கிரீன்பீஸ், இந்தியா அமைப்பை சேர்ந்த பிரியா பிள்ளை 2015, ஜனவரி 11 அன்று இலண்டன் செல்ல இருந்த நிலையில் டெல்லி விமானநிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர் செய்த குற்றம் என்ன?

இந்திய நாட்டின் தேசிய நலனுக்கு கேடு விளைவிக்கும்படியாக இங்கிலாந்து பழங்குடி மக்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவிடம் (All-Party Parliamentary Group for Tribal Peoples) வாக்குமூலம் கொடுக்க திட்டமிட்டிருந்தார் என்று மோடி அரசு குற்றம் சாட்டியது.

ஆனால் மோடி அரசு இங்கே சொன்னது யாருடைய தேசிய நலன்?

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடிகளின் வாழிடத்தில் நிலக்கரியை தோண்ட அனுமதி பெற்ற விதேசி எஸ்ஸார் குழுமம் மற்றும் சுதேசி ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹிண்டல்கோ நிறுவனங்களின் நலன் தான்.

அதற்கடுத்த ஆண்டில் மே 9-ம் தேதி பழங்குடிகள் உரிமை செயற்பாட்டாளரான கிளாட்சன் டங்டங் (Gladson Dungdung) லண்டன் செல்லவிருந்த பயணம் தடுக்கப்பட்டது. சசெக்ஸ் பல்கலைக் கழகத்தில் (University of Sussex) ‘சுற்றுச்சூழல் வரலாறு மற்றும் தெற்காசிய அரசியல்’ என்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார்.

நன்றி : NEWS CLICK

இந்த இரண்டு சம்பவங்களிலும் வெளிநாடு செல்லவிருந்த இச்செயற்பாட்டாளர்களை கட்டுப்படுத்துவதற்கு அருவருக்கத்தக்க எச்சரிக்கையை இந்த அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. அவர்களது குற்றங்கள் அதிகபட்சம் அவர்களது பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். இருப்பினும், அதே மோடி அரசாங்கம் பெரும் பொருளாதார குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பித்து வெளியேறுவதை தடுக்கவில்லை.

மோடி அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் புலனாய்வு நிறுவனத்திடம் ‘சாராய’ விஜய மல்லையாவிற்கு எதிராக ‘கவன ஈர்ப்பு சுற்றறிக்கை’ இருந்த போதிலும் இலண்டனுக்கு அவர் தப்பி செல்வதற்கு உதவி செய்தது. மல்லையாவுக்கு மட்டுமே நடந்திருந்தால் ஏதோ கண்ணசந்த நேரத்தில் கொள்ளையன் தப்பி விட்டான் என்று கருத நமக்கு இடமிருக்கும். ஆனால் தொடர்ந்து நீரவ் மோடி, மெகுல் சொக்சி, நிதின் சண்டேசரா மற்றும் இன்னபிற குற்றவாளிகள் என இப்பட்டியல் நீளுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 27 பொருளாதார கொள்ளையர்கள் முதலீட்டாளர்களது பணத்தையும் பொதுமக்களது வரிப்பணத்தையும் ‘ஆட்டைய போட்டு’ வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கின்றனர்.

படிக்க:
தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !
♦ மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்…

இந்த கொள்ளையர்கள் மோடியின் பார்வையில் தான் தப்பி சென்றுள்ளனர். மாட்சிமை தாங்கிய இந்திய அரசின் வல்லமை அவர்களது திட்டங்களை தடுக்கவில்லை. அறிவுடை மாந்தர் எவருக்கும் இச்சம்பவங்கள் எளிதில் செரிக்காது.

இப்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார கொள்ளையர்கள் தப்பி செல்லுவதை வேடிக்கை பார்த்த மோடி தற்போது ‘மெயின் பிச் சௌகிதார்’ என்ற முழக்கத்தை கையிலெடுத்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘சௌகிதார்’ என்ற தம்பட்டதை சேர்க்கும் அந்த கண நேரத்திற்குள்ளேயே அவரது அடிப்பொடிகளும் ‘சௌகிதார்’ ஆகி விட்டார்கள். 27 கொள்ளையர்கள் தப்பியதை வேடிக்கை பார்த்த பின்னரும் புளகாங்கிதத்துடன் தன்னை ‘சௌகிதார்’ என்று அழைத்துக் கொள்வதை என்ன சொல்ல?

வாங்கிய ஆயிரக்கணக்கான கோடி கடனை செலுத்தாத பெரும் கொள்ளையர்களின் பட்டியல் ஒன்றை 2015, பிப்ரவரி 4 அன்று ஒன்றிய அரசாங்கத்தின் அலுவலகத்திற்கு முன்னாள் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் அனுப்பியிருந்தார். இதுவரை அதன் மீது ஒரு நடவடிக்கை கூட இல்லை. மைய தகவல் ஆணையத்தின் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்கு பின்னரும் ரிசர்வ் வங்கியும் தலைமை அமைச்சர் அலுவலகமும் அவர்களது பெயர்களை வெளியிடவில்லை. பா.ஜ.க.-வின் மூத்த தலைவரும் பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி கடுமையான கண்டனங்களை அதற்கு பதிவு செய்திருந்தார்.

