ல்வேறு வகைகளில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டு வரும் இந்தித் திணிப்பை, தற்போது பகிரங்கமாகவே பள்ளிகளில் கட்டாயமாக்க முடிவு செய்திருக்கிறது மோடி அரசு. இது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என்று சப்பைக்கட்டு கட்டினாலும் பாஜக அரசின் நோக்கம் திணிப்புதான். பாஜக-வின் அடிமைகளான அதிமுக அரசு தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்று முனகினாலும் எட்டுவழிச்சாலை, ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் அனைத்திலும் இவர்கள் பாஜக-வின் பாதந்தாங்கிகளாக ஆதரிக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் தாய்மொழி வழிக்கல்வி என்பது அருகி வருகிறது. உலகெங்கிலும் குழந்தைகள் தாய்மொழியில் கற்கும்போது நம் குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வியில் கற்கின்றனர். இந்தித் திணிப்பை தமிழகம் கடுமையாக எதிர்க்கிறது என்றாலும் தமிழ்வழிக் கல்வியை எந்த அளவுக்கு ஆதரிக்கிறது என்பது கேள்விக்குறி.

படிக்க :
♦ கல்வித்துறை முழுவதும் தனியார்மயமாக்கும் சதி | சிவக்குமார் | கருணானந்தம் | அரசு | காணொளி
♦ மோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து

இன்றைக்கு நாம் எடுக்க இருக்கும் கருத்துக் கணிப்பில் எத்தனை பேர் தமிழ்வழிக் கல்வியிலும், அரசு பள்ளிகளிலும் படிக்க வைக்கின்றனர் என்பதை அறிய விரும்புகிறோம். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்க வைப்பதை அரசு பள்ளி என்ற விடையிலேயே தெரிவிக்கலாம். தற்போது குழந்தை இல்லாதோர் எதிர்காலத்தில் என்ன பள்ளியில் படிக்க வைக்க விரும்புகிறீர்கள் என்பதை வைத்து விடையளிக்கலாம்.

உங்கள் குழந்தைகள் எந்தப் பள்ளியில் என்ன மொழியில் கற்கிறார்கள்?

♣ அரசுபள்ளியில் தமிழ்வழிக் கல்வி
♣ அரசு பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி
♣ தனியார் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி
♣ தனியார் பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி

கருத்துக்கணிப்பில் பங்கேற்பீர்

டிவிட்டரில் வாக்களிக்க :

யூடியூபில் வாக்களிக்க இங்கே அழுத்தவும்