தமிழர்கள் தரங்கெட்டவர்களா… ? – சீகன்பால்கு (1682-1719)

ண்பர்களே….

16, 17-ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு வந்த ஐரோப்பிய அறிஞர்களும் பாதிரியார்களும் தமிழ் மக்களை ஆப்பிரிக்க – அமெரிக்க செவ்விந்திய பழங்குடியினரைப் போன்று நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் என்றுதான் நினைத்தனர். ஆனால் தமிழ்மொழியையும் நம்முடைய திருக்குறள், தொல்காப்பியம், நன்னூல், சிந்தாமணி போன்ற நூல்களை அறிந்து கொண்ட பின்னர் ஐரோப்பியர்களாகிய நாம் நினைத்ததைப் போல தமிழர்கள் தரமற்ற காட்டுமிராண்டிகள் அல்லர் என்ற முடிவுக்கு வந்தனர்.

இப்படி அவர்களுடைய எண்ணத்தை மாற்றியது பழந்தமிழ் நூல்களும் தமிழ்நாட்டுக் கலைகளும்தான் என்பதை அவர்களால் எழுதப்பட்ட பல குறிப்புகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் ஒரு குறிப்பிடத்தகுந்த குறிப்பு தரங்கம்பாடியில் இருந்த சீகன்பால்கு-வால் எழுதப்பட்டது.

இந்தியாவிற்கு முதன்முதலாக வந்த பிராட்டஸ்டன்டு கிறிஸ்தவர் சீகன்பால்கு. பைபிளை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்தவரும் இவர்தான். இவர் அன்று தொகுத்து வைத்த பல தமிழ் நூல்களைப் பற்றிய குறிப்புகள் ஜெர்மனியில் இன்றும் உள்ளன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழர்களின் மேன்மையை உலகறிய செய்த தமிழ்மொழியையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் இன்றைய தமிழ் மக்கள் புறக்கணித்து வருவது மிகவும் இரங்கத்தக்கது. ஏனெனில் ஐரோப்பியர்களால் மனித மிருகங்கள் என்று கருதப்பட்ட தமிழர்களை மனிதர்கள்தான் என்று அடையாளம் காட்டியது நம்முடைய சிறப்புமிக்க தமிழ்நூல்கள்தான் என்பதை வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. அதாவது நம்மை சிந்திக்கும் மனிதர்களாக அடையாளம் காட்டிய தமிழும் தமிழ் நூல்களும் இன்று நம்மால் புறக்கணிக்கப்படுவது என்பது நாம் மனிதத் தன்மையை இழந்து கொண்டு வருகிறமோ என்ற ஐயத்தை சிந்திப்பவர்களுக்கு ஏற்படுத்தவில்லையா?

குறிப்பு :
சீகன்பால்கு எழுதிய குறிப்பை படமாகக் கொடுத்துள்ளேன். மற்றும் சீசன்பால்கு வாழ்க்கை வரலாறு பற்றிய சிறு நூலை நண்பர்கள் படிப்பதற்கு வசதியாக தரவிறக்கம் செய்து கொள்ளும் இணைப்பையும் கொடுத்துள்ளேன். 

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க