மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ

பட்டூரில் "ஏ 1 ஃபீப் ஸ்டால்" என்ற பெயரில் மாட்டுக்கறி கடை வைத்து நடத்தும் நண்பர் ஜாகீர் உசேனை சந்தித்தோம். வீடியோ நேர்காணல்!

சென்னை குன்றத்தூர் அருகே இருக்கும் பட்டூர் கிராமம் மாட்டுக்கறி கடைகளுக்கு பெயர் பெற்றது. அன்றாடம் நூற்றுக்கணக்கான மக்களும், பிரியாணி கடை வைத்து நடத்தும் வியாபாரிகளும் இங்கே வந்து கறி வாங்கிச் செல்கின்றனர். சுற்று வட்டார மக்களிடையே பட்டூர் மாட்டுக்கறி மிகவும் புகழ் வாய்ந்தது. எலும்பு இல்லாமல் ஒரு கிலோ ரூ. 250-க்கும், எலும்போடு ரூ. 240-க்கும் விற்கப்படுகிறது. சென்னை நகரில் மாட்டுக்கறி ஒரு கிலோ ரூ. 300-க்கு விற்கப்படுகிறது.

பட்டூரில் “ஏ 1 ஃபீப் ஸ்டால்” என்ற பெயரில் மாட்டுக்கறி கடை வைத்து நடத்தும் நண்பர் ஜாகீர் உசேனை சந்தித்தோம். மோடி அரசு ஏற்கெனவே மாட்டுக்கறிக்கு தடை கொண்டு வந்தது போல மீண்டும் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்?, சைவ உணவு சாப்பிடும் மோடி வாட்டசாட்டமாய் இருக்கும் போது கறி சாப்பிடும் நீங்கள் ஏன் ஒரு சொங்கி போல இருக்கிறீர்கள்?,  மாட்டுக்கறியை ஏன் விற்கிறீர்கள்?, ப்ளூகிராஸ் பிரச்சினைகள்.. என பல கேள்விகளுக்கு ஒரு தொழிலாளிக்கே உரிய நிதானத்தோடும் உறுதியோடும் பதிலளிக்கிறார் உசேன். பாருங்கள்! பகிருங்கள்!

8 மறுமொழிகள்

 1. பன்றி கறியும் மக்கள் உணவு தானுங்களே. அந்த பருப்பு எப்படி வேகனுங்க?

  • மாமா பேஷா கேட்டேள். ரொம்ப சிம்பிள்! செத்த இருங்கோ! வாயிலே கும்பகோணம் சீவல்! ஸ்த்த துப்பிட்டு வந்துடறனேன்…

   நோக்கு அக்கார வடிசல் அத்துப்படி இல்லையோ!…அதில பச்சரிசிக்கு பதில் பன்னிக்கறிய பிரஷ்ஷா போடுங்கோ! வெந்து இறக்கும் போது தூக்கலா கொஞ்சம் நெய் ஊத்தூங்கோ..பாருங்கோ…டேஸ்ட்ட.. நாக்கல ஜலம் ஊறும்…அப்புறம்,அடுத்தாத்து மாமியும் நம்மாத்து அடுப்பங்கரைக்கு வந்துறுவா!ரெசிபி கேட்பா..சமத்தா சொல்லூங்கோ..

   • அடே முட்டாள்!
    நான் அவாள் இல்லை. எலிக்கறி கூட சாப்பிட்டு உள்ளேன். மாட்டுக்கறிக்கு ஒரு சட்டம் பன்றி கறிக்கு ஒரு சட்டமா?

    • திரு பெரியசாமி என்ற கருப்புப் பாப்பார் அவர்களே…

     நான் மாட்டுக் கறி சாப்பிடுவேன். உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா ? பன்றிக் கறி நான் சாப்பிடுவேன் … முஸ்லீம்களுக்கு ஏதும் பிரச்சினை இல்லை. அவர்கள் பன்றிக் கறி சாப்பிட மாட்டார்கள். ஆனால் நீ சாப்பிடாதே என்று உங்களைப் போன்ற கருப்புப் பார்ப்பான்களைப் பார்த்து அவர்கள் சொல்வதில்லை.

     அடுத்தவன் என்ன சாப்பிடனும்னு நீங்கதான் முடிவெடுக்கணும்னு நினைக்குறது உங்களுக்கே அசிங்கமா தெரியலையா ?

     • யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தின்னலாம். மனிதக் கறி தவிர. கட்டுப்பாடு விதிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் உங்களுடைய அளவுகோல் இரட்டை அளவுகோல். பேடித்தனமான அளவுகோல். மாட்டுக்கறி மாதிரி பன்றிக் கறியும் ஊட்டச்சத்து வழங்க கூடிய ஒன்று. பொருளாதார ரீதியில் பன்றி இறைச்சி சிறந்தது. ஏனெனில் மூன்று கிலோ தீனி தின்னும் பன்றி ஒரு கிலோ இறைச்சியை உற்பத்தி செய்கிறது. வேறு எந்த விலங்கும் இவ்வளவு குறைவான தீனிக்கு இவ்வளவு அதிக அளவில் இறைச்சியை உற்பத்தி செய்வதில்லை. அதனால் தான் மக்கள் தொகை மிகுந்த சீனாவில் பன்றி இறைச்சி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பன்றி இறைச்சி மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்தது என சொல்லப்படுகிறது. ஆனால் அளவோடு உண்ண வேண்டும். மேலும் பன்றிகளின் உயிரை ஓரளவுக்கு மனிதாபிமான முறையிலேயே போக்க வேண்டும் .இஸ்லாமிய நாடுகளில் பன்றி கறிக்கு எதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் உங்களால் பன்றி இறைச்சி கடை நடத்த முடியுமா. இல்லை பன்றி இறைச்சி உன்னத்தான் முடியுமா. சும்மா கருப்பு பார்ப்பான் என்றெல்லாம் பில்டப் கொடுக்க கூடாது. இரட்டை அளவுகோல் என்பது பேடித்தனம்.

