வைகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் போட்டு பிரபலமானார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு. அன்று முதல் தெர்மோகோல் ராஜு என்று தமிழகத்தால் அன்போடு அழைக்கப்படுகிறார். ஆனால் மோடியோ உலகப் புகழ் பெற்றுவிட்டார்.

1988-லேயே டிஜிட்டல் காமரா பயன்படுத்தியது, மின்னஞ்சல் அனுப்பியது போக, இந்த ஆண்டு நடந்த பாலகோட் தாக்குதலின் போது ஹாலிவுட் படங்கள் போல மோடிதான் தாக்குதலுக்கு தலைமை தாங்கியதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எந்த நேரம் விமானங்களை அனுப்பலாம் என்று தளபதிகள் தலையை பிய்த்துக் கொண்ட போது, மேகங்கள் சூழ்ந்த அந்த நேரத்தில் அனுப்பினால் பாகிஸ்தான் ரேடார்களை ஏமாற்றி குண்டு போட்டுவிட்டு திரும்பி விடலாம் என்று சொல்லியிருக்கிறார் மோடி. உடனே விமானங்களும் மேகங்களில் மறைவாக பறந்து சென்று குண்டுகளைப் போட்டுவிட்டு திரும்பி விட்டன.

படிக்க:
♦ செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !
♦ ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் !

மேகங்கள் ரேடாரை மறைத்து விடுமா என்றுஅறிவியல் உலகமே அதிர்ச்சியடைந்தாலும் மீம்கள் உலகம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய கேள்வி :

இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி யார் ?

  • செல்லூர் ராஜு
  • நரேந்திர மோடி

டிவிட்டரில் :

யூ-டியூபில் இங்கு அழுத்தி வாக்களிப்பீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க