நீரவ் மோடியின் பொருளாதார குற்றங்கள் குறித்து விசில் ப்ளோயர் எஸ்.வி.ஹரி பிரசாத்தும் தலைமை அமைச்சர் அலுவலகத்திற்கு எச்சரிக்கை செய்திருந்தார். அவரது முறையீட்டிற்கு பதிலும் கிடைத்தது. இந்தியாவின் தேசிய நலன் என்பது பொதுமக்களின் நலன் தான் என்று மோடி அரசாங்கம் கருதாயிருக்குமானால் நீரவ் மோடி தப்பியிருக்க முடியாது.

மோடி அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கினால் 2-ஜி குற்றம் சாட்டப்பட்டவர்கள்,  அனைவரும் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதரங்களுக்காக ஏழு ஆண்டுகள் வீணாகிவிட்டதாக நீதியரசர் கடுமையாக கண்டனம் செய்திருந்தார். இன்றும் தன்னை ‘சௌகிதார்’ என்று அழைத்து கொள்ளும் நெஞ்சுரம் மோடிக்கு இருப்பது தான் முரண்நகை.

கண்களை இருக்க மூடிக்கொண்ட காவல்காரார்

இந்தியாவின் வெளிப்படைத்தன்மைக்கு சிறப்பான பங்களிப்பை தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI Act) செய்திருக்கிறது. அதன் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கும் ஒரு கல்லை கூட மோடி இதுவரை புடுங்கவில்லை. மோடி அலுவலகம் பொதுவாக சொல்வதானால் மோடி அரசாங்கம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பகைமையுடனே பார்க்கிறது என்பதை என்னுடைய தனிப்பட்ட அனுபவம் சொல்கிறது. 2015-ம் ஆண்டில் தலைமை அமைச்சரை சந்திக்க யாரெல்லாம் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள் மேலும் அப்படி சந்திப்பதற்கு என்ன விதிகள் இருக்கின்றன என்று நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் தலைமை அமைச்சர் அலுவலகம் என்னுடைய கோரிக்கையை பரிகாசிக்கத்தக்க காரணங்களுக்காக நிராகரித்திருந்தது.

மேலும் தலைமை அமைச்சர் அலுவலகத்திற்கும் இன்னும் பிற அமைச்சர்கள் அலுவலகங்களுக்கும் நான் அனுப்பிய பல்வேறு கோரிக்கைகள் நியாயமற்ற முறையில் நிராகரிக்கப்பட்டன. இது மட்டுமல்ல குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக ஊழல் தடுப்பு சட்டத்தையும் மோடி அரசாங்கம் திருத்தியிருக்கிறது.

படிக்க:
உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?
♦ பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?

பதான்கோட், உரி மற்றும் புல்வாமா தாக்குதல்கள் எப்படி நடந்தன என்று கேட்பதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறதா? கொஞ்சம் எச்சரிக்கையுடன் நம்முடைய சுய தம்பட்ட சௌகிதார் இருந்திருந்தால் உரி தாக்குதலுக்கு பிறகான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தேவையிருந்திருக்காது.

சௌகிதாரிடம் கேட்பதற்கு ஏரளமான கேள்விகள் நம்மிடம் இருக்கின்றன. அதே நேரத்தில் அவரது இயலாமை குறித்த எண்ணிறந்த கதைகளும் நம் முன்னே இருக்கின்றன. ஆனால் இங்கே மிகவும் கேலிக்கூத்தானது என்னவென்றால் சௌகிதாரோடு சேர்ந்து அவரது கறை படிந்த சகாக்களும் கட்சி நபர்களும் கூட சௌகிதார் என்று சுய சுயதம்பட்டம் அடித்து கொண்டதுதான்.

சான்றாக திரிணாமுல் காங்கிரசில் இருந்து பா.ஜ.க-வில் சேர்ந்த முகுல் ராயை எடுத்துக் கொள்வோம். அவர் பிரபலமான சாரதா ஊழலில் முதன்மை குற்றவாளி. மேலும் சமீபத்தில் TMC கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கொலையில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவரும் தன்னை சௌகிதார் என்று ட்விட்டரில் சொல்லிக்கொள்கிறார். மேலும் பாலியல் குற்றங்களுக்காக சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜெ அக்பரும் கூட தம்மை சௌகிதார் என்றே அழைத்துக்கொள்கிறார் – காவலாளிகள் என்று சுய தம்மட்டம் அடித்து கொள்பவர்களின் யோக்கியதையை இவர்களின் கதைகள் நமக்கு பறைசாற்றுகின்றன அல்லவா.


கட்டுரையாளர் : Rohit Kumar
தமிழாக்கம் : சுகுமார்

நன்றி: The Wire


இதையும் பாருங்க :
எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க