31.05.2022
ஆயிரங்காலம் அடிமை என்றாயே
பறையன் என்று இழித்துரைக்க யாரடா நாயே!
பத்திரிகை செய்தி
ரேந்திர மோடி பிரதமரானதன் எட்டாவது ஆண்டையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஒரு விளம்பரம் வெளியிட்டு இருந்தார். அதில், இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி, நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கையை நோக்கி என பல்வேறு உவமைகளை காட்டிய அவர், பறையாவிலிருந்து விஸ்வ குருவை நோக்கி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இழிவான நிலையிலிருந்து மேம்பட்ட நிலையை நோக்கி என்பதே அந்த விளம்பரத்தின் உள்ளடக்கம். அதன்படி, பறையா என்ற இழிவான நிலைமையிலிருந்து விஸ்வ குரு என்ற மேம்பட்ட நிலையை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருப்பதாகவே அவர் கூறியுள்ளார்.
இந்த நாட்டின் உழைக்கும் மக்களே உயர்ந்தவர்கள்! சாதிய மத – மோதல்களைத் தூண்டிவிட்டு நரித்தனமாக ஆட்சியை பிடித்து பாசிச ஆட்சியை நிறுவும் விஸ்வ குருக்கள் ஒருபோதும் உயர்ந்தவர்கள் அல்ல!
படிக்க :
♦ குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக : காவி பாசிஸ்டுகளை விரட்டியடிப்போம் ! | வீடியோ
♦ குற்றவியல் நடைமுறை (திருத்த) மசோதா 2022 : ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் பாசிசக் கொடுங்கரங்கள்!
இப்படி பச்சையாக சாதிவெறியைக்கக்கும் ஒரு அரசியல் கட்சி தலைவனை இதுவரை தமிழ்நாடு கண்டதில்லை. ஆனாலும் பா.ஜ.க-வின் அண்ணாமலைக்கு எதிராக தமிழ்நாடு கிளர்ந்தெழவில்லை. இது குறித்து பத்திரிகையாளர்கள் மற்றும் பலர் கேள்வி எழுப்பிய பின்னர், பறையா என்பதற்கு அகராதியை தேடிப்பாருங்கள் நக்கலாக பதில் அளிக்கிறார் அண்ணாமலை.
ஒரு வார்த்தை பொதுவாக எந்த அர்த்தத்தில் தொடங்கப்படுகிறதோ அதை அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்ளப்படும்.
தாழ்த்தப்பட்ட மக்களை இவ்வளவு கேவலமாக பேசிவிட்டு ஒருவன் தமிழகத்தில் நடமாட முடிகிறது என்றால் அதுவே தமிழ்நாட்டின் மிகப்பெரிய இழிவு.
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசிய அண்ணாமலையை இன்னமும் தமிழ்நாடு போலீசார் கைது செய்யாமல் இருப்பது என்பதே தமிழகத்தின் மிகப்பெரிய அவமானம் ஆகும்.
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு செய்த அண்ணாமலை, தான் செய்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அண்ணாமலை செல்லும் இடங்களிலெல்லாம் விளக்குமாறும் செருப்பும்தான் வரவேற்பு பொருட்களாக இருக்க வேண்டும்.
ஆகவே, தமிழக அரசு அண்ணாமலையே உடனே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்துவதுடன் சாதிய – மத மோதல்களை தூண்டிவிடும் அண்ணாமலையை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க