ல்கார் பரிஷத் மாநாடு முதல் சமீபத்திய டெல்லி கலவரம் வரை அனைத்து சந்தர்ப்பங்களையும் சதித்தனமான பொய் வழக்குகள் மூலம் மக்களுக்காக குரல் கொடுக்கும் அறிவுத்துறையினரை முடக்கவும், சிறையிலடைக்கவும் பயன்படுத்திவருகிறது மோடி அரசு. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் எல்கர் பரிஷத் மாநாடு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹனிபாபு கைது செய்யப்பட்டிருகிறார். அதே போல், டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் அபூர்வானந்தை விசாரணைக்கு உட்படுத்தி மிரட்டியிருக்கிறது டெல்லி போலீசு.

டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹனி பாபுவை எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 28 அன்று கைது செய்தது தேசிய பாதுகாப்பு முகமை (NIA).  ஆகஸ்ட் 8-ம் தேதியோடு என்.ஐ.ஏ காவல் முடிவடைந்த நிலையில், தற்போது அவரை ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹனிபாபு

பேராசிரியர் ஹனிபாபு மீது மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், பேராசிரியர் சாய்பாபாவை ஆதரித்து அவருக்காக நிதி திரட்டியதாகவும் குற்றம்சாட்டி அவரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது தேசிய பாதுகாப்பு முகமை. ஜூலை 28-ம் தேதி கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹனிபாபுவை ஆகஸ்ட் 4 வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டது என்.ஐ.ஏ. அதன் பின்னர், கடந்த ஆகஸ்ட் 8 வரை என்.ஐ.ஏ காவலை நீட்டித்துக் கொடுத்தது சிறப்பு நீதிமன்றம்.

என்.ஐ.ஏ விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில் அவரை ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாரு உத்தரவிட்டுள்ளது. என்.ஐ.ஏ. விசாரணையின் போது ஹனிபாபுவிடம் அவரது செயல்பாடுகளுக்கு அவருடன் பணிபுரிபவர்கள், அவரது மாணவர்கள் என யாரேனும் இதைச் செய்கிறார்களா என்ற விதத்திலேயே விசாரித்திருக்கிறது போலீசு.

சிறப்பு நீதிமன்றத்தில் பேராசிரிய ஹனிபாபுவை நேர்நிறுத்திய என்.ஐ.ஏ., அவர் பீமா கொரேகான் வழக்கில் சம்பந்தப்பட்டு சிறையில் இருக்கும் பலரையும் தொடர்பு கொண்டுள்ளதாகவும், மாவோயிஸ்ட்டுகளையும், பேராசிரியர் சாய்பாபாவையும் சிறையில் இருந்து விடுவிக்க நிதியாதாரத்தை திரட்டியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

படிக்க:
மக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் ! ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !
பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

ஹனிபாபுவின் கணிணியைக் கைப்பற்றிச் சென்ற போலீசு, அந்தக் கணிணியின்  வன்தகட்டில் உள்ள ஒரு பிரிவில் (partition) பிப்ரவரி – ஏப்ரல் 2019 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு அதில் மாவோயிஸ்ட்டுகள் சம்பந்தப்பட்ட 62 கோப்புகள் இருந்ததாகவும் கூறி அது குறித்த விவரங்களைக் கேட்டுள்ளது. ஆனால் அப்படி ஒரு வன்தகட்டுப் பிரிவை (Hard disk partition) தாம் ஏற்படுத்தவேயில்லை என்று கூறி மறுத்திருக்கிறார் ஹனிபாபு. ஏற்கெனவே பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர் கான்சால்வேஸ் உள்ளிட்டவர்களின் கைப்பற்றப்பட்ட கணிணிக்குள் இது போன்ற மோவோயிஸ்ட் தொடர்பான கோப்புகள் என்.ஐ.ஏ விசாரணையின் போது திடீர் திடீரென முளைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. சமூகச் செயற்பாட்டாளர்களை முடக்குவதற்கு ஒரு முகாந்திரத்தை ஏற்படுத்த இத்தகைய கிரிமினல்தனமான வேலைகளைச் செய்ய என்றுமே என்.ஐ.ஏ தயங்கியதில்லை.

பேராசிரியர் அபூர்வானந்த்

இதே போல கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், தி வயர் இணையதளத்தில் தொடர்ந்து இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்து எழுதிவருபவருமான பேராசிரியர் அபூர்வானந்த்-ஐ விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது டெல்லி போலீசு. கடந்த பிப்ரவரி மாதம் இந்துத்துவக் கும்பலால் நடத்தப்பட்ட டெல்லி கலவரத்தில் அவருக்கு பங்கிருப்பதாகக் கூறி அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது டெல்லி போலீசு.