      • அப்போ பெரியசாமி ப்ளாக் க்ராஸ் பெல்ட்டுக்கு மாட்டுக்கறி சாப்பிடுறது பிரச்சினை இல்லை.

       முசுலீம் நாட்டுல பன்னிக்கறி தின்ன உடமாட்றானுங்கன்னுதான் பிரச்சினை .. கரெக்டா…

       அப்போ … நீங்களும் வினவு கூடதான் இருக்கீங்க … வினவும் அவங்க அமைப்பும் யாராவது பன்னிக்கறிய தின்னக்கூடாதுன்னு சொல்லி அடிதடில இறங்குனா, தடுத்தா போராடுவாங்க …

       இங்க யாராச்சும் மாட்டுக்கறிய பாப்பான் ஏன் திங்க மாட்றான்னு கேட்டோமா ? இல்லை பாப்பான் கண்டிப்பா மாட்டுக்கறிய திங்கணும்னு சொன்னாங்களா ?

       நீங்களா சொல்லிட்டு… நீங்களா பன்னிக்கறிக்கு தாவிட்டிங்களே பாஸ்…

       அதனால் நீங்க என்ன பண்ணுங்க .. உங்களுக்கு மாட்டுக்கறி பிடிச்சிருந்தா சாப்பிடுங்க … பன்னிக்கறி பிடிச்சிருந்தா சாப்பிடுங்க …

       மாட்டுக்கறி சாப்பிடும்போது RSS காரனோ, பன்னிக்கறி சாப்பிடும்போது TNTJ காரனோ தகராறு பண்ணினா உடனே ம.க.இ.க காரங்களுக்கு போன் பண்ணி சொல்லுங்க ..

       உங்கள் உணவு உரிமைக்கும் வினவுதான் போராடும் திரு பெரிசு அவர்களே …

 2. இந்த அயோக்கிய வினவு கூட்டங்கள் பாக்கிஸ்தான் அல்லது காஷ்மீருக்கு சென்று பன்றி கரி சாப்பிட்டால் தெரியும் இவர்களின் நிலை… உயிரோடு இருக்க இருக்க முடியாது …ஆனால் ஹிந்துக்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதால் வினவு (கிறிஸ்துவர்கள்) மற்றும் இஸ்லாமியர்களும் இவ்வாறு செயல்பட்டு ஹிந்துக்களை சீண்டி கொண்டே இருக்கிறார்கள், இது சரியல்ல நியாயமும் அல்ல, சமூக அமைதியை சீர் குலைப்பதற்கு பெயர் தான் முட்டாள்தனமான அயோக்கியத்தனமான கம்யூனிச புரட்சியோ என்னவோ.

  • என்ன மணி மாமா ? சவுக்கியமா ? பாத்து ரொம்பநாள் ஆச்சே…

   மாட்டுக்கறிய நான் சாப்பிட்டா உனக்கு என்னடா பிரச்சினைன்னு ஒருத்தரு கேக்குறாரு… அதுல உங்களுக்கு என்ன மாமா பிரச்சினை ?

   இந்தியாவில் இருந்தால், அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் தின்னது போல எல்லாரும் மாட்டுக்கறிய கண்டிப்பா சாப்பிடனும்னு இங்க யாரும் சொல்லலியே … அப்படிச் சொன்னா எங்கிட்ட சொல்லுங்க மாமா …. நான் வந்து என்னான்னு கேக்குறேன்…

   அப்புறம் அடுத்தவன் என்ன திங்கிறான்னு நோண்டிப் பாக்குறதும், அடுத்தவன் பேண்டத மோந்து பாக்குறதும் ஒன்னுதான்.. புரியுதா ?

   அடுத்தவன் என்ன திங்கனுங்கிறத நாந்தான் முடிவு பண்ணுவேன்னு நினைச்சுப் பாக்குறதுக்கே கூச்சப்படவேணாமா மணி மாமா ….

   ஆளுதான் வளர்ந்திருக்கீங்க … புரிஞ்சுக்க மாட்றீங்களே .. இத்தன வருசமா வினவு கட்டுரையோட தலைப்பை மட்டும்தான் பாத்துட்டு இருக்கீங்களோ ? விவாதிக்கிறதுக்காகவாவது கட்டுரைய கொஞ்சம் படிச்சிருந்தா , கொஞ்சம் அறிவு வளர்ந்திருக்குமே…

   அடப் போ மாமா…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க