாடலில் இடம் பெற்ற சில வரிகள்..

… நீ விரும்பவில்லை… நான் பேசக்கூடாது!
நீ ரசிக்கவில்லை… நான் பாடக்கூடாது!
நான் உண்ணுவதை நீ தடுக்கிற…
நான் எண்ணுவதை நீ மறுக்கிற…
அதிகாரம் இருப்பதால் ஆடாதே…
மக்கள் அலையாய் எழுந்தால்…
காற்றாக அழிவாய்…
காணாமல் போவாய்…
காவியே நீ ஒழிவாய்! …

பாருங்கள்.. பகிருங்கள்..!

அடக்குமுறைதான் ஜனநாயகமா? அடங்கிபோனால் மாறிடுமா…!

வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க