த்தகைய கீழ்த்தர எண்ணம் கொண்ட ஒருவரை கிட்டத்தட்ட 130 கோடி மக்கட்தொகை கொண்ட இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை மோடியின் தேர்தல் கால நடவடிக்கைகளும், பேச்சுக்களும் பதிவுசெய்து வருகின்றன. எத்தனையோரு துன்பமான நிகழ்விது.

1. வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என அத்தனை அமைப்புகளையும் பாஜகவின் ஒரு கிளையாக, ஆர்.எஸ்.எஸ். சாகாவாக மாற்றி எதிர்கட்சிகளை முடக்க முயற்சித்து பாஜகவிற்கு தேர்தல் அறுவடைக்காக பயன்படுத்துவதோடு நிற்கவில்லை.

2. சாதி, மத மோதல்களை வளர்க்க அத்தனை வக்கிரமான பேச்சுக்களையும் அனுமதிப்பதோடு தானே அத்தகைய வன்மமான பேச்சுக்களைப் பேசியது.

3. வாரணாசி தேர்தல் விண்ணப்பம் தாக்கல் செய்த நாளில் காவியுடையணிந்து நடத்திய அத்தனை மத நாடகங்களும், தான் ஒரு மதத்தின் பிரதிநிதி மட்டுமே என்று வெளிப்படையாக பிரகடனம் செய்த நிகழ்வு.

படிக்க :
♦ மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?
♦ மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”

அதோடு நின்றதா என்றால் இல்லை. மேற்கு வங்காள தேர்தலில் அருவருக்கத்தக்க விதமாக சனநாயகத்தை கொலை செய்கிற, குதிரை பேரத்தை வெளிப்படையாக அறிவிக்கிற வகையில் உள்ளது மோடியின் பேச்சு:

//உங்கள் எம்.எம்.எல்.ஏ.-க்கள் உங்களை விட்டு விலகப்போகிறார்கள். தீதி அவர்களே, இன்றைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார்கள். எனவே தேர்தல் முடிவுக்குப் பின் அவர்கள் பாஜக-வில் இணைவார்கள்// – மோடியின் தேர்தல்கால உரை.

எத்தகைய ஒரு குரூரமான பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளனர்.

நன்றி : முகநூலில் – Thiru Yo

1 மறுமொழி

  1. மோடி லட்சுமண் ரேகாவைத் தாண்டவில்லை என்கிறது தேர்தல் “கமிஷண்” மண்டி.
    உண்மைதானே. எல்லா கட்சிகளும் லட்சுமண் ரேக்கா வட்டத்துக்குள் இருக்கிறார்கள், இல்லை அடைக்கப்பட்டுள்ளார்கள்…. மோடி வெளியில் இருக்கிறார்…அவர் எனன கிருக்கனா கோட்டைத் தாண்ட?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க