ஓட்டுப் போடலங்குற கோவத்துல மோடி எதுனாலும் பண்ணலாம் – மக்கள் கருத்து | காணொளி

இன்னும் ஐந்தாண்டுகால பாஜக ஆட்சி என்ன அட்டூழியங்களை நடத்துமோ ? என்ற அச்சத்தையும் மக்கள் தங்கள் கருத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர். பாருங்கள்.. பகிருங்கள்..

மீண்டும் மோடி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வந்தது குறித்தும், தமிழகத்தில் பாஜக வரமுடியாமல் போனதன் காரணம் குறித்தும் தமிழக மக்கள் பதிலளிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது இன்னும் ஐந்தாண்டுகால பாஜக ஆட்சி என்ன அட்டூழியங்களை நடத்துமோ ? என்ற அச்சத்தையும் சென்னையில் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தங்கள் கருத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர்.

பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு களச் செய்தியாளர்கள்

3 மறுமொழிகள்

  1. தமிழ்நாட்டை நிச்சயம் பழிவாங்குவார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி செய்தது மாதிரி வெளிப்படையாக பழிவாங்காமல் மிகவும் நுணுக்கமாக பழி தீர்ப்பார்கள். அதன் மூலம் தமிழக மக்களை தங்களை நோக்கி திரும்ப வைத்து இங்கே வலுவாக காலூன்ற முயற்சிப்பார்கள்.

  2. பாஜகவால் தமிழ் நாட்டில் மத பிரச்சினையை தூண்டி விட்டு வலுவாக கால் ஊன்ற முடியாது. ஏனெனில் இங்கே எண்ணிக்கை அளவில் சிறுபான்மையினர் மக்கள் தொகை குறைவு. கோயம்புத்தூர் கன்னியாகுமரி மாதிரியான ஒரு சில இடங்களில் மட்டும் மத பிரச்சினையை தூண்டிவிட்டு வலுவாக காலூன்ற முடியும். ஊன்றியும் விட்டார்கள். ஆனால் ஒட்டுமொத்த மாநிலத்தையே கைப்பற்ற வேண்டும் எனில் சாதிகள் சார்ந்த கணக்கு வழக்குகள் மூலம் ஒரு சமன்பாட்டை உருவாக்க வேண்டும். அதை உத்தரப்பிரதேசத்தில் செய்தது மாதிரி இங்கேயும் செய்வார்கள். அதற்கு முன்னர் அதிமுகவை இறுகக் கட்டித்தழுவி அழித்துவிடுவார்கள். இல்லாவிட்டால் அதிமுகவை இப்போது இருப்பது மாதிரி தங்களின் உள்ளூர் ஏஜெண்டாக இன்னும் வலுவாக மாற்றிவிடுவார்கள்.

  3. மறுபடியும் மக்களை முட்டாளாக்க வினவு கூட்டம் கிளம்பிவிட்டது ….

    மேற்கு வங்காளத்தில் செய்ததுபோல் , எதாவது நல்லது செய்து பிஜேபி தமிழகத்தில் பார்ப்பார்கள் ….அந்த நல்லது தமிழகத்திலே நடக்கலாமல் பார்த்து கொள்ள வினவு கூட்டம் இப்பவே தயார் ஆகிறார்கள் …இந்து (சைவ வைணவ) அல்லாதவர்கள் எதை செய்தலும் அது நல்லது மீதி அனைத்தும் எல்லோரையும் அழிக்கிறார்கள் என்பார்கள் ….

    வினவு இந்து (சைவ வைணவ) குறைகூற மட்டுமே ….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க