டைபெறவிருக்கிற மக்களவைத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்கும்படி நூற்றைம்பதுக்கும் அதிகமான அறிவியலாளர்கள் – ஆய்வாளர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். இவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “சமத்துவமின்மை, மிரட்டல், பாகுபாடு மற்றும் நியாயமற்ற நிலைமைக்கு எதிராக சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். மக்களை தாக்குகிறவர்கள், கும்பல் கொலை செய்பவர்களை மற்றும் இவற்றை ஊக்குவிப்பவர்களை குடிமக்கள் புறக்கணிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“வரவிருக்கிற தேர்தல் மிக முக்கியமான ஒன்று. இது நமது அரசியலமைப்பு நமக்கு கொடுத்திருக்கிற கலாச்சாரம், மொழி, சார்புநிலை, தனிமனித சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தக் கோருகிறது. இந்த உரிமைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியானதாக இருந்தாலும், பாகுபாடோ அல்லது வெறுப்போ இல்லாமல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் அது உறுதி செய்யப்படும்போதுதான் அது நிலைத்திருக்கும்”.

ஐ.ஐ.டி., இந்திய புள்ளியியல் கல்விக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்விக் கழகங்களைச் சேர்ந்த 154 அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

“பெண்கள், தலித்துகள், பழங்குடிகள், மத சிறுபான்மையினர், உடல் குறைபாடு உள்ளவர்கள் அல்லது ஏழைகளை சமூகத்திலிருந்து பிரித்து வைக்கும் அரசியலை ஆதரிக்கும், பயத்தை உருவாக்கும் அரசியலை நாம் ஆதரிக்க முடியாது. பன்முகத்தன்மையே நம்முடைய ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம்; ஒடுக்குமுறையும் உள்ளடக்காத தன்மையும் அதன் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கின்றன” என்கிற அந்த கூட்டறிக்கை, “அறிவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள், பகுத்தறிவாளர்கள் வேட்டையாடப்பட்டும், அச்சுறுத்தல், துன்புறுத்தல், தணிக்கைக்கு ஆட்பட்டும் சிறையில் அடைத்தல் அல்லது இன்னும் படுமோசமாக கொல்லப்படுகிற சூழலும் தோன்றியுள்ளது” எனவும் மோடி அரசு பதவி வந்த காலக்கட்டத்திலிருந்து நடக்கும் சம்பவங்களை கோடிட்டு காட்டியுள்ளது.

“அறிவியல் என்பதை சந்தேகத்தின் மூலம் ஜனநாயக அதிகாரமளித்தல், திறந்த மனதுடன் கேள்வி எழுப்புதல் எனக் கருதாமல் அதை ஒரு வணிக நிறுவனமாக கருதுகிற நாட்டில் உள்ள இளைஞர்களை எழுப்ப விரும்புகிறோம். பகுத்தறிவை அவதூறு செய்வதை நிறுத்துவதோடு, அறிவார்ந்த, ஆதாரத்தின் அடிப்படையிலான பொது உரையாடலையும் முன்னெடுக்க வேண்டும். அப்படி செய்யும்போதுதான், நாம் சிறந்த வளங்களை உருவாக்கி, வேலை, கல்வி, ஆய்வு போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.” என அறிவியலாளர்களின் கூட்டறிக்கை கூறுகிறது.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
அதிரவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையின் அட்டகாசமான முக்கிய அம்சங்கள் !

முன்னதாக, இதுபோன்ற கூட்டறிக்கையை திரைக்கலைஞர்களும், எழுத்தாளர்களும் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வினவு செய்திப் பிரிவு
அனிதா
நன்றி : ஸ்க்ரால்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க