பாஜகவினரின் கல்வி தகுதியை அவர்களுடைய பேச்சுக்களே திட்டவட்டமாக சொல்லிவிடும் என்றாலும், பெறாத பட்டத்தை பெற்றதாக கூறிக்கொண்டு வசமாக சிக்கிக்கொள்வதில் அவர்களுக்கு ஈடு அவர்களே. முன்னதாக, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியின் ‘யேல்’ பட்டம், டெல்லி பல்கலைக்கழக பட்டப்படிப்பு குறித்த புரட்டுகள்  சமூக ஊடகங்களில் சிரிப்பாய் சிரித்தன. இப்போது மோடி வாங்கிய ‘அரசியல் அறிவியல்’ பட்டப்படிப்பு குறித்த செய்திகள் சந்தி சிரிக்கின்றன.

குஜராத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜெயந்த் பட்டேல், “நரேந்திர மோடி தனது பட்டப்படிப்பில் படித்ததாக கூறியிருக்கும் பாடங்கள், அப்போது பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே இல்லை” என்கிறார். இதுகுறித்து தனது முகநூலில் எழுதியுள்ள பேராசிரியர், மோடி பட்டம் வாங்கியதாக கூறும் காலக்கட்டத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.

மோடி படித்து ‘வாங்கிய’ பட்டம் (!)

மோடி தனது எம்.ஏ.  அரசியல் அறிவியல் பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில் அரசியல் அறிவியல் பாடத்தில் 62 மதிப்பெண்ணும், ஐரோப்பிய மற்றும் சமூக அரசியல் சிந்தனைகள் என்ற பாடத்தில் 62 மதிப்பெண்ணும், நவீன இந்தியா/அரசியல் பகுப்பாய்வு என்ற பாடத்தில் 69 மதிப்பெண்ணும், அரசியல் உளவியல் பாடத்தில் 67 மதிப்பெண்ணும் பெற்றதாக பிடிஐ செய்தி வெளியிட்டிருந்தது. இதனை சுட்டிக்காட்டி எழுதியிருக்கும் பேராசிரியர் ஜெயந்த பட்டேல், “என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் பகுதி-2 ல் உள் அல்லது வெளி மாணவருக்கு அப்படியான பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படவில்லை” என்கிறார். 1969 முதல் 1983-ஆம் ஆண்டு வரை குஜராத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார் இவர்.

ஆனாலும் மாண்புமிகு பிரதமரின் மானத்தைக் காப்பாற்றும் வகையில் குஜராத் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மகேஷ் பட்டேல் இதை மறுக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்பட்டது என்றும் அப்போதைய பாடத்திட்டத்தில் சான்றிதழில் குறிப்பிட்டிருக்கும் படிப்புகள் சொல்லித்தரப்பட்டன என்றும் கூறுகிறார்.

சர்ச்சை கிளம்பியிருக்கும் நிலையில், மோடியின் பட்டப்படிப்பு குறித்த தகவலை வெளியிடும்படி டெல்லி கல்வி துறை அமைச்சர் மனீஷ் சிசோடியா, டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தருக்கு எழுதியிருக்கிறார்.  “டெல்லி பல்கலைக்கழகம் மோடியின் பட்டத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும். பல பல்கலைக்கழகங்கள் பிரதமர் தங்கள் கல்லுரியில் படித்தவர் என சொல்லிக்கொள்வதில் பெருமையடைவார்கள். எனவே, பல்கலைக்கழக இணையதளத்தில் மோடி பட்டத்தை பதிவேற்ற வேண்டும்” என அந்தக் கடித்தத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

படிக்க:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
ஏப்ரல் மாதத்தில் மோடியை 722 மணி நேரம் ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் !

ஆம் ஆத்மி, மோடியின் பட்டப்படிப்பு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. 1978-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் மோடியின் பெயரைக்கொண்ட ஒருவர்தான் பட்டம் பெற்றிருக்கிறாரே அன்றி, பிரதமர் மோடி பட்டத்தை பெறவில்லை என ஆம் ஆத்மி சொல்கிறது. மோடி பெற்றதாக சொல்லப்படும் டெல்லி பல்கலைக்கழக பட்டமும், குஜராத் பல்கலைக்கழக பட்டமும் புரட்டு என்கிறது இக்கட்சி.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி பல்கலைக்கழகத்துக்கு கடந்த வாரம் எழுதிய கடிதத்தில், மோடியின் பட்டம் குறித்த தகவலை இணையதளத்தில் வெளியிட்டு, பட்டப்படிப்பு சான்றிதழ்கள் ‘பாதுகாப்பாக’ இருப்பதை உறுதிசெய்யுமாறு எழுதியிருந்தார்.  ஆனாலும் பொய் – புரட்டுகளாலே ஆட்சியைப் பிடித்த பாஜக கும்பல் அதை மழுப்புகிறது.

கலைமதி
நன்றி: ஸ்க்ரால்


தவறாமல் பாருங்கள் …

புருடா மன்னன் – Cloudy மோடி | கலாய் காணொளி