தேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா | சே. வாஞ்சிநாதன்

நாட்டின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்படுவதையும்; நினைத்துப் பார்க்கவியலாத அளவுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருப்பதையும் எந்தச் சட்டம் தடுத்து நிறுத்தப்போகிறது ?

நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM & FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமைமுறையைத் தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை (GATT) தூக்கியெறிவோம்! என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் 133-வது, மேநாள் பேரணி – பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்  பங்கேற்று உரையாற்றினர். அவர் தனது உரையில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோன்று எவ்வித உரிமைகளும் அற்ற நிலைக்கு தொழிலாளி வர்க்கம் தள்ளப்பட்டிருப்பதையும்; தொழிலாளர்கள் என்றில்லை விவசாயிகள், நெசவாளிகள், சிறுதொழில் செய்வோர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்தார். நினைத்துப் பார்க்கவியலாத அளவுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், இந்த ஏற்றத்தாழ்வுகளை எந்தச் சட்டத்தைக் கொண்டு நீக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் அரசியலில் முன்னூறுக்கும் ஐநூறுக்கும் ஜனநாயகம் விலை பேசப்படுவதையும் எள்ளி நகையாடியதோடு, தேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா? என்றக் கேள்வியையும் முன்வைத்தார் அவர்.

அவரது முழுமையான உரையைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க