னது ஐந்தாண்டுகால ஆட்சியில் நீதிமன்றம், புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட அத்தனை தன்னாட்சி அமைப்புகளையும் தனது கைப்பாவைகளாக மாற்றியது மோடி தலைமையிலான பாஜகவின் காவி பாசிச ஆட்சி. பாசிச திட்டங்களை தமது பெரும்பான்மை பலம் கொண்டு அமல்படுத்திக் கொண்டிருக்கும் பாஜக, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பிரயத்தனத்துடன் முழு மூச்சாக களம் இறங்கியிருக்கிறது.

ஐந்தாண்டுகாலத்தில் தோல்வியடைந்த தமது கொள்கைத் திட்டங்களை முன்வைத்து ஓட்டுக்கேட்க முடியாத நிலையில், ‘இந்து-இந்துத்துவம்’ என்ற பெரும்பான்மையினரை திரட்டும் விசப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கு உதவும் வகையில் எந்தவித விதிகளுக்கும் கட்டுப்படாமல், ‘நமோ டிவி’யைத் தொடங்கி வெறுப்பு பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறது பாசிச பாஜக.

படிக்க:
♦ மோடி வர்றார் … சொம்பை எடுத்து உள்ளே வை !
♦ கும்பல் கொலைகளை ஆதரிப்பவர்களை புறக்கணியுங்கள் : அறிவியலாளர்களின் அறைகூவல்

மோடி மற்றும் பாஜக தலைவர்களின் தேர்தல் பிரச்சார பேச்சுக்கள், தேர்தல் பேரணிகள் பற்றி மட்டுமே 24 மணி நேர ஒளிபரப்பை செய்யும் ‘நமோ டிவி’ கடந்த மார்ச் 31-ம் தேதி அனைத்து தொடங்கப்பட்டது. அனைத்து டீடிஎச் நெட்வொர்க்குகளில் இந்த சேனலை பார்க்கலாம். உள்ளூர் கேபிள் டிவி தொடங்கப்படுவதற்குக்கூட முறையாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஆட்சியில் இருக்கும் கட்சியால் தொடங்கப்பட்டு, ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்சி சேனல் இன்றுவரை உரிமம் பெறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

‘நமோ டிவி’ ஒளிபரப்புக்கான உரிமத்தை பெறவில்லை என தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகமே அறிவித்துவிட்டது. உரிமம் பெறுவதற்குக்கூட ‘நமோ டிவி’ விண்ணப்பிக்கவில்லை என்கிற தகவலையும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இல்லாத ஜனநாயகத்துக்கு இந்த தேர்தல் ஆணையம் ஒரு கேடா ?

ஒளிபரப்புத்துறையின் உரிமம் பெறாத நிலையில், இந்த சேனலை நடத்துவது யார்? இதன் உரிமையாளர்கள் பாதுகாப்பு சோதனைகளை முடித்தார்களா ? அல்லது தொலைக்காட்சிகளுக்கான வெளிநாட்டு முதலீட்டு வரம்புகளுடன் இந்த சேனல் தொடங்கப்பட்டிருக்கிறதா? என எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், இந்தத் தொலைக்காட்சி ஒரு நாட்டை ஆளும் பிரதமர் மற்றும் அவர் சார்ந்த கட்சியின் பிரச்சார ஊடகமாக உள்ளது.

நமோ டிவி உரிமம் பெறாமல் இயங்குகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த டிவியை ஒளிபரப்பும் டாடா ஸ்கை, இது ஒரு ஹிந்து சேனல் என ட்விட் செய்தது. பின், முன்னர் சொன்னது தவறு என்றும்,  அதுவொரு சிறப்பு சேனல் என்றும் சொன்னது. மேலதிக தகவலுக்குத் தமது  வாடிக்கையாளரான பாஜக-விடம் கேட்கவும் என சொன்னது.

பல டீடிஎச் நெட்வொர்க்குகளில் இசை, நடனம், ஆன்மீகம் போன்றவற்றிற்கென சிறப்பு சேனல்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வேறு வேறாக இருக்குமே தவிர, எல்லா டீடிஎச் நெட்வொர்குகளிலும் ஒரே சிறப்பு சேனல் வராது.  ஆனால், நமோ டிவியை அனைத்து நெட்வொர்க்குகளும் ‘சிறப்பு சேனலாக’ தருகின்றன. இது எந்த விதியின் கீழ் வரும்? என்கிற கேள்வியை பல இணைய ஊடகங்கள் எழுப்புகின்றன.

அது உண்மையென்றாலும்கூட நமோ டிவி, ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை ஒளிபரப்புகிறது. இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல். ஆனால், தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

படிக்க:
♦ அதிரவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையின் அட்டகாசமான முக்கிய அம்சங்கள் !
♦ மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்…

கடந்த 2014-ம் ஆண்டும் இணைய செய்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய ஒரு பகுதி பங்குகளை வெளிநாட்டுக்கு விற்க முனைந்தபோது, அரசின் ஒப்புதலை பெறவேண்டும் என அரசு வலியுறுத்தியது. இணைய ஊடகமே ஆனாலும் செய்தி மற்று நடப்பு விவகாரங்களை பேசுவதால், ஒளிபரப்புக்கான விதிகள் இதற்கும் பொருந்தும் என அரசு வாதாடியது. ஆனால், இத்தகைய விதிகள் எதுவும் நமோ டிவிக்கு இல்லை!

இதேபோன்று, 2012-ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் நமோ டிவி தொடங்கப்பட்டு, தேர்தல் விதி மீறல் காரணமாக ஒரே நாளில் முடக்கப்பட்டது. அனைத்து டிவி நெட்வொர்க்குகளிலும் இந்த சேனல் ஒளிப்பரப்பட்டு, மோடியின் அருமை பெருமைகளை பேசியது.  அந்த நமோ டிவியை குஜராத் அமைச்சர்களாக இருந்த இரண்டு பாஜக கட்சிக்காரர்களால் நிர்வகிக்கப்பட்டது. ஆனால், இப்போது ஒளிபரப்பை தொடங்கியிருக்கும் நமோ டிவியை நிர்வகிப்பது யார் என்பதை ஊடகங்கள் புலனாய்ந்து கொண்டிருக்கின்றன.

விரும்பிய சேனல்களை மட்டும் (இலவச சேனல்களையும்கூட விரும்பினால் மட்டுமே பார்க்க முடியும்) கட்டணம் கட்டி பார்க்கலாம் என டிராய் விதிமுறைகள் உள்ள நிலையில், அனைத்து நெட்வொர்க்குகளில் சந்தாதாரர்களிடம் நமோ டிவி கட்டாயமாக திணிக்கப்படுகிறது.

பாஜகவுக்கு ஜால்ரா தட்டுவதற்கென்றே ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ், ஜீ நியூஸ் போன்ற சேனல்கள் முழுநேரமாகவும் இன்னும் பல சேனல்கள் பகுதி நேரமாகவும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நிலையில், அதெல்லாம் போதாது என்று சுயமோக விளம்பர பித்து பிடித்து அலையும் மோடி தனது பெயரில் டிவி சேனல் வேண்டும் என நினைக்கிறார். இந்த தேர்தல் விளம்பர கணக்கு மோடியின் பெயரில் எழுதப்படுமா அல்லது பாஜகவின் பெயரில் எழுதப்படுமா அல்லது மக்களின் பணத்தில் எழுதப்படுமா என்பதை கண்டுபிடிக்க இயலாமல் மணலில் தலையை புதைத்து சிந்தித்துக்கொண்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்!

கலைமதி
கட்டுரை : கலைமதி
நன்றி: The Quint

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க