விசாரணைக்கு பின்னர், தமது மொபைலை தங்களது விசாரணைக்குத் தேவை என்று கூறி டெல்லி போலீசு பறித்துக் கொண்டதாகக் கூறியுள்ளார் அபூர்வானாந்த்.  இந்த விசாரணை சுமார் 5 மணிநேரம் நீண்டிருக்கிறது.

இது குறித்துப் பேசிய பேராசிரியர் அபூர்வானந்த், சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி ஆகியவற்றிற்கு எதிராக போராடுபவர்களையும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் குற்றவாளியாக்கவும், துன்புறுத்தவும் கூடாது என்று கூறினார்.

படிக்க:
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !! தோழர் ராஜூ உரை
ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !

பேராசிரியர் அபூர்வானந்த் கடந்த மே மாதம், தி வயர் இணையதளத்தில் எழுதிய ஒரு கட்டுரையில்,  சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டக்காரர்கள்தான் வட கிழக்கு டில்லியில் வன்முறையை தூண்டி விட்டதாகக் கூறும் போலீசின் கருத்தாக்கம், அவர்களது அரசியல் எஜமானர்களால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என எழுதினார். மேலும், இந்த திட்டத்தை ஒரு கதையாக உருவாக்கி, அந்த திரைக்கதைக்கு உகந்த கதாபாத்திரங்களைக் கண்டுபிடித்து நீதிமன்றங்களையும், பொதுமக்களையும் நம்ப வைக்க டெல்லி போலீசு முயற்சிப்பதாக எழுதியிருந்தார்.

மோடி அரசாங்கத்தினை விமர்சிக்கும், சில அறிவுத்துறையினரும் செயல்பாட்டாளர்களும் விசாரணைக்காக டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவால் சம்மன் அனுப்பப்படலாம் எனத் தெரியவருவதாக தி வயர் இணையதளம் தெரிவிக்கிறது. குறிப்பாக “டெல்லி போராட்ட ஆதரவுக் குழு” என்ற வாட்சப் குழுவில் இருப்பவர்களின் பங்கு குறித்து விசாரித்து வருவதாகக் கூறுகிறது.

காவி கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட டெல்லி கலவரம்.

குறிப்பாக “டெல்லி போராட்ட ஆதரவுக் குழு” என்ற வாட்சப் குழுவில் பிரபல படத் தயாரிப்பாளர்களான ராகுல் ராய், சபா திவான், அரசிய செயல்பாட்டாளர்களான கவிதா கிருஷ்ணன், யோகேந்திர யாதவ், அன்னி ராஜ, சமூகச் செயற்பாட்டாளர்களான ஹர்ஷ் மந்தெர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். பேராசிரியர் அபூர்வானந்த் அந்தக் குழுவில் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், வாட்சப் குழுவில் உறுப்பினராக  இருந்தாலே முதல் தகவல் அறிக்கையில் பெயரைச் சேர்த்து விசாரிக்கும் டெல்லி போலீசு, வன்முறையைத் தூண்டும் வகையில் வெளிப்படையாகவே பேசிய  கபில் மிஸ்ரா மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை கூட பதியவில்லை.

ஆனால் சொந்த நாட்டில் தங்களது குடியுரிமைக்காகப் போராடிய மக்களையும் அவர்களுக்கு ஆதரவாக நின்றவர்களையும், குரல் கொடுத்தவர்களையும் தொடர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்து வருகிறதுய். குறிப்பாக பல மாணவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை ஊபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அந்த வாட்சப் குழுமத்தில் நடந்த விவாதங்களைச் சதியாக சித்தரிக்கும் வகையிலேயே போலீசு ஆவணங்களும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

பீமா கொரேகான் வழக்கைப் போலவே டெல்லி கலவர வழக்கும் கொண்டு செல்லப்படுகிறது. மத்திய அரசாங்கத்தை விமர்சிப்பவர்களையும்  செயற்பாட்டாளர்களையும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்ய இந்த வழக்கை பயன்படுத்துகின்றன, என்.ஐ.ஏ உள்ளிட்ட அரசின் ஒடுக்குமுறைக் கருவிகள். குறிப்பாக தற்போதைய ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி, எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் மக்களுக்காகக் குரல்கொடுக்கும் அறிவுத்துறையினரை முடக்கிவருகிறது மோடி அரசு. அரசின் சுரண்டலில் இருந்து நமது உரிமைகளைப் பாதுகாக்கக் குரல் கொடுத்தவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை அல்லவா ?

நந்தன்

செய்தி ஆதாரம் